Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM

97 - குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. திருச்செங்கோடு சட்டப்பேரவையின் ஒரு பகுதியாக குமாரபாளையம் இருந்தது. 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது புதிய தொகுதியாக அறிவிக்கப்பட்டது. குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இரு நகராட்சி, ஆலாம்பாளையம் பேரூராட்சி, பள்ளிபாளையம், குமாரபாளையம் என, இரு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

விசைத்தறி, நூல்களுக்கு சாயம் ஏற்றுதல், ஜவுளி உற்பத்தி போன்றவை பிரதான தொழிலாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

தொகுதியின் முக்கிய பிரச்சினை சாயக் கழிவு நீர். பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் ஏராளமான சாய ஆலைகள் உள்ளன. அதில் அனுமதி பெறாத சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து விடப்படுகிறது.

அதனால் காவிரி ஆற்று நீர் மற்றும் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பலனாக பொது சுத்திரிகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. எனினும், இதுவரை பொது சுத்திரிகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை.

அதுபோல் குமாரபாளையம் தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. எனினும், பள்ளிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆனால், குமாரபாளையத்தில் தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டதால், பள்ளிபாளையம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

புதிதாக உருவான தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் பி. தங்கமணியும், திமுக சார்பில் ஜி. செல்வராஜ் போட்டியிட்டனர். அதில் தங்கமணி வெற்றி பெற்றார். அந்த வகையில் புதிதாக உருவாகிய தொகுதியை முதலில் அதிமுக தன் வசப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பி. தங்கமணி

அதிமுக

2

பி. யுவராஜ்

திமுக

3

பி. ஏ. மாதேஸ்வரன்

தேமுதிக

4

செ. மூர்த்தி

பாமக

5

கே. ஈஸ்வரன்

பாஜக

6

க. அருண்குமார்

நாம் தமிழர்

7

ஆர். பொன்னுசாமி

கொமதேக



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருச்செங்கோடு தாலுகா (பகுதி)

குமாரப்பாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம், பல்லக்காபாளையம், சௌதாபுரம், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், ஆனங்கூர், எலந்தகுட்டை, கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம், பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், ஒடப்பள்ளி அக்ரஹாரம், காடச்சநல்லூர், பாப்பம்பாளையம் மற்றும் கொக்கராயன்பேட்டை கிராமங்கள்.

குமாரபாளையம் (நகராட்சி), படைவீடு (பேரூராட்சி), பள்ளிப்பாளையம் (பேரூராட்சி) மற்றும் புதுப்பாளையம்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,13,888

பெண்

1,17,063

மூன்றாம் பாலினத்தவர்

22

மொத்த வாக்காளர்கள்

2,30,973

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P. தங்கமணி

அ.தி.மு.க

91077

2

G. செல்வராஜூ

தி.மு.க

64190

3

K.S. பாலமுருகன்

பி.ஜே.பி

1600

4

S. தங்கமணி

சுயேச்சை

1179

5

K. வேணுகோபால்

சுயேச்சை

1126

6

C. முருகேசன்

சுயேச்சை

571

7

வெங்கடாச்சலம்

சி.பி.ஐ

338

8

R. செந்தில்குமார்

ஐ.ஜே.கே

252

9

V. லிங்கப்பன்

யு.எம்.கே

210

10

L. பழனியப்பன்

சுயேச்சை

194

11

P. செல்வராஜ்

சுயேச்சை

122

12

C. சண்முகம்

சுயேச்சை

96

160955

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x