Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் பரமத்தி வேலூர் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பரமத்தி வேலூர் தொகுதி, கபிலர்மலை சட்டப்பேரவை தொகுதி என்ற பெயரில் இருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின் கபிலர்மலை தொகுதி, பரமத்தி வேலூார் சட்டப்பேரவை தொகுதி என, பெயர் மாற்றம் பெற்றது. பரமத்தி, பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் ஆகிய பேரூராட்சிகள், பரமத்தி, கபிலர்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
காவிரிக் கரையை ஒட்டி அமைந்துள்ள இத்தொகுதியில் விவசாயம், வெல்லம் தயாரிப்பு போன்றவை முக்கிய தொழிலாகும். விவசாயத்தில் தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலை சாகுபடி ஆகிய முக்கிய தொழிலாகும். அங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கரும்பு விவசாயத்தை மையப்படுத்தி மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. வெற்றிலை சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுவதை மையப்படுத்தி வெற்றிலை ஆராய்ச்சி மையம் கொண்டுவர வேண்டும் என்பது அத்தொகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். காவிரி ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தொகுதியில் இந்து மதப்பிரிவு மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதுபோல் கிறிஸ்துவர்கள், முஸ்லீம் மக்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
கடந்த 1962ம் ஆண்டு துவங்கப்பட்ட கபிலர்மலை சட்டப்பேரவை தொகுதியில் 1962, 1967, 1971 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 4 முறை திமுகவும், 1977, 1980, 1989, 1991 ஆகிய சட்டப்பேரவை தேர்தலில் 4 முறை திமுகவும், 2001, 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாமகவும், 1984ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கபிலர்மலை சட்டப்பேரவை தொகுதி பரமத்தி வேலுார் சட்டப்பேரவை தொகுதி என, பெயர் மாற்றப்படவுடன் அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ. தனியரசு வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ரா. ராஜேந்திரன் | அதிமுக |
2 | கே. எஸ். மூர்த்தி | திமுக |
3 | க. முத்துக்குமார் | தேமுதிக |
4 | பொன். ரமேஷ் | பாமக |
5 | ச. ராஜ்குமார் | பாஜக |
6 | கோ. தெய்வசிகாமணி | நாம் தமிழர் |
7 | சி. பூபதி | கொமதேக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பரமத்தி-வேலூர் தாலுகா
திருச்செங்கோடு தாலுகா (பகுதி)
அகரம், கொன்னையார், பெரியமணலி, கோக்கலை, இலுப்பிலி, புஞ்சைபுதுப்பாளையம், கூத்தம்பூண்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, கூத்தம்பூண்டி, லத்திவாடி, மானத்தி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, முசிறி, புத்தூர் கிழக்கு மற்றும் பொம்மன்பட்டி கிராமங்கள்.
நாமக்கல் தாலுக்கா (பகுதி) இளையபுரம் கிராமம்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,01,372 |
பெண் | 1,07,160 |
மூன்றாம் பாலினத்தவர் | 6 |
மொத்த வாக்காளர்கள் | 2,08,538 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | U. தனியரசு | அ.தி.மு.க | 82682 |
2 | C. வடிவேல் | பாமகே | 51664 |
3 | V. வைத்தியநாதன் | சுயேச்சை | 6233 |
4 | K. மனோகரன் | பி.ஜே.பி | 2140 |
5 | A. சிவசங்கர் | சுயேச்சை | 2012 |
6 | P. கோபால் | சுயேச்சை | 1527 |
7 | M. தங்கதுரை | ஐ.ஜே.கே | 1447 |
8 | S.R. பாலசுப்பிரமணியம் | சுயேச்சை | 911 |
9 | S. ரவிகுமார் | சுயேச்சை | 712 |
10 | N. ராமசாமி | சுயேச்சை | 566 |
11 | N. சுந்தரம் | சுயேச்சை | 534 |
12 | P. தங்கராஜ் | சுயேச்சை | 452 |
13 | R. முருகேசன் | சுயேச்சை | 423 |
14 | P. சீனிவாசன் | சுயேச்சை | 402 |
151705 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT