Published : 05 Apr 2016 04:05 PM
Last Updated : 05 Apr 2016 04:05 PM
கடந்த தொகுதி சீரமைப்பின் போது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி இது. நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் இருந்து பகுதிகள் பிரித்து கீழ்வேளூர் தனி தொகுதியாக உருவானது. இதில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் இருந்து 38 ஊராட்சிகளும், கீழையூர் ஒன்றியத்தில் இருந்து 27, தலைஞாயிறு ஒன்றியத்தில் இருந்து 6, நாகை ஒன்றியத்தில் இருந்து 6 ஊராட்சி பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான வேளாங்கண்ணி, இந்துக்களின் வழிபாட்டு தலமான எட்டுக்குடி, கலைஞர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை உள்ளிட்ட முக்கிய ஊர்கள் இத்தொகுதிக்குள் உள்ளன. வேளாங்கண்ணி, கீழ்வேளூர் ஆகிய இரண்டு பேரூராட்சிகள் தவிர ஏனையவை எல்லாமே ஊராட்சி பகுதிகள். முழுக்க முழுக்க விவசாயத் தொழிலாளர்கள் நிரம்பிய இத்தொகுதியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளன. அதில் மார்க்ஸிஸ்ட் அதிக வலுவுடன் உள்ளது. அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடித் தலங்களும் இத்தொகுதிக்குள் தான் வருகின்றன.
தொகுதியின் தலைநகரான கீழ்வேளூரில் பேருந்து நிலையம் இல்லை. நூலகத்துக்கு கட்டிடம் இல்லை என்று எல்லாமே இல்லைதான். எந்தவிதத்திலும் தன்னிறைவு அடையாத தேவைகளுக்காக ஏங்கி நிற்கும் தொகுதியாக விளங்குகிறது. வங்கக் கடலில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளூக்கு நிரந்த திர்வு காணப்பட வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் கோரிக்கை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | என்.மீனா | அதிமுக |
2 | உ.மதிவாணன் | திமுக |
3 | வி.பி.நாகைமாலி | மார்க்சிஸ்ட் |
4 | ஏ.வனிதா | பா.ம..க |
5 | எஸ்.குமார் | பா.ஜ.க |
6 | க.பழனிவேல் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கீழ்வேளூர் தாலுகா
நாகப்பட்டினம் தாலுகா (பகுதி)
ஆபரணதாரி, பாப்பாகோவில், வடக்குபொய்கைநல்லூர், கருவேலங்கடை, ஒரத்தூர், அகர ஒரத்தூர், புதுச்சேரி, ஆலங்குடி, வடுகச்சேரி, மகாதானம், வடவூர், தெற்கு பொய்கைநல்லூர், குறிச்சி, அகலங்கன் மற்றும் செம்பியன்மகாதேவி கிராமங்கள், திருக்குவளை தாலுக்கா (பகுதி) தென்மருதூர், ஆதமங்கலன், அணக்குடி, வடக்குபனையூர், தெற்குபனையூர், வலிவலம், கொடியாலத்தூர், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, கார்குடி, திருக்குவளை, மேலவாழக்கரை, மடப்புரம், மீனமநல்லூர், வாழக்கரை, ஈசனூர், திருவாய்மூர், எட்டுகுடி, வல்லம், கீரம்பேர், முத்தரசபுரம், கச்சநகரம், கொத்தங்குடி, தொழுதூர் மற்றும் சிதைமுர் கிராமங்கள்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 80,936 |
பெண் | 82,434 |
மூன்றாம் பாலினத்தவர் | - |
மொத்த வாக்காளர்கள் | 1,63,370 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | மகாலிங்கம்.P | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 59402 |
2 | மதிவாணன்.U | திமுக | 58678 |
3 | தேவகி.G | சுயேச்சை | 1487 |
4 | ஷாஜஹான்.J | பகுஜன் சமாஜ் கட்சி | 743 |
5 | செல்வராசு.T | சுயேச்சை | 605 |
6 | சதாசிவம்.K | சுயேச்சை | 339 |
121254 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT