Published : 05 Apr 2016 04:05 PM
Last Updated : 05 Apr 2016 04:05 PM
வேதாரண்யம் வட்டப் பகுதிகளை உள்ளடக்கியதான இத்தொகுதிக்குள் வேதாரண்யம் நகரம் மற்றும் தலைஞாயிறு பேரூராட்சி ஆகியவை அடங்கியிருக்கின்றன. திருக்குவளை வட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தின் ஆறு ஊராட்சிகள் இத்தொகுதிக்குள் திணிக்கப் பட்டிருக்கின்றன. அப்பரும், சம்பந்தரும் பதிகம் பாடி திருக்கதவம் திறந்து மூடிய ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், சோழர்கால துறைமுகமான கோடியக்கரை, பறவைகள் சரணாலயம், வனவிலங்கு சரனாலயம் ஆகியவை முக்கியமான இடங்கள்.
தொகுதியின் பிரதான தொழில் உப்பு காய்ச்சுதல், ராஜாஜி தலைமையில் இங்குள்ள அகஸ்தியம்பள்ளியில் வெள்ளையர் அரசாங்கத்தை எதிர்த்து உப்பு காய்ச்சப்பட்டது சுதந்திரபோராட்ட வரலாற்றில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வு வேதாரண்யத்தை சுற்றி உப்பளங்களே பிரதானம். வெளியூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து உப்பு ஏற்றுமதியாகின்றது. ஆனால் அதற்கேற்ற சாலை வசதியும், இருப்புப் பாதை வசதியும் மேம்படுத்தப் படவில்லை. உப்பளத்தொழிலாளர்களின் நிலை முன்னேற்றமில்லாமல் இருக்கிறது.
அதேபோல விவசாயத்துக்கான திட்டங்களிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. தொகுதியின் பல்வேறு இடங்களிலும் இறவைப் பாசணத்துக்காக அமைக்கப்பட்ட மோட்டார் நீர் ஏற்றும் நிலையங்கள் அனைத்தும் பழுதாகி கிடக்கின்றன. மழைக்காலங்களில் வீணாகும் நீரை தேக்கி வைக்கவும் திட்டங்கள் தீட்டப்படவில்லை. மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் அரசாங்கங்கள் மீனவர்களை எல்லைதாண்டி செல்லாமல் தடுக்கவோ, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொகுதிக்குள் குடிநீர் பிரச்சினை கடுமையாக இருக்கிறது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஆறுமுறை திமுகவும், நான்குமுறை காங்கிரஸ் கட்சியும், இரண்டு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஓ.எஸ்.மணியன் | அதிமுக |
2 | பி.வி.ராஜேந்திரன் | காங்கிரஸ் |
3 | தா.வைரவநாதன் | தேமுதிக |
4 | எஸ்.கே. வேதரத்தினம் | பா.ஜ.க |
5 | உஷா கண்ணன் | பாமக |
6 | கு.ராஜேந்திரன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
வேதாரணயம் வட்டம்
திருக்குவளை வட்டம் (பகுதி)
நத்தபள்ளம், புத்தூர், மனக்குடி, வடுகூர், நீர்முளை, திருவிடைமருதூர், கூத்தங்குடி, பன்னத்தெரு மற்றும் ஆய்மூர் கிராமங்கள்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 88,869 |
பெண் | 91,369 |
மூன்றாம் பாலினத்தவர் | - |
மொத்த வாக்காளர்கள் | 1,80,238 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1962 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1962 | என். எஸ். ராமலிங்கம் | காங்கிரஸ் | 27200 |
1967 | பி. வி. தேவர் | காங்கிரஸ் | 25942 |
1971 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 41787 |
1977 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 29601 |
1980 | எம். எஸ். மாணிக்கம் | அதிமுக | 52311 |
1984 | மீனாட்சி சுந்தரம் | திமுக | 49922 |
1989 | பி. வி. இராசேந்திரன் | காங்கிரஸ் | 42060 |
1991 | பி. வி. இராசேந்திரன் | காங்கிரஸ் | 55957 |
1996 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 54185 |
2001 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 63568 |
2006 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 66401 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1962 | என். தர்மலிங்கம் | திமுக | 17764 |
1967 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 25678 |
1971 | பி. சி. வேலாயுதம் | நிறுவன காங்கிரஸ் | 17478 |
1977 | எஸ். தேவராசன் | காங்கிரஸ் | 28009 |
1980 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 32656 |
1984 | பி. வி. இராசேந்திரன் | காங்கிரஸ் | 48646 |
1989 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 36836 |
1991 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 39089 |
1996 | பி. சி. வி. பாலசுப்பரமணியம் | காங்கிரஸ் | 31393 |
2001 | ஆர். முத்தரசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 48568 |
2006 | ஒ. எஸ். மணியன் | அதிமுக | 59870 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | எஸ்.கே வேதரத்தினம் | திமுக | 66401 |
2 | ஓ.எஸ் .மணியன் | அதிமுக | 59870 |
3 | வீரவினயகம்.B | தேமுதிக | 1708 |
4 | உதயகுமார்.M | பாஜக | 1267 |
5 | மகேந்திரன்.G | சமாஜ்வாதி கட்சி | 1049 |
6 | வேதரத்தினம்.G | சுயேச்சை | 817 |
7 | சூர்யா.T | பகுஜன் சமாஜ் கட்சி | 631 |
8 | கதிரேசன்.G | சுயேச்சை | 444 |
9 | ஸ்ரீனிவாசன்.M | சுயேச்சை | 429 |
10 | ராமமூர்த்தி.R | சுயேச்சை | 368 |
132984 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | காமராஜ்.N.V | அதிமுக | 53799 |
2 | வேதரத்தினம்.S.K | சுயேச்சை | 42871 |
3 | சின்னதுரை.R | பாமக | 22925 |
4 | ஜெகன்.K | சுயேச்சை | 2270 |
5 | சண்முகவேல்.G | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | 2041 |
6 | ராணி.M | சுயேச்சை | 1991 |
7 | ராம்சிங்.D | சுயேச்சை | 1826 |
8 | கார்த்திகேயன்.S | பாஜக | 1260 |
9 | வீரமணி.T.V.R | சுயேச்சை | 838 |
10 | சுப்ரமணியன்.P | சுயேச்சை | 257 |
11 | ராமமூர்த்தி.R | சுயேச்சை | 246 |
12 | சுப்ரமணியன்.V | சுயேச்சை | 227 |
13 | சந்திரமோகன்.V | சுயேச்சை | 157 |
130708 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT