Published : 05 Apr 2016 04:05 PM
Last Updated : 05 Apr 2016 04:05 PM

160 - சீர்காழி (தனி)

சீர்காழி வட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிட,ம் ஆகிய இரண்டு ஒன்றியங்களை உள்ளடக்கியது சீர்காழி மட்டுமே நகராட்சி பகுதி, மற்றவை அனைத்தும் ஊராட்சிகள். புகழ்பெற்ற செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோயில், புதன் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், சீர்காழி சட்டநாதர் கோயில், ஆச்சாள்புரம் சிவலோகதியாகேசர் கோயில் ஆகிய பல திருத்தலங்கள் இத்தொகுதிக்குள் உள்ளன.

தலித் மக்கள் அதிகம் வாழும் இந்த தொகுதியில் விவசாயமே பிரதானமாக விளங்குகிறது. அதிகப்படியான வேலை வாய்ப்பும் விவசாயத்தின் மூலமே கிடைக்கிறது. அதற்கு அடுத்ததாக மீன்பிடித் தொழிலும் முக்கிய தொழிலாக விளங்குகிறது. பழையாறு, திருமுல்லைவாசல் என மீன்பிடி தலங்களில் ஆயிரக் கணக்கானவர்கள் அன்றாடம் பிழைக்கிறார்கள், கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் பழையார் துறைமுகம் பிரதானமாக விளங்குகிறது. விவசாயத்துக்கு கடன்கள் கிடைப்பதில்லை என்பதுவும், கொள்ளிடம் ஆற்றிலும், கடலில் கலக்கும் முக்கிய வடிகால் ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டும் திட்டம் எதுவும் இதுவரை நிறைவேறாததும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளது. கொள்ளிடத்தை தலைமையிடமாக கொண்டு தனித் வட்டம் அமைக்கப்படவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.

இதுவரை நடந்த தேர்தல்களில் ஐந்துமுறை அதிமுகவும், நான்குமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பி.வி. பாரதி

அதிமுக

2

எஸ்.கிள்ளைரவிந்திரன்

திமுக

3

ஆர். உமாநாத்

தேமுதிக

4

பொன்.முத்துக்குமார்

பா.ம.க

5

எம்.ஆர்.எஸ்.இளவழகன்

பா.ஜ.க

6

பா.ஜோதி

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

சீர்காழி வட்டம் (பகுதி) ( 3 கிராமங்கள் தவிர அதாவது கீழையூர், மேலையூர் மற்றும் வாணகிரி நீங்கலாக)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,14,533

பெண்

1,17,079

மூன்றாம் பாலினத்தவர்

4

மொத்த வாக்காளர்கள்

2,31,616

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011)





















ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

2011

ம. சக்தி

அதிமுக

2006

M.பன்னீர்செல்வம்

திமுக

2001

N.சந்திரமோகன்

அதிமுக

1996

M.பன்னீர்செல்வம்

திமுக

1991

T.மூர்த்தி

அதிமுக

1989

M.பன்னீர்செல்வம்

திமுக

1984

பாலசுப்ரமணியம்

அதிமுக

1980

பாலசுப்ரமணியம்

அதிமுக

1977

K.சுப்ரவேலு

திமுக



2006 தேர்தல் ஒரு பார்வை





















வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பன்னீர்செல்வம்.M

திமுக

58609

2

துரைராஜன்.P

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

54818

3

பாலகிருஷ்ணன் பொன்

தேமுதிக

5143

4

குணசேகரன்.N

மார்க்சியக் கம்யூனிசக் கட்சி

1497

5

முத்துபாலகிருஷ்ணன்.M

சுயேச்சை

1260

6

இளவழகன்.S

பாஜக

1115

7

தமிழ்மாறன்.K

சமாஜ்வாதி கட்சி

996

8

தேவேந்திரன்.S

பகுஜன் சமாஜ் கட்சி

379

123817



2011 - தேர்தல் ஒரு பார்வை

























வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சக்தி.M

அதிமுக

83881

2

துரைராஜன்.P

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

56502

3

கலைவாணி.P

சுயேச்சை

4018

4

கனிவண்ணன்.M

சுயேச்சை

3779

5

குமாரராஜா.S

சுயேச்சை

1721

6

கிருஷ்ணராஜ்.M

பகுஜன் சமாஜ் கட்சி

1331

7

மாயவன்.A

சுயேச்சை

1030

8

கோபிநாத்.B

சுயேச்சை

698

9

கற்பகவள்ளி. S

சுயேச்சை

601

153561

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x