Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM

195 - திருப்பரங்குன்றம்

முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தை உள்ளடக்கிய இத்தொகுதி. மதுரை சர்வதேச விமான நிலையம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், வடபழஞ்சி ஐ.டி. பார்க், நியூட்ரினோ ஆய்வு மையம் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. திருப்பரங்குன்றம் நகர், ஒன்றியம், திருநகர், ஹார்விபட்டி பேரூராட்சிகள், அவனியாபுரம் நகர் உள்ளிட்ட பகுதிகள் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மாவட்டத்தின் 2-வது பெரிய தொகுதி. தே.மு.தி.க. கட்சி துவக்கியது உள்ளிட்ட பல கட்சிகளின் பிரமாண்ட மாநாடுகள் இத்தொகுதியில் நடந்துள்ளன.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

தனியார் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் அதிகமாக இயங்கி வருகின்றன. விவசாயிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். வைகை பாசன கால்வாய் அமைக்காதது, நறுமண தொழிற்சாலை, பூக்களுக்கான குளிர்விப்பு கிடங்கு, சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை விரிவாக்கம் செய்யப்படாதது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீண்ட காலமாக உள்ளன.

1957-ம் ஆண்டு முதல் இதுவரை 13 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 2 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. ஒருமுறையும், பார்வர்டு பிளாக் கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்து இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

2006-ம் ஆண்டு தேர்தலில் ஏ.கே.போஸ்(அதிமுக) வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ஏ.கே.டி.ராஜா(தேமுதிக) வெற்றி பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

மதுரை தெற்கு தாலுகா (பகுதி)

திருப்பரங்குன்றம், விளாச்சேரி, வடிவேல்கரை, தட்டானூர், கிழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தனக்கன்குளம், சிந்தாமணி, பிராகுடி, கல்லம்பல், ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனைபூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமானேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாலானேந்தல், நிலைபூர், பெரிய ஆலங்குளம், சூரக்குளம், வலையப்பட்டி, தொட்டியபட்டி, வலையங்குளம், பாப்பானோடை, இராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், மூத்தான்குளம், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பதி, நெடுமதுரை, கொடும்பாடி, ஓத்தைஆலங்குளம், பெரியகூடக்கோயி, பாரைபதி, நல்லூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்கள்,

சின்ன அனுப்பானடி (சென்சஸ் டவுன்), அவனியாபுரம் (பேரூராட்சி), திருப்பரங்குன்றம் (பேரூராட்சி), ஹார்விபட்டி (பேரூராட்சி) மற்றும் திருநகர் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,39,064

பெண்

1,40,011

மூன்றாம் பாலினத்தவர்

21

மொத்த வாக்காளர்கள்

2,79,096

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

ராஜா.A.K.T

தேமுதிக

58.7

2006

A.K.போஸ்

அதிமுக

42.81

2001

S.M.சீனிவேல்

அதிமுக

48.93

1996

C.இராமச்சந்திரன்

திமுக

60.75

1991

S.ஆண்டித்தேவர்

அதிமுக

59.6

1989

C.இராமச்சந்திரன்

திமுக

43.55

1984

M.மாரிமுத்து

அதிமுக

53.47

1980

கா.காளிமுத்து

அதிமுக

60.53

1977

கா.காளிமுத்து

அதிமுக

41.39

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

போஸ்.A.K

அதிமுக

117306

2

வெங்கடேசன்.S

மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

104620

3

ராஜமாணிக்கம்.G

தேமுதிக

40684

4

சுரேந்திரன்.S

பாஜக

4482

5

மகாலிங்கம்.V (அ) சிற்றரசு

பகுஜன் சமாஜ் கட்சி

1595

6

கந்தசாமி.K

சுயேச்சை

1476

7

ஈஸ்வரன்.G

ஐக்கிய ஜனதா தளம்

1348

8

சரத்பாபு.C

சுயேச்சை

1031

9

ஜெயக்குமார்.M

சுயேச்சை

929

10

பரமன்.P.M

சுயேச்சை

543

274014

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ராஜா.A.K.T

தேமுதிக

95469

2

சுந்தரராஜன்

காங்கிரஸ்

46967

3

ஆறுமுகம்

சுயேச்சை

9793

4

கந்தன்

பாஜக

3543

5

செல்வம்

பகுஜன் சமாஜ் கட்சி

1251

6

சாந்திபூசன்

சுயேச்சை

1023

7

நாகமணி

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

865

8

பாலச்சந்திரன்

சுயேச்சை

791

9

அழகு முத்து வேலாயுதம்

சுயேச்சை

660

10

வேலு

சுயேச்சை

635

11

வரதராஜன்

சுயேச்சை

633

12

செல்லராஜ் (அ) தமிழ்வணணன்

சுயேச்சை

504

13

ஆறுமுகம்

சுயேச்சை

496

162630

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x