Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் முக்கிய தொகுதியாக திகழ்கிறது திருமங்கலம். தொகுதி மறுசீரமைப்பில் சேடபட்டி தொகுதி கலைக்கப்பட்டு அதிலிருந்த சில பகுதிகள் திருமங்கலத்துடன் இணைக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தை சேர்ந்த இத்தொகுதி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் கீழ் உள்ளது. இந்த தொகுதி முழுவதும் விவசாயத்தையே முக்கியமான தொழிலாக கொண்டுள்ளது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். விமான நிலைய சாலையில் ரயில்வே மேம்பாலம், திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம், சிவரக்கோட்டையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்துதல், பெரிய தொழிற்சாலைகள் இல்லாதது இந்த தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனையாக உள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
திருமங்கலம், தே.கல்லுப்பட்டி பகுதிகளில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்படும். திருமங்கலம் நகராட்சி, ஒன்றியம், கள்ளிக்குடி ஒன்றியம், தே.கல்லுப்பட்டி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, பேரையூர் பேரூராட்சி ஆகிய பகுதிகள் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக்கல்லூரி, அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும், அரசு ஆசிரியர் பயிற்சி நிலையம் மற்றும் சில தனியார் கல்லூரிகள், கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்த விஷயம் ”திருமங்கலம் பார்முலா” என்ற பெயர் தேர்தல் பிரபலமாகிவிட்டது.
1952-ம் ஆண்டு முதல் 14 சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் ஒரு இடைத்தேர்தல் என 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 5 முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், ஒருமுறை பார்வர்டு பிளாக் கட்சியும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், ம.தி.மு.க. ஒருமுறையும், சுயேட்சை ஒருமுறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். 2006 சட்டமன்ற தேர்தலில் வீர.இளவரசன்(ம.தி.மு.க.), 2009 இடைத்தேர்தலில் லதா அதியமான்(தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர். கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ம.முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருமங்கலம் தாலுக்கா
பேரையூர் தாலுகா (பகுதி)
பூசலபுரம், சின்ன பூலாம்பட்டி, முத்துநாகையாபுரம் மிமி பிட், முத்துநாகையாபுரம் மி பிட், மத்தக்கரை, சின்ன ரெட்டிபட்டி, ஈஸ்வரபேரி, கவுண்டன்பட்டி, அப்பக்கரை, குன்னத்தூர், கெஞ்சம்பட்டி, ஆதனூர், லட்சுமிபுரம், வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், கிளாங்குளம், சாலிச்சந்தை, பேரையூர், சிலமலைப்பட்டி, எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், கூவலப்புரம், மோடகம், காடனேரி, வைரவி அம்மாபட்டி, காரைக்கேனி, வேளாம்பூர், வையூர், நல்லமரம், சிலார்பட்டி, கோபாலபுரம், ஜாரி உசிலம்பட்டி, சிட்டுலொட்டு, பாரைப்பட்டி, முருகனேரி மற்றும் செங்குளம் கிராமங்கள்,
பேரையூர் (பேரூராட்சி) மற்றும் டி.கல்லுப்பட்டி (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,26,584 |
பெண் | 1,32,212 |
மூன்றாம் பாலினத்தவர் | 4 |
மொத்த வாக்காளர்கள் | 2,58,800 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு |
2011 | ம. முத்துராமலிங்கம் | அ.தி.மு.க. | 55.55 |
2009 இடைத்தேர்தல் | லதா அதியமான் | தி.மு.க. | 60.15 |
2006 | வீர. இளவரசன் | ம.தி.மு.க. | 37.48 |
2001 | கா.காளிமுத்து | அ.தி.மு.க. | 52.67 |
1996 | ம. முத்துராமலிங்கம் | தி.மு.க. | 53.41 |
1991 | T.K.இராதாகிருஷ்ணன் | அ.தி.மு.க. | 64.87 |
1989 | R.சாமிநாதன் | தி.மு.க. | 34.84 |
1984 | என். எஸ். வி. சித்தன் | இ.தே.கா. | 55.23 |
1980 | என். எஸ். வி. சித்தன் | இ.தே.கா. | 46.43 |
1977 | P.T.சரசுவதி | அ.தி.மு.க. | 44.3 |
1971 | ரத்தினசாமிதேவர் | பார்வார்டு பிளாக்கு | |
1967 | என். எஸ். வி. சித்தன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1962 | திருவேங்கட ரெட்டியார் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1957 | பெரியவல குருவரெட்டி | சுயேட்சை | |
1952 | ராசாராம் | இந்திய தேசிய காங்கிரஸ் |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | இளவரசன்.வீரா | மதிமுக | 45067 |
2 | வேலுசாமி.V | திமுக | 40923 |
3 | தனபாண்டியன்.T | தேமுதிக | 19970 |
4 | ஒச்ச தேவர்.T | பாஜக | 7790 |
5 | சுந்தரராஜ்.C | சுயேச்சை | 1593 |
6 | வேலுசாமி.A | சுயேச்சை | 1193 |
7 | குருசாமி.P | ஐக்கிய ஜனதா தளம் | 1118 |
8 | ராஜ்.M | அனைத்திந்திய பார்வார்டு பிளாக் | 899 |
9 | ராமையா.G | பகுஜன் சமாஜ் கட்சி | 866 |
10 | முத்துவேல்.K | சுயேச்சை | 419 |
11 | தவமணி.S | சுயேச்சை | 210 |
12 | அழகர்சாமி.P | சுயேச்சை | 200 |
120248 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | முத்துராமலிங்கம்.M | அதிமுக | 101494 |
2 | மணிமாறன்.M | திமுக | 75127 |
3 | ஜெயபாண்டி.P | சுயேச்சை | 1469 |
4 | வையாதுறை.V | பகுஜன் சமாஜ் கட்சி | 1389 |
5 | ரமேஷ்பாபு.M | சுயேச்சை | 787 |
6 | முத்து.P | சுயேச்சை | 677 |
7 | முத்துமணி.M | இந்திய ஜனநாயக கட்சி | 450 |
8 | பெரியசாமி.K | லோக் ஜன சக்தி | 243 |
9 | பன்னீர்செல்வம்.A | சுயேச்சை | 238 |
10 | ஆறுமுகம்.G | சுயேச்சை | 204 |
11 | நாகரத்தினம்.R | சுயேச்சை | 177 |
12 | செல்வராஜ்.M | சுயேச்சை | 176 |
13 | கருந்தன்மலை.P | சுயேச்சை | 159 |
14 | குருசாமி | சுயேச்சை | 113 |
182703 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT