Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
இந்தியாவிலேயே மிக நிளமான தேசிய நெடுஞ்சாலையான, காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணகிரி தொகுதியின் வழியாகத்தான் செல்கிறது. தமிழகத்திலேயே 4 தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் ஒரே இடம் கிருஷ்ணகிரி. இந்த தொகுதியில் 90 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். குறிப்பாக மா, மல்லி, நெல்சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கிருஷ்ணகிரி மலை, காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில், அன்னை பாத்திமா திருத்தலம் ஆகியவை நகரின் அடையாளங்களாக திகழ்கிறது. இதே போல், இந்த தொகுதியில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, பொன்விழா கண்ட கிருஷ்ணகிரி நீர்தேக்கம். 2 போக நெல்சாகுபடி செய்யப்படும் காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் இங்குள்ளது.
தொகுதி மறுசீரமைப்பில் கடந்த முறை காவேரிப்பட்டணம் தொகுதியில் இருந்து பெரும்பாலான கிராமங்கள் கிருஷ்ணகிரி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி, 40 ஊராட்சிகள் தொகுதியில் உள்ளது. இந்த தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிக அளவில் உள்ளனர். அதனை தவிர தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர், செட்டியார், மற்றும் முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதனைத் தவிர நிப்பட் தயாரித்தல் உள்ளிட்ட சிறிய தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் அமைந்துள்ளன.
ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துறை மாவட்ட அலுவலங்கள் இந்த தொகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது. தொகுதியில் நீண்ட கால பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. சத்துணவுடன் மாங்கூழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டம், 5 ஆண்டுகள் கடந்தும் முழுமையடையாத பாதாள சாக்கடை பணிகள், தென்பெண்ணையாறு & படேதலாவ்ஏரி திட்டம், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, குளிர்பதன கிடங்குகள், எரியவாயு தகன மேடை, செண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் உள்ளதை நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் தொகுதி மக்கள். இதே போல், உள்ளது. பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தை வேளாண்மை கல்லூரியாக மாற்றிட நடவடிக்கை எடுக்கவில்லை. கிருஷ்ணகிரி மக்களுக்கு இடையூறாக நகரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றிட பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலேயே ரயில் போக்குவரத்து வசதி இல்லாத ஒரே தலைநகரமாக உள்ளது கிருஷ்ணகிரி மட்டும் தான்.
கடந்த கால தேர்தல்களை பொறுத்தவரை கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல்களுடன் சேர்த்து இதுவரை 14 தேர்தல்கள் நடந்துள்ளது. இதில், 1951ல் நடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணமூ£த்தி கவுண்டர் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து நடந்த தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக உறுப்பினர் டி.செங்குட்டுவனும், 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமியும் வெற்றி பெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | வி.கோவிந்தராஜ் | அதிமுக |
2 | டி.செங்குட்டுவன் | திமுக |
3 | ஆர். ஜெயபிரகாஷ் | தமாகா |
4 | சுப.குமார் | பாமக |
5 | அருண்கௌதம் | ஐஜேகே- பாஜக |
6 | பொன்.பார்த்திபன் | நாம் தமிழர் |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,21,446 |
பெண் | 1,25,297 |
மூன்றாம் பாலினத்தவர் | 29 |
மொத்த வாக்காளர்கள் | 2,46,772 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | டி. கிருஷ்ண மூர்த்தி கவுண்டர் | சுயேச்சை | 14639 | 41.27 |
1957 | எஸ். நாகராஜ மணியார் | காங்கிரஸ் | 23182 | 66.24 |
1962 | ஸ்ரீராமுலு | திமுக | 38833 | 58.47 |
1967 | பி. எம். எம். கவுண்டர் | காங்கிரசு | 24220 | 47.31 |
1971 | சி. மணியப்பன் | திமுக | 31445 | 63 |
1977 | கே. ஆர். சின்னராசு | அதிமுக | 17178 | 32.66 |
1980 | கே. ஆர். சின்னராசு | அதிமுக | 28020 | 49.75 |
1984 | கே. ஆர். சின்னராசு | அதிமுக | 40585 | 54.83 |
1989 | காஞ்சனா | திமுக | 35042 | 39.28 |
1991 | கே. முனிவெங்கடப்பன் | அதிமுக | 63729 | 69.92 |
1996 | காஞ்சனா கமலநாதன் | திமுக | 67849 | 64.11 |
2001 | வி. கோவிந்தராசு | அதிமுக | 65197 | 56.59 |
2006 | டி. செங்குட்டுவன் | திமுக | 69068 | --- |
2011 | கே. பி. முனிசாமி | அதிமுக | 89776 | -- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | எஸ். நாகராஜ மணியார் | காங்கிரஸ் | 12820 | 36.14 |
1957 | என். மோகன் ராம் | சுயேச்சை | 9642 | 27.57 |
1962 | பி. எம். முனிசாமி கவுண்டர் | காங்கிரசு | 27583 | 41.53 |
1967 | சி. மணியப்பன் | திமுக | 24035 | 46.95 |
1971 | டி.ஜி. செல்வராசு | காங்கிரஸ் (ஸ்தாபன) | 18471 | 37 |
1977 | டி. எம். திருப்பதி | ஜனதா கட்சி | 12466 | 23.7 |
1980 | எம். கமலநாதன் | திமுக | 26223 | 46.55 |
1984 | காஞ்சனா | திமுக | 29570 | 39.95 |
1989 | கே. சி. கிருஷ்ணன் | அதிமுக (ஜெ) | 21056 | 23.6 |
1991 | டி. எச். முஸ்தா அகமது | திமுக | 23761 | 26.07 |
1996 | கே. பி. காத்தவராயன் | அதிமுக | 32238 | 30.46 |
2001 | டி. செங்குட்டுவன் | திமுக | 43424 | 37.69 |
2006 | வி. கோவிந்தராசு. | அதிமுக | 50873 | --- |
2011 | ஹசீனாசையத் | காங்கிரஸ் | 60679 | -- |
2006 சட்டமன்ற தேர்தல் | 53. கிருஷ்ணகிரி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | T. செங்குட்டவன் | தி.மு.க | 69068 |
2 | V. கோவிந்தராஜ் | அ.தி.மு.க | 50873 |
3 | R. கோவிந்தராஜ் | தே.மு.தி.க | 10894 |
4 | P. டேவிட் | என்.சி.பி | 1913 |
5 | V. ராஜு | சுயேச்சை | 1841 |
6 | C. அபிமன்னன் | பி.எஸ்.பி | 1672 |
7 | S. ரமேஷ் | சுயேச்சை | 1100 |
8 | C. சென்னையன் | சுயேச்சை | 938 |
9 | S. முனாவரி பேகம் | பி.ஜே.பி | 812 |
10 | V.M. கிருஷ்ணமூர்த்தி | சுயேட்சை | 594 |
11 | R. குரு ராஜன் | யு.சி.பி.ஐ | 566 |
140271 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011சட்டமன்ற தேர்தல் | 53. கிருஷ்ணகிரி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K.P. முனுசாமி | அ.தி.மு.க | 89776 |
2 | சையது கியாஸ் உல் ஹக் | ஐ.என்.சி | 60679 |
3 | கோடீஸ்வரன் | பி.ஜே.பி | 3025 |
4 | R. ராஜா | யு.எம்.கே | 2357 |
5 | G. லதா | சுயேச்சை | 1561 |
6 | V. சீனிவாசன் | சுயேச்சை | 777 |
7 | K. தமிழ்செல்வன் | சுயேச்சை | 725 |
8 | கிருஷ்ணமூர்த்தி | சுயேச்சை | 540 |
9 | K.M. சந்திரமோகன் | சுயேச்சை | 489 |
10 | M. அர்ஜுனன் | சுயேச்சை | 450 |
160379 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT