Published : 23 Apr 2016 03:27 PM
Last Updated : 23 Apr 2016 03:27 PM
1. கிருஷ்ணகிரியில் பழங்கள், காய்கறிகள் சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
2. ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும்.
3. ஓசூரில் உள்ள தொழிலாளர் நல மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
4. ஓசூரில் உள்வட்ட சாலை அமைக்கப்படும்.
5. 150 கிராம ஏரிகளுக்கு நீர் வரும் வகையில் கெலவரப்பள்ளி அணைக்கட்டுப் பாசனக் கால்வாய் நீட்டிக்கப்படும்.
6. சூளகிரி துறை ஏரிக்கு மருதண்ட கால்வாய் பகுதியிலிருந்து பாசன கால்வாய் அமைக்கப்படும்.
7. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில், சிங்காரப்பேட்டை அருகே ஓடும் கடப்பாறை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு, அந்தப் பகுதியில் பாசன வசதி மேம்படுத்தப்படும்.
8. சென்றாயன் மலைக்குக் கிழக்கே உள்ள பன்னீர்க் குட்டையில் தடுப்பணை கட்டி, நீரைத் தேக்கிப் பாசன வசதி மேம்படுத்தப்படும்.
9. கிருஷ்ணகிரி அணையிலிருந்து கிழக்குக் கால்வாய் வழியாக ஒரப்பம் ஏரி, மருதேபள்ளி ஏரி, மாதேபள்ளிஏரி, ஓதிக்குப்பம் ஏரி மற்றும் பருகூர் சுற்றுப்புறங்களில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பி, விவசாயம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
10. குந்துக்கோட்டை ஊராட்சியிலுள்ள பல குக்கிராம மக்களின் குடியிருப்புகளில், மீதம் உள்ளோருக்கும் பட்டா வழங்க ஆவன செய்யப்படும்.
11. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் தண்ணீர் 5 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
12. கிருஷ்ணகிரி – ஓசூர் – திருப்பத்தூர் வழியாக ரயில் பாதை ஏற்படுத்தித் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
13. கிருஷ்ணகிரி – அவதானப்பட்டி படகு இல்லப் பூங்காவை விரிவுப்படுத்தி, குழந்தைகள் ரயில் வசதி செய்து தரப்படும்.
14. ஓசூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தித் தரப்படும்.
15. தொழில்நகரமான ஓசூரில் தொழிலாளர் நல அலுவலகம், தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் ஆகியன ஏற்படுத்தப்படும்.
16. ஓசூரில் டைடல்பார்க் ஏற்படுத்தித் தரப்படும்.
17. தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும்.
18. போச்சம்பள்ளியில் இயங்கி வந்த பருத்தி அரவை ஆலையும், சூரியகாந்தி எண்ணெய் ஆலையும் மீண்டும் செயல்பட ஆவன செய்யப்படும்.
19. போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்திலேயே கிரானைட் கற்கள் வர்த்தக ஏற்றுமதி மற்றும் பொருளாதார மண்டலம் அரசு சார்பில் ஏற்படுத்தித் தரப்படும்.
20. ஓசூர் – ஜோலார்பேட்டை ரயில் வசதி செய்து தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
21. கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இயங்கும் உருது பெண்கள் பள்ளி உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்.
22. கிருஷ்ணகிரியில் இயங்கும் தௌலதாபாத் உருது நடுநிலைப்பள்ளிக்குக் கட்டிட வசதி செய்து தரப்படும்.
23. கெலவரப்பள்ளி அணையிலிருந்து பைரமங்கலம் ஏரி மற்றும் காருகொண்டபள்ளி ஏரிகளுக்குத் தண்ணீர் வசதி செய்து தரப்படும்.
24. பூனப்பள்ளி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையால் சுற்றுச் சூழல் பாதிப்பும் மக்களுக்குச் சுகாதாரக் கேடும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
25. கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட் தொழில் வளாகத்திற்குக் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும்.
26. கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்துத் தரப்படும்.
27. ஓசூரில் தனியாக ஒரு தொழிலாளர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
28. ஓசூரில் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி வளாகம் அமைத்துத் தரப்படும்.
29. கெலவரப்பள்ளி அணைத் தண்ணீர் ஓசூர் ராம்நாயக்கன் ஏரியில் நிரப்பப்பட்டு ஓசூர் நகருக்குத் தண்ணீர் வசதி செய்து தரப்படும்.
30. தென்பெண்ணையாற்று உபரிநீர் நாகமங்கலம் லட்சுமி நாராயணராயலு ஏரி மூலமாக விவசாயத்திற்குப் பயன்பட வசதி செய்து தரப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT