Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM
கரூர் சட்டப்பேரவைத் தொகுதி 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்ட தலைநகர அந்தஸ்து கொண்ட இத்தொகுதியில் கரூர் நகராட்சியின் 44 வார்டுகள் மற்றும் கரூர் வட்டம், மண்மங்கலம் வட்டத்தின் சில பகுதிகள் கரூர், தாந்தோணி ஒன்றியங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
சங்ககால சேர, சோழர்கள் தலைநகரம். அமராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் கரூரில் வாணிப சிறப்பை பறைசாற்றுபவை. கரூர் வைஸ்யா வங்கி, லட்சுமி விலாஸ் என 2 வங்கிகள் கரூரில் தொடங்கப்பட்டவை. கைத்தறி என சிறப்பிக்கப்பட்ட கரூரில் 400க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள் உள்ளன. கரூர் மாரியம்மன், நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோயில், தனியார் பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன.
கரூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.3,000 கோடிக்கு வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நடைபெறுகிறது. தலா ரூ.1,000 கோடிக்கு கொசுவலை உற்பத்தி மற்றும் பேருந்து கூண்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிதி நிறுவனங்களுக்கு பெயர் பெற்ற கரூர் நகரில் மட்டும் 1000த்திற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சாயக்கழிவால் பெரும்பாலும் விவசாயம் அழிந்துவிட்ட நிலையிலும் நெல், கோரை ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. கைத்தறிக்கு பெயர் பெற்ற கரூரில் தற்போது ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை உற்பத்தி, பேருந்து கூண்டு கட்டுதல், சாயமேற்றுதல் ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன.
கொங்கு வேளாள கவுண்டர்கள், முதலியார்கள், சோழிய வெள்ளாளர்கள், முத்தரையர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகளவு வசிக்கின்றனர்.
தொகுதியின் நீண்டகால பிரச்சனை சாயக்கழிவு. பூஜ்ய கழிவு இல்லாத 400க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டதால் பல ஆயிரம் பேர் வேலை இழந்தனர். சட்டவிரோதமாக செயல்படும் சாயப்பட்டறைகள் வெளியேற்றும் சாயக்கழிவால் அமராவதி ஆறு மாசுப்படுகிறது. சாயக்கழிவு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். கரூர் நகராட்சியில் தாந்தோணி, சணப்பிரட்டி பகுதிகளில் புதை சாக்கடை அமைக்கப்படவில்லை. கரூர், இனாம்கரூர், தாந்தோணி பகுதிகளை உள்ளடக்கி போடப்பட்ட காவிரி குடிநீர் திட்டத்தில் கரூர் பகுதியில் மட்டும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. புதிய பேருந்து நிலையம், சுற்றுச்சாலை, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
அதிமுக 6 முறை, காங்கிரஸ் 5 முறை, திமுக 3 முறை வெற்றிப்பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த வி.செந்தில்பாலாஜி வெற்றிப்பெற்று 4 ஆண்டுக்கு மேலாக போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | எம்.ஆர்.விஜயபாஸ்கர் | அதிமுக |
2 | பேங்க் கே.சுப்பிரமணியன் | காங்கிரஸ் |
3 | ஏ.ரவி | தேமுதிக |
4 | எம்.முருகேசன் | பாமக |
5 | கே.சிவசாமி | பாஜக |
6 | செல்வ.நன்மாறன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கரூர் தாலுகா (பகுதி)
நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், குப்பிச்சிபாளையம், வாங்கல், நெரூர் வடக்கு, நெரூர் தெற்கு, அச்சமாபுரம், சோழூர், பஞ்சமாதேவி, மின்னாம்பிள்ளி, மண்மங்கலம், ஆத்தூர், ஆண்டாங்கோவில் (மேற்கு), காடப்பாறை, திருமாநிலையூர் மற்றும் ஆண்டாங்கோயில் (கிழக்கு) கிராமங்கள்,
இனாம் கரூர் (நகராட்சி), கரூர் (நகராட்சி) மற்றும் தாந்தோணி (நகராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,11,069 |
பெண் | 1,20,990 |
மூன்றாம் பாலினத்தவர் | 2 |
மொத்த வாக்காளர்கள் | 2,32,061 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1952 | T. V. சன்னாசி மற்றும் M. மாணிக்கசுந்தரம் | இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் சுயேச்சை | 29429 மற்றும் 21113 |
1957 | T. M. நல்லசாமி | இந்திய தேசிய காங்கிரஸ் | 31611 |
1962 | T. M. நல்லசாமி | இந்திய தேசிய காங்கிரஸ் | 35969 |
1967 | T. M. நல்லசாமி | இந்திய தேசிய காங்கிரஸ் | 33552 |
1971 | நல்லசாமி | திமுக | 45977 |
1977 | K. வடிவேல் | அதிமுக | 33856 |
1980 | M. சின்னசாமி | அதிமுக | 54331 |
1984 | K. வடிவேல் | அதிமுக | 65363 |
1989 | K. V. ராமசாமி | திமுக | 54163 |
1991 | M. சின்னசாமி | அதிமுக | 89351 |
1996 | வாசுகி முருகேசன் | திமுக | 79302 |
2001 | T. N. சிவசுப்பிரமணியன் | இந்திய தேசிய காங்கிரஸ் | 82012 |
2006 | V. செந்தில் பாலாஜி | அதிமுக | 80214 |
2011 | V. செந்தில் பாலாஜி | அதிமுக | 99738 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1952 | தகவல் இல்லை | தகவல் இல்லை | தகவல் இல்லை |
1957 | K. S. ராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 10576 |
1962 | K. S. ராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 20160 |
1967 | S. நல்லசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 28677 |
1971 | T. M. நல்லசாமி | ஸ்தாபன காங்கிரஸ் | 35230 |
1977 | S. நல்லசாமி | திமுக | 22264 |
1980 | S. நல்லசாமி | திமுக | 46025 |
1984 | K. V. ராமசாமி | திமுக | 53160 |
1989 | M. சின்னசாமி | அதிமுக(ஜெயலலிதா அணி) | 49661 |
1991 | வாசுகி முருகேசன் | திமுக | 45259 |
1996 | M. சின்னசாமி | அதிமுக | 47294 |
2001 | வாசுகி முருகேசன் | திமுக | 58574 |
2006 | வாசுகி முருகேசன் | திமுக | 74830 |
2011 | ஜோதிமணி | இந்திய தேசிய காங்கிரஸ் | 55593 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | V.செந்தில் பாலாஜி | அ.தி.மு.க | 80214 |
2 | வாசுகி முருகேசன் | தி.மு.க | 74830 |
3 | A. ரவி | தே.மு.தி.க | 9734 |
4 | P.K. மோகன் | பி.ஜே.பி | 1789 |
5 | M. வெங்கடராமன் | சுயேச்சை | 1396 |
6 | A.S. ஜெகநாதன் | பிஎஸ்பி | 763 |
7 | முருகேசன் ராமா | சுயேச்சை | 511 |
8 | K. கனகராஜ் | எஸ்.பி | 354 |
9 | M. முருகேசன் | சுயேச்சை | 349 |
10 | K. பாஸ்காரன் | சுயேச்சை | 248 |
11 | K.P. பாலுசாமி | சுயேச்சை | 120 |
12 | R. செல்வராஜ் | சுயேச்சை | 113 |
13 | R. பாண்டியன் | சுயேச்சை | 105 |
14 | A.K. சக்திவேல் | சுயேச்சை | 76 |
15 | R. செந்தில்குமார் | சுயேச்சை | 74 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | V. செந்தில்பாலாஜி | அ.தி.மு.க | 99738 |
2 | S. ஜோதிமணி | காங்கிரஸ் | 55593 |
3 | S. சிவமணி | பி.ஜே.பி | 2417 |
4 | B. அசோக்குமார் | பிபிஐஸ் | 681 |
5 | P. ஆதிகிருஷ்ணன் | பிஎஸ்பி | 620 |
6 | M. லோகநாதன் | சுயேச்சை | 610 |
7 | P. செந்தில்குமார் | சுயேச்சை | 522 |
8 | T. வீரமணி | சுயேச்சை | 480 |
9 | T. வேணுகோபால் | சுயேச்சை | 433 |
10 | C. பிரேம்குமார் | சுயேச்சை | 393 |
11 | K.M. பெரியசாமி | ஐஜேகே | 371 |
12 | M. பச்சையப்பன் | சுயேச்சை | 223 |
13 | R. மணிவேல் | சுயேச்சை | 156 |
14 | B.வசந்தராஜ் | சுயேச்சை | 138 |
15 | S. செல்வராஜ் | சுயேச்சை | 129 |
16 | K.S. சண்முகம் | சுயேச்சை | 129 |
17 | M. ரத்தினம் | சுயேச்சை | 125 |
18 | J. விஜய் | சுயேச்சை | 97 |
19 | M. சீனிவாசன் | சுயேச்சை | 95 |
20 | N. சீனிவாசன் | சுயேச்சை | 81 |
163031 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT