Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
படித்தவர்கள் அதிகம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் என்ற பெருமையைக் கொண்டது நாகர்கோவில் தொகுதி. குமரி மாவட்டத்தில் நகர்புற மக்களின் வாக்குகளே அதிகம் உள்ள தொகுதி இது மட்டும் தான். நாகர்கோவில் நகராட்சியின் 52 வார்டுக்கு உள்பட்ட பகுதிகள், நீண்டகரை ஏ மற்றும் பி கிராமங்கள், ஆசாரிபள்ளம், கணபதிபுரம் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது.
திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சேது லட்சுமி பாய் அரசு மேல்நிலைப் பள்ளி, நீதிமன்றம்,இப்போதைய பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கட்டிடம் உள்ளிட்ட ஏராளமான புராதான சிறப்புமிக்க வரலாற்று ஆவணங்களை தன்னகத்தே கொண்ட பெருமையுடைய தொகுதி இது. நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடை தொகுதியின் பெருமை சொல்லும் அடையாள சின்னங்களில் ஒன்று. கடந்த 1977ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற 9 சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக மூன்று முறையும், எம்.ஜி.ஆர் அதிமுக ஒரு முறையும், திமுக இரு முறையும், காங்கிரஸ் கட்சி இரு முறையும், த.மா.க ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
படித்தவர்கள் அதிகம் இருந்தும் தொகுதிக்குள் சொல்லிக் கொள்ளும்படி வேலைவாய்ப்புக்கான சூழலோ, தொழிற் கூடங்களோ இல்லை. நாகர்கோவில் நகர மக்களின் மிகப்பெரிய பிரச்னை குப்பை கிடங்கு. நகரின் மையப் பகுதியில் துர்நாற்றம் வீசும் வலம்புரிவிளை குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். நாகர் நகர மக்களின் தாகம் தீர்க்கும் முக்கடல் அணையின் நீர் மட்டம் ஏப்ரல், மே மாதங்களில் மைனஸ் மட்டத்துக்கு போகும் நிலையில், வலுவான மாற்றுத் திட்டத்தை செயல்படுத்தாமல் இன்னும் இழுத்தடிப்பு செய்கின்றனர். கோடை காலத்தில் நகர மக்கள் தண்ணீருக்கு தவம் இருக்கும் நிலை தொடர்வதும் தொகுதியின் முக்கிய பிரச்னை. பல்நோக்கு வசதியுடன் கூடிய இ.எஸ்.ஜ மருத்துவமனை நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வருவதாக மத்திய அரசு அறிவித்தும், மாநில அரசு உரிய இடம் வழங்காததால் தொழிலாளர்கள் உரிய மருத்துவ சிகிட்சை பெற முடியாமல் தவிக்கும் நிலையும் தொடர்கின்றது. இதே போல் ஓட்டை, உடைசல் பேருந்துகளும், மோசமான சாலைகளும், மித மிஞ்சிய போக்குவரத்து நெரிசலும் தொகுதியின் முக்கிய பிரச்னைகளாக தொடர்கின்றது.
தொகுதிக்குள் இந்து நாடார், கிறிஸ்தவ நாடார், வெள்ளாளர், ஆசாரி, இஸ்லாமியர்கள், சாலியர்கள், சொளராஸ்டிரர்கள், உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கலந்து உள்ளனர். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜனும், கடந்த 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட நாஞ்சில் முருகேசனும் வெற்றி பெற்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
அகத்தீசுவரம் தாலுகா (பகுதி)
நாகர்கோவில், வடிவீசுவரம், வடசேரி, நீண்டகரை -ஏ.வேம்பனூர் மற்றும் நீண்டகரை -பி கிராமங்கள்,
நாகர்கோவில் (நகராட்சி), ஆசாரிபள்ளம் (பேரூராட்சி) மற்றும் கணபதிபுரம் (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,30,088 |
பெண் | 1,33,346 |
மூன்றாம் பாலினத்தவர் | 15 |
மொத்த வாக்காளர்கள் | 2,63,449 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
2011 | A.நாஞ்சில் முருகேசன் | அதிமுக | |
2006 | A.ராஜன் | திமுக | 38.01 |
2001 | ஆஸ்டின் | அதிமுக | 44.11 |
1996 | M. மோசஸ் | த.மா.கா | 48.4 |
1991 | M. மோசஸ் | இ.தே.கா | 56.81 |
1989 | M. மோசஸ் | இ.தே.கா | 34.48 |
1984 | S. ரெத்தினராஜ் | திமுக | 47.86 |
1980 | M. வின்சென்ட் | அதிமுக | 54.76 |
1977 | M. வின்சென்ட் | அதிமுக | 54.76 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | A. ராஜன் | தி.மு.க | 45354 |
2 | S. ஆஸ்டின் | ஐ.வி.பி | 31609 |
3 | S. ரெத்தினராஜ் | மதிமுக | 21990 |
4 | T.உதயகுமார் | பாஜக | 10752 |
5 | M.பாபு | சுயேச்சை | 4098 |
6 | A.V.M.லயன் ராஜன் | தே.மு.தி.க | 3783 |
7 | P.மதுசூதனபெருமாள் | எ.பி.எச்.எம் | 695 |
8 | P. ரமேஷ் | சுயேச்சை | 317 |
9 | U. நாகூர் மீரன் பீர் முகமத் | சுயேச்சை | 235 |
10 | P. மணிகண்டன் | சுயேச்சை | 192 |
11 | K.J. ஜெயசீலன் | எல்.ஜெ.பி | 119 |
12 | J. சுரேஷ் | சுயேச்சை | 65 |
13 | P. சிதம்பரப்பிள்ளை | சுயேச்சை | 53 |
14 | P. அண்ணாதுரை | சுயேச்சை | 40 |
15 | R. இளஞ்செழியன் | சுயேச்சை | 32 |
119334 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | A.நாஞ்சில்முருகேசன் | அ.தி.மு.க | 58819 |
2 | R. மகேஷ் | தி.மு.க | 52092 |
3 | PON. ராதாகிருஷ்ணன் | பாஜக | 33623 |
4 | R. சுரேஷ் | எ.பி.எச்.எம் | 588 |
5 | R. மகேஷ் | சுயேச்சை | 500 |
6 | V. தனராஜ் | சுயேச்சை | 407 |
7 | S. சுரேஷ் | பி.எஸ்.பி | 378 |
8 | U. நாகூர் மீரான் பீர் முகமது | சுயேச்சை | 225 |
9 | E. பேச்சிமுத்து | சுயேச்சை | 149 |
10 | R. கிருஷ்ணன் | சுயேச்சை | 88 |
11 | N. இஸ்க்கிமுத்து | சுயேச்சை | 82 |
12 | S. ராமேஸ்வரன் | சுயேச்சை | 68 |
147019 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT