Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதி பல்லாவரம், கடந்த 2011-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது ஆலந்தூர் தொகுதியில் இருந்து சில பகுதிகளை பிரித்து பல்லாவரம் தொகுதி உண்டாக்கப்பட்டது. இத்தொகுதியில் பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளும், திருநீர்மலை, மீனம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளும், பொழிச்சலூர், திரிசூலம் ஆகிய ஊராட்சிகளும் அமைந்துள்ளன. குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், கீழ்க்கட்டளை உள்ளிட்டவை தொகுதியின் முக்கியமான இடங்கள். பல்லாவரம், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும். எனவே, தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களும் கணிசமான அளவு இருக்கிறார்கள். சமூக ரீதியாகப் பார்த்தால், நாயுடு சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னியர்கள் அதிகளவிலும் அதற்கு அடுத்த படியாக நாடார் சமூகத்தினரும் உள்ளனர். பல்லாவரம் பகுதியில் தென்மாவட்ட மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய பல்லாவரத்தில் (ஜமீன் பல்லாவரம்) பல இடங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் புதிதாக வீடு கட்டவும், கட்டிய வீடுகளைப் புனரமைக்க முடியாமலும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. பொது மக்களும் அரசியல் கட்சித்தலைவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தியும் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டபாடில்லை. மக்கள் மிக நெருக்கமாக வசித்து வரும் இந்தப் பகுதியில் தொல்லியல் துறையின் விதிகளைத் தளர்த்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கை. மேலும், திருநீர்மலை, திரிசூலம் பகுதியில் கல்குவாரிகளில் இருந்து வரும் தூசியால் எழும் காற்று மாசு, பம்மல், சங்கர் நகர், நாகல்கேணி பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு, அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினை, பல்லாவரம் பெரிய ஏரி பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகைமூட்டம் என பல்வேறு பிரச்சினைகளை தொகுதி மக்கள் முன்வைக்கிறார்கள்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | சி.ஆர்.சரஸ்வதி | அதிமுக |
2 | இ.கருணாநிதி | திமுக |
3 | கி.வீரலட்சுமி | தமிழர் முன்னேற்றப் படை |
4 | ஆர்.வெங்கடேசன் | பாமக |
5 | டாக்டர் ஏ.கோபி அய்யாசாமி | பாஜக |
6 | பி.சீனிவாச குமார் | நாம் தமிழர் |
கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக உறுப்பினர் பி.தனசிங் 1,05,631 வாக்குகள் எடுத்து வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 88,257 வாக்கு பெற்று தோல்வி அடைந்தார்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 2.03,283 |
பெண் | 2,03,464 |
மூன்றாம் பாலினத்தவர் | 19 |
மொத்த வாக்காளர்கள் | 4,06,766 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | பி.தன்சிங் | அதிமுக | 105631 |
2 | தா மோஅன்பரசன் | திமுக | 88257 |
3 | குமார் | எல்.எஸ்.பி | 1082 |
4 | ராஜப்பா | பிஎஸ்பி | 1074 |
5 | சாம் யேசுதாஸ் | ஐஜேகே | 1052 |
6 | அன்பரசு | புபா | 739 |
7 | வெங்கடேசன் | சுயேச்சை | 609 |
8 | ராமலிங்கம் | ஐக்கிய ஜனதா தளம் | 365 |
9 | ருக்மாங்கதன் | சுயேச்சை | 338 |
10 | R. தனசிங் | சுயேச்சை | 318 |
11 | சண்முகம் | சுயேச்சை | 311 |
12 | அருணகிரி | பிபிஐஎஸ் | 191 |
13 | ஹாரிபுல்லாஹ் | சுயேச்சை | 136 |
14 | பால்ராஜ் | சுயேச்சை | 133 |
15 | சதீஷ்குமார் | சுயேச்சை | 110 |
16 | ஸ்ரீநிவாசன் | சுயேச்சை | 109 |
200455 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT