Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று காஞ்சிபுரம் தொகுதி. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உள்ளடக்கியது. இத்தொகுதியில் பேரரிஞர் அண்ணாவின் வீடு, சங்கர மடம், காமாட்சியம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் நகராட்சி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை உள்ளன.
புள்ளம்பாக்கம், ஆரியபெரும்பாக்கம், செவிலிமேடு, தாமல், திருப்புட்குழி, வையாவூர், திம்மசமுத்திரம், சிறுவாக்கம், சிறுகாவேரிப்பாக்கம், நத்தப்பேட்டை, படுநெல்லி, சிறுவள்ளூர், கிளார் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. வேலூர் மாவட்டத்திலிருந்து காஞ்சிபுரம் வருவதற்கான பிரதான நுழைவு வாயிலாக காஞ்சிபுரம் விளங்குகிறது. இங்கு அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளன. .
மேலும், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் என பல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குறிப்பாக நெசவுத்தொழில் மற்றும் அதன் உபபொருட்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.
தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. நெசவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் மற்றும் பட்டுபூங்காவை ஏற்படுத்த வேண்டும் என்பதே தொகுதியின் முதன்மையான பிரச்னையாக கருதப்படுகிறது. மேலும், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும் மற்றும் காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைக்கிறார்கள்.
கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில், 6 முறை அதிமுகவும், 4முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. ஒருமுறை பாமகவும் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் பாமக உறுப்பினர் கமலாம்மாள், கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் சோமசுந்தரம் வெற்றிபெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | தி.மைதிலி திருநாவுக்கரசு | அதிமுக |
2 | சி.வி.எம்.பி.எழிலரசன் | திமுக |
3 | சி.ஏகாம்பரம் | தேமுதிக |
4 | பெ.மகேஷ்குமார் | பாமக |
5 | த.வாசன் | பாஜக |
6 | ம.உஷா | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
காஞ்சிபுரம் வட்டம் (பகுதி) புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல்,முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு,கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர்,வையாவீர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கள், நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு மற்றும் விப்பேடு கிராமங்கள்,
காஞ்சிபுரம் (நகராட்சி) நத்தப்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் செவிலிமேடு (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,43,793 |
பெண் | 1,53,045 |
மூன்றாம் பாலினத்தவர் | 09 |
மொத்த வாக்காளர்கள் | 2,96,847 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் | |
1 | கமலாம்பாள் | பாமக | 81366 | |
2 | மைதிலி | அதிமுக | 70082 | |
3 | ஏகாம்பரம் | தேமுதிக | 15187 | |
4 | மாரி | சுயேச்சை | 2337 | |
5 | ராகவன் | பிஜேபி | 1730 | |
6 | மனோகரன் | சுயேச்சை | 566 | |
7 | ஐயப்பன் | சுயேச்சை | 391 | |
8 | சுப்பன் | எல் ஜே பி | 362 | |
9 | சங்கர் | சுயேச்சை | 261 | |
10 | சண்முகம் | சுயேச்சை | 169 | |
11 | V.சங்கர் | சுயேச்சை | 149 | |
12 | குப்பன் | சுயேச்சை | 123 | |
172723 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 37. காஞ்சிபுரம் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | V. சோமசுந்தரம் | அ.தி,மு.க | 102710 |
2 | P.S. உலகரட்சகன் | பா.ம.க | 76993 |
3 | A.N. ராதாகிருஷ்ணன் | எஜபிபிஎம் | 2806 |
4 | M. பெருமாள் | பி.ஜே.பி | 2441 |
5 | V. வெங்கடெசநார் | எடிஎஸ்எம்கே | 1623 |
6 | E. ராஜா | சுயேட்சை | 1417 |
7 | S.M. சுப்ரமணியன் | ஜஜேகே | 1201 |
8 | P. கார்திகேயன் | பி.ஸ்.பி | 899 |
9 | M. தணிகாசலம் | சுயேட்சை | 753 |
10 | S. உமாபதி | சுயேட்சை | 420 |
11 | S. மகேஷ் | சுயேட்சை | 352 |
12 | T. செல்வராஜி | சுயேட்சை | 296 |
13 | C. சேது | சுயேட்சை | 187 |
14 | L. கருணாகரன் | சுயேட்சை | 137 |
192235 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT