Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் செய்யூர் தொகுதியும் ஒன்று. அச்சிறுப்பாக்கம் சட்டமன்ற தொகுதி கடந்த 2011ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறு சீரமைப்பின்போது செய்யூர் சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றியமைக்கப்பட்டது. கல்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு மிக்க சென்னை அணுமின்நிலையத்தை உள்ளடக்கியது. இத்தொகுதியில், இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் செய்யூர் வட்டம் மற்றும் லத்தூர், சித்தாமூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியது. மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், கல்பாக்கம், கொளத்தூர், லத்தூர், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம், சித்தாமூர், சூணாம்பேடு, பூந்தண்டலம் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகளும் உள்ளது. புகழ்பெற்ற உப்பளங்கள் மற்றும் ஆலம்பரகோட்டை ஆகியவை அமைந்துள்ளது. செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
மேலும்,இந்துக்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் எனபல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். விவசாயிகள் மற்றும் விலை நிலங்களை நம்பியுள்ள வியாபாரிகள், சுற்றுலாவாசிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.
தலைநகர் சென்னையை, தென்மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையான கிழக்கு கடற்கரை சாலையும் அமைந்துள்ளது.
தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. மாவட்டத்தின் கடைசிபகுதியில் உள்ளதால் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை. இதுவே இப்பகுதியின் முதன்மை பிரச்னையாக கருதப்படுகிறது. மீனவமக்கள் அதிகம் வசிக்கும் குப்பங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கடற்கரையில் வசிக்கும் மீனவ மக்களின் குடிசைகளை பாதுகாக்கும் வகையிலான தூண்டில் வளைவு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்பதே தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
செய்யூர் தொகுதி கடந்த 2011ம் ஆண்டு முதல் சட்ட மன்ற தேர்தலை சந்தித்தது. இதில், அதிமுகவை சேர்ந்த ராஜீ வெற்றி பெற்றுள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஏ.முனுசாமி | அதிமுக |
2 | ஆர்.டி.அரசு | திமுக |
3 | எழில்கரோலின் | விசிகே |
4 | சடையப்பன் | பாமக |
5 | சம்பத் | பாஜக |
6 | தசரதன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
செய்யூர் வட்டம்
திருக்கழுக்குன்றம் வட்டம் (பகுதி)
கிளாப்பாக்கம், பெரும்பேடு, அம்மணம்பாக்கம் (ஆர்.எப்), குன்னவாக்கம், வீராபுரம், வெங்கம்பாக்கம், ஆரம்பாக்கம், பூந்தண்டலம், குடிபெரும்பாக்கம், பேரம்பாக்கம், அமிஞ்சிக்கரை, பெரியகாட்டுப்பாக்கம், நடுவக்கரை, பாக்கம், பாண்டூர், வெள்ளப்பந்தல், வழுவாதூர், திம்மூர், வள்ளிபுரம், விளாகம், எடையாத்தூர், இரும்புலிச்சேரி, தேப்பனாம்பட்டு, அட்டவட்டம், நெரும்பூர், சின்னக்காட்டுப்பாக்கம், அங்கமாம்பட்டு, சிட்லம்பாக்கம், புன்னப்பட்டு, சோமாஸ்ப்பட்டு, சோலைக்குப்பம், இளையனார்குப்பம், விட்டலாபுரம் மி, விட்டலாபுரம் -மிமி, மேற்காண்டை, லட்டூர், சூராடிமங்கலம், கொந்தகாரிக்குப்பம், பனங்காட்டுசேரி, பொம்மராஜபுரம், நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வசுவசமுத்திரம், வயலூர் மற்றும் வெங்காடு கிராமங்கள்,
புதுப்பட்டிணம் (சென்சஸ் டவுன்)[1]
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,04,660 |
பெண் | 1,06,388 |
மூன்றாம் பாலினத்தவர் | 26 |
மொத்த வாக்காளர்கள் | 2,11,074 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | V. S . ராஜி | அதிமுக | 78307 |
2 | D. பார்வேந்தன் | வி சி க | 51723 |
3 | சங்கர் | பு பா | 2322 |
4 | ராஜி | சுயேச்சை | 2162 |
5 | சம்பத் | பிஜேபி | 1387 |
6 | காத்தவராயன் | பி எஸ் பி | 1241 |
7 | கங்காதரன் | சுயேச்சை | 1144 |
8 | முருகன் | ஐ ஜே கே | 1030 |
9 | சங்கர் | சுயேச்சை | 648 |
10 | பழனிவேல் | சுயேச்சை | 501 |
11 | சுந்தரம் | சுயேச்சை | 406 |
140871 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT