Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
1967 மற்றும் 1971 சட்டமன்ற தேர்தல்களில் தி மு க சார்பில் போட்டியிட்டு எம் ஜி ஆர் வென்ற தொகுதி இது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் சட்டப்பேவை தொகுதி வருகிறது. இந்த தொகுதி எண் 28. இது ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருக்கிறது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை சட்டப்பேரவை தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்). கவுல் பஜார் கிராமம், நந்தம்பாக்கம் (பேரூராட்சி), செயின்ட் தாமஸ்மவுண்ட் - பல்லாவரம் (கண்டோன்மெண்ட் போர்டு), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (செசன்ஸ் டவுன்) உள்ளிட்ட பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கும். தற்போதைய நிலவரப்படி மொத்தம் 3 லட்சத்து 41 ஆயிரத்து 623 வாக்காளர்கள் உள்ளன. இதில், ஆண்கள் 1 லட்சத்து 71 ஆயிரத்து 127 பேரும், பெண்கள் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 475 பேர் பெண் வாக்காளரும் உள்ளன. மற்றவர்கள் பிரிவில் 21 பேர் உள்ளனர்.
கடந்த 1967-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு 2 முறை எம்ஜிஆர் வெற்றி பெற்றார். கடந்த 2011-ல் நடத்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமசந்திரன் வெற்றி பெற்றார். பின்னர், அவர் அந்த பதவியில் இருந்து விலகியதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.என்.பி. வெங்கட்ராமன் வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் மீனம்பாக்கம் விமான நிலையம், கத்திப்பாரா மேம்பாலம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை முக்கிய அடையாளமாக இருக்கின்றன. 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துலக்காத்தாம்மன் கோயில், படைவீடு அம்மன்கோயில், ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை இந்துக்களின் முக்கிய வழிப்பாட்டு தளமாக இருக்கின்றன. மற்ற மதங்களை காட்டிலும் இந்துக்கள் அதிகமாக இருக்கின்றன. மயிலாப்பூர், மாம்பலம் இடங்களுக்கு அடுத்து அதிகமாக இந்த தொகுதியில் பிராமணர்கள் அதிகமாக வசிக்கின்றனர். தாழ்த்தப்பட்டோர், முதலியார் வகுப்பு மக்களும் அதிகளவில் இருக்கின்றனர்.
ஜிஎஸ்டி சாலையில் இருந்து உள்ளே பழவந்தாங்கல் செல்லும் சுரங்கப்பாதையை நங்கநல்லூர் 5வது பிரதான சாலை வரை இணைக்க வேண்டும். இந்த சுரங்கப்பாதை தற்போது குறுகியதாக இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பரங்கிமலையில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மொத்தம் 4 சுரங்கப்பாதைகள் இருப்பதால் கனமழை பெய்யும்போது, உள்பகுதிக்கு செல்ல போக்குவரத்து தடை ஏற்படுகிறது. மேலும், சுரங்கப்பாதையில் நிரம்பும் நீரால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, தில்லை கங்காநகர் பகுதியில் இருந்து ஜிஎஸ்டிசாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இங்குள்ள சுற்றி வட்டார பகுதிகளில் அரசு கல்லூரி எதுவும் இல்லாதால் நீண்ட தூரம் சென்று படிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெண்களுக்காக அரசு கல்லூரி தொடங்க வேண்டும், இந்த தொகுதியின் மையமான பகுதியில் அரசு பொதுமருத்துவமணை அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் | அதிமுக |
2 | தா.மோ.அன்பரசன் | திமுக |
3 | யு.சந்திரன் | தேமுதிக |
4 | இரா.சீனிவாசன் | பாமக |
5 | டாக்டர் எஸ்.சத்தியநாராயணன் | பாஜக |
6 | ஆர்.தனஞ்செயன் | நாம் தமிழர் |
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்
அய்யப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம், கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், கோவூர், சின்னபணிச்சேரி, பரணிபுத்தூர், பெரியபணிச்சேரி, மௌலிவாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தண்டலம், தரப்பாக்கம் மற்றும் இரண்டான்கட்டளை கிராமங்கள்,
மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்).
தாம்பரம் வட்டம்
கவுல் பஜார் கிராமம், O நந்தம்பாக்கம் (பேரூராட்சி), செயின்ட் தாமஸ்மவுண்ட் - பல்லாவரம் (கண்டோன்மெண்ட் போர்டு), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (செசன்ஸ் டவுன்)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,75,334 |
பெண் | 1,76,028 |
மூன்றாம் பாலினத்தவர் | 15 |
மொத்த வாக்காளர்கள் | 3,51,377 |
ஆலந்தூர் தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1967 - 2014)
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
1967 | எம்.ஜி.ஆர் | தி. மு. க |
1971 | எம்.ஜி.ஆர் | தி. மு. க |
1977 | அப்துல் ரசாக் | அதிமுக |
1980 | அப்துல் ரசாக் | அதிமுக |
1984 | ஆபிரகாம் | திமுக |
1989 | சி.சண்முகம் | திமுக |
1991 | அண்ணாமலை | அதிமுக |
1996 | சி.சண்முகம் | திமுக |
2001 | வளர்மதி | அதிமுக |
2006 | தா. மோ. அன்பரசன் | திமுக |
2011 | பண்ருட்டி இராமச்சந்திரன் | தேமுதிக |
2014 | வி. என். பி. வெங்கட்ராமன் | அதிமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | தா.மோ அன்பரசன் | திமுக | 133232 |
2 | பா வளர்மதி | அதிமுக | 115322 |
3 | விஜயகுமார் | தேமுதிக | 22866 |
4 | எச் ராஜா | பிஜேபி | 9298 |
5 | வேம்புலி | சுயேச்சை | 1148 |
6 | இதயவேந்தன் | பி எஸ் பி | 569 |
7 | கஜேந்திரகுமார் | சுயேச்சை | 463 |
8 | அகஸ்டின் | சுயேச்சை | 288 |
9 | ரமேஷ் | சுயேச்சை | 247 |
10 | வசந்த குமார் | சுயேச்சை | 236 |
11 | வெங்கடேசன் | சுயேச்சை | 231 |
12 | முருகன் | சுயேச்சை | 140 |
13 | சண்முகம் | சுயேச்சை | 131 |
14 | முனுசாமி | சுயேச்சை | 127 |
15 | ஆறுமுகம் | சுயேச்சை | 105 |
284403 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | S. ராமசந்திரன் | தேமுதிக | 76537 |
2 | DR.காயத்ரி தேவி | காங்கிரஸ் | 70783 |
3 | சத்யநாராயணன் | பிஜேபி | 9628 |
4 | எல்.அயோத்தி | சுயேச்சை | 2731 |
5 | தாமஸ் பர்னபாஸ் | பு பா | 1817 |
6 | ஆனந்த் | ஐ ஜே கே | 1265 |
7 | கண்ணன் | பி எஸ் பி | 948 |
8 | பாலாஜி | ஜேஎம் எம் | 835 |
9 | மன்சூர் அலி கான் | எம்எம்கேஎ | 787 |
10 | மீனாட்சி சுந்தரம் | எல்எஸ்பி | 552 |
11 | ராமகிருஷ்ணன் | சுயேச்சை | 368 |
12 | திலகராஜன் | சுயேச்சை | 306 |
13 | ரவி | சுயேச்சை | 277 |
14 | வரதன் | சுயேச்சை | 277 |
15 | முத்துகிருஷ்ணன் | AIPPMR | 243 |
16 | கிருஷ்ணமூர்த்தி | சுயேச்சை | 199 |
17 | ராஜேந்திரபாபு | சுயேச்சை | 159 |
18 | தினகரன் | சுயேச்சை | 145 |
19 | எழிலரசு | சுயேச்சை | 142 |
20 | முத்தழகன் | பிபிஐஎஸ் | 136 |
168135 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT