Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
ஈரோடு மாவட்டத்தின் பாசன ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ள தொகுதி. திருப்பூர், கோவை, கர்நாடக மாநில எல்லைப்பகுதி என பவானிசாகர் தொகுதி விரிந்து பறந்துள்ளது. வேட்டுவக்கவுண்டர், நாடார், கொங்கு வேளாள கவுண்டர், ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் நிறைந்த தொகுதி. புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம் என இரு நகராட்சிகள் தொகுதியில் உள்ளன. மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமை, வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், உயிரிழப்புகள், பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் பெறுதல், அரசின் சலுகைகளை பெறுவதில் உள்ள இடர்பாடுகள் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. சத்தியமங்கலத்தில் மலர்கள் அதிக அளவில் விளையும் நிலையில் அவற்றை பாதுகாக்க கிடங்கு வசதி, நறுமணப்பொருட்கள் தயாரிக்கு ஆலை போன்றவை நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துதலில் உள்ள இடர்பாடுகளும் தொடர்கிறது.
சத்தியமங்கலம், பவானிசாகர் என இரு தொகுதிகளாக இருந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொகுதி சீரமைப்பின் மூலம் பவானிசாகர் தனித்தொகுதி உருவானது. கடந்த காலத்தில் 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் அதிமுகவும், 1996ல் திமுகவும் 2001ல் அதிமுகவும், 2006ல் திமுகவும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.எல்.சுந்தரம், திமுக வேட்பாளர் லோகேஸ்வரியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | எஸ்.ஈஸ்வரன் | அதிமுக - அருந்ததியர் |
2 | ஆர்.சத்தியா | திமுக – அருந்ததியர் |
3 | பி.எல்.சுந்தரம் | இந்திய கம்யூ |
4 | என்.ஆர்.வடிவேல் | பாமக |
5 | என்.ஆர்.பழனிச்சாமி | பாஜக |
6. | ஜி.சங்கீதா | நாம் தமிழர் |
7 | டி. நாகராஜன் | கொமதேக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
சத்தியமங்கலம் வட்டம்(பகுதி)
அருளவாடி, மல்லன்குழி, தொட்டகாஜனூர், சிக்க காஜனூர், தாளவாடி, மரூர், இக்கலூர், திங்களூர், கூத்தம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர், ஹாசனூர், நெய்தாளபுரம், தெய்கனாரை, கரளவாடி, மடஹள்ளி, பையண்ணபுரம், பனகஹள்ளி, ஏரகனஹள்ளி, தொட்ட முதுக்கரை, கெட்டவாடி, கொங்கஹள்ளி, தலமலை, தாசரிபாளையம், சிக்கரசம்பாளையம், பட்டவர்த்தியம்பாளையம், ராஜன்நகர், புதுப்பீர் கடவு, புங்கர், கொத்தமங்கலம், இக்கரைத்தத்தப்பள்ளி, பகுத்தாம்பாளையம், இகக்ரைநெகமம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை, சதமுகை, கோணமுலை, அக்கரை நெகமம், பூசாரிபாளையம், அக்கரை தத்தப்பள்ளி, தொட்டம்பாளையம், முடுக்கந்துரை, தொப்பம்பாளையம், கரைதொட்டம்பாளையம், செண்பகப்புதூர், இண்டியம்பாளையம், மாக்கினாம்கோம்பை, அரசூர், உக்கரம், வின்னப்பள்ளி, குரும்பபாளையம், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, பனையம்பள்ளி, சுங்ககாரன்பாளையம், புங்கம்பள்ளி, தச்சுபெருமாபாளையம், நல்லூர், மாராயிபாளையம், மாதம்பாளையம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி கிராமங்கள்.
கெம்பநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), சத்தியமங்கலம் (நகராட்சி), அரியப்பம்பாளையம் (பேரூராட்சி), பவானிசாகர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சைபுளியம்பட்டி (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,18,814 |
பெண் | 1,20,910 |
மூன்றாம் பாலினத்தவர் | 16 |
மொத்த வாக்காளர்கள் | 2,39,740 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1967 | இராமராசன் | திமுக | 26980 |
1971 | வி. கே. இராமராசன் | திமுக | 28003 |
1977 | வி. கே. சின்னசாமி | அதிமுக | 23078 |
1980 | ஜி. கே. சுப்ரமணியம் | அதிமுக | 38557 |
1984 | வி. கே. சின்னசாமி | அதிமுக | 52539 |
1989 | வி. கே. சின்னசாமி | அதிமுக (ஜெ) | 39716 |
1991 | வி. கே. சின்னசாமி | அதிமுக | 63474 |
1996 | வி. எ. ஆண்டமுத்து | திமுக | 63483 |
2001 | பி. சிதம்பரம் | அதிமுக | 53879 |
2006 | ஓ. சுப்ரமணியனம் | திமுக | 65055 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1967 | எம். வேலுசாமி | காங்கிரஸ் | 22187 |
1971 | எம். வேலுசாமி | ஸ்தாபன காங்கிரஸ் | 20992 |
1977 | சம்பூர்ணம் சுவாமிநாதன் | திமுக | 21631 |
1980 | சம்பூர்ணம் சுவாமிநாதன் | திமுக | 27852 |
1984 | வெள்ளியங்கிரி என்கிற எஸ். வி. கிரி | ஜனதா | 35743 |
1989 | பி. எ. சுவாமிநாதன் | திமுக | 32296 |
1991 | ஓ. சுப்ரமணியனம் | திமுக | 20887 |
1996 | வி. கே. சின்னசாமி | அதிமுக | 40032 |
2001 | ஓ. சுப்ரமணியணம் | திமுக | 43604 |
2006 | சிந்து இரவிச்சந்திரன் | திமுக | 45039 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | O. சுப்பிரமணியம் | தி.மு.க | 65055 |
2 | சிந்து ரவிச்சந்திரன் | அ.தி.மு.க | 45039 |
3 | K.சுப்பிரமணியன் | தே.மு.தி.க | 10399 |
4 | ஆறுமுகம் | சுயேட்சை | 2440 |
5 | வெங்கட்ராஜ் | சுயேட்சை | 1782 |
6 | P. தாமரைமானாலன் | பி.ஜே.பி | 1567 |
7 | வீரன் | சுயேச்சை | 966 |
8 | V.T. ரங்கசாமி | பி.எஸ்.பி | 439 |
9 | M. பரமேஸ்வரமூர்த்தி | சுயேட்சை | 399 |
128086 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | P.L. சுந்தரம் | சி.பி.ஐ | 82890 |
2 | R. லோகேஸ்வரி | தி.மு.க | 63487 |
3 | R. பழனிசாமி | பி.ஜே.பி | 4440 |
4 | J. ஜெயாராமன் | சுயேச்சை | 2848 |
5 | S.R. ஆறுமுகம் | பி.எஸ்.பி | 2287 |
6 | M. முருகன் | சுயேச்சை | 1969 |
7 | B. கோபால் | சுயேச்சை | 1709 |
8 | N. பழனிசாமி | சுயேச்சை | 1194 |
9 | P. முருகன் | சுயேச்சை | 1067 |
10 | K. முருகன் | சுயேச்சை | 895 |
11 | R. சாந்தகுமாரி | சுயேட்சை | 725 |
163511 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT