Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
ஈரோடு மாநகராட்சியின் வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட தொகுதி. கொங்கு வேளாள கவுண்ட, முதலியார், ஆதி திராவிடர், பிராமணர் சமுதாயத்தினர் தொகுதியில் பரவலாக உள்ளனர். தொழிலாளர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்களை அதிகமாக தொகுதியில் உள்ளனர். வட மாநிங்களை சேர்ந்த கணிசமானவர்கள் இத்தொகுதியில் உள்ளனர். பேருந்து நிலையம், ஜவுளிச்சந்தை, காய்கறிச்சந்தை, கடை வீதி, கல்வி நிலையங்கள் என நகரின் பிரதான பகுதிகள் தொகுதிக்குள் அடங்கி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் பூதாகரமான பிரச்சினையாக உள்ளது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதில் உள்ள குறைகள், மாநகராட்சியின் செயல்பாடு, பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேறாதது போன்றவை தொகுதியின் பிரச்சினைகளாக உள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொண்டு வரப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வராததால், கோடையில் குடிநீர் பஞ்சம் நீடித்து வருகிறது. கடந்த 1984ம் ஆண்டு அதிமுகவும், 89ம் ஆண்டு திமுகவும், 1991ம் ஆண்டு அதிமுகவும், 1996ம் ஆண்டு திமுகவும், 2001ம் ஆண்டு அதிமுகவும், 2006ம் ஆண்டு திமுகவும் வென்ற இந்த தொகுதியில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சு.முத்துசாமியை தோற்கடித்து, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்றார். கட்சியின் சட்டமன்ற கொறடாவாக பதவி வகித்த சந்திரகுமார், எதிர்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் தொகுதியில் பெரிய அளவில் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க முடியவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு :
2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கே.எஸ்.தென்னரசு | அதிமுக |
2 | வி.சி.சந்திரகுமார் | மக்கள் தேமுதிக |
3 | பி.பொன்சேர்மன் | தேமுதிக |
4 | பி. ராஜேந்திரன் | பாமக |
5 | பி. ராஜேஸ்குமார் | பாஜக |
6 | ஏ. அலாவூதீன் | நாம் தமிழர் |
7 | எஸ். ஜெகநாதன் | கொமதேக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி) ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேருராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,04,635 |
பெண் | 1,08,063 |
மூன்றாம் பாலினத்தவர் | 5 |
மொத்த வாக்காளர்கள் | 2,12,703 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | V.C. சந்திரகுமார் | தே.மு.தி.க | 69166 |
2 | S. முத்துசாமி | தி.மு.க | 58522 |
3 | P. ரஜேஷ்குமார் | பி.ஜே.பி | 3244 |
4 | R. மின்னல் முருகேஷ் | சுயேட்சை | 2439 |
5 | C. மாயவன் | பி.எஸ்.பி | 628 |
6 | S. சங்கமித்திரை | சுயேச்சை | 456 |
7 | G. கருணாநிதி | சுயேச்சை | 441 |
8 | S. செல்வராஜ் | சுயேச்சை | 408 |
9 | A.R. நாகராஜன் | சுயேச்சை | 363 |
10 | G. தயாலன் | சுயேச்சை | 214 |
11 | A. சிராஜ் | சுயேச்சை | 190 |
136071 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT