Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
பர்கூர், தாமரைக்கரை என 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களைக் கொண்ட அந்தியூர் தொகுதி கடந்த 2006ம் ஆண்டு வரை தனித்தொகுதியாக இருந்தது. 2011ம் ஆண்டு பொதுத்தொகுதியாக மாறிய அந்தியூர் தொகுதியில் வேளாள கவுண்டர், முதலியார், நாயக்கர், நாயுடு, லிங்காயத்துகள், ஆதிதிராவிடர், வன்னியர்கள் என பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்தியூர் பத்ரகாளியம்மன், புதுப்பாளையம் குருசாமி கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றவை. வறட்சியான பகுதியாகவும், மிகவும் பின் தங்கிய பகுதியாகவும் உள்ள அந்தியூர் தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. நீர் ஆதாரங்களை பெருக்க தேவையான திட்டங்கள் இல்லாதது, விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தப்படாதது தொகுதியில் தீராத பிரச்சினையாக உள்ளது. மலை கிராமங்கள் மட்டுமல்லாது தொகுதி முழுமதும் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையடையாத நிலை தொடர்கிறது. வன விலங்குகளால் ஏற்பாடும் பாதிப்புகளை போக்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை இல்லாததும் விவசாயிகளை பாதித்து வருகிறது. அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 1984, 1989, 1991 தேர்தல்களில் அதிமுகவும், 1996ம் ஆண்டு திமுகவும், 2001 தேர்தலில் பாமகவும், 2006ல் திமுகவும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் என்.கே.கே.பி.ராஜாவை தோற்கடித்து, அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ்.ரமணீதரன் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கே.ஆர். ராஜா கிருஷ்ணன் | அதிமுக |
2 | ஏ.ஜி.வெங்கடாசலம் | திமுக |
3 | எம்.கே.ராஜா சம்பத் | தேமுதிக |
4 | சி.கோபால் | பாமக |
5 | பி.ஜி.மோகன்குமார் | பாஜக |
6. | கே. மணிமேகலை | நாம் தமிழர் |
7 | டி. ராஜா | கொமதேக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி)
புஞ்சைதுறைம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம், மற்றும் சந்தராபுரம் கிராமங்கள், வாணிப்புத்தூர் (பேரூராட்சி), கூகலூர் (பேரூராட்சி), மற்றும் பி.மேட்டுப்பாளையம் (பேரூராட்சி), பவானி வட்டம் (பகுதி) பர்கூர், கொமராயனூர், புதுர்ர், சென்னம்பட்டி, எண்னமங்கலம், சங்கரபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள்
அந்தியூர் (பேரூராட்சி) மற்றும் அத்தாணி (பேரூராட்சி
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,03,397 |
பெண் | 1,04,167 |
மூன்றாம் பாலினத்தவர் | 3 |
மொத்த வாக்காளர்கள் | 2,07,567 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1962 | பெருமாள் ராசு | காங்கிரஸ் | 22533 |
1967 | ஈ. எம். நடராஜன் | திமுக | 34877 |
1971 | ம. நடராசன் | திமுக | 32691 |
1977 | ப. குருசாமி | அதிமுக | 23950 |
1980 | ச. குருசாமி | அதிமுக | 34498 |
1984 | ப. மாத்தையன் | அதிமுக | 53825 |
1989 | வி. பெரியசாமி | அதிமுக (ஜெ) | 26702 |
1991 | வி. பெரியசாமி | அதிமுக | 52592 |
1996 | ப. செல்வராசு | திமுக | 52535 |
2001 | இரா. கிருட்டிணன் | பாமக | 53436 |
2006 | ச. குருசாமி | திமுக | 57043 |
2011 | ச. ச. ரமணிதரன் | அதிமுக | 78496 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1962 | காளிமுத்து | திமுக | 11984 |
1967 | குருமூர்த்தி | காங்கிரஸ் | 27409 |
1971 | க. ச. நஞ்சப்பன் | சுதந்திரா | 22 |
1977 | எ. பழனி | ஜனதா | 11423 |
1980 | வடிவேல் | திமுக | 20662 |
1984 | ச. லட்சுமி | திமுக | 22479 |
1989 | க. இராமசாமி | திமுக | 24740 |
1991 | இராதாருக்மணி | திமுக | 21530 |
1996 | ம. சுப்பிரமணியம் | அதிமுக | 27541 |
2001 | ப. செல்வராசு | திமுக | 35374 |
2006 | ம. சுப்பிரமணியம் | அதிமுக | 37300 |
2011 | பெ. ராஜா | திமுக | 53242 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | S. குருசாமி | தி.மு.க | 57043 |
2 | M. சுப்பிரமணியம் | அ.தி.மு.க | 37300 |
3 | P. ஜெகதிஸ்வரன் | தே.மு.தி.க | 11574 |
4 | P. ராஜு | சுயேச்சை | 1763 |
5 | V. பழனிசாமி | பி.ஜே.பி | 1446 |
6 | P. மன்னாதன் | சுயேச்சை | 784 |
7 | P. குருசாமி | சுயேச்சை | 709 |
8 | G. குருவன் | சுயேச்சை | 579 |
111198 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | S.S. ராமணிதரன் | அ.தி.மு.க | 78496 |
2 | N.K.K.P. ராஜா | தி.மு.க | 53242 |
3 | K. பொங்கியகவுண்டர் | சுயேச்சை | 2269 |
4 | A.P.S. பர்குணன் | பி.ஜே.பி | 1988 |
5 | A.M. ஷேக்தாவூத் | சுயேச்சை | 1528 |
6 | A. வேலுமணி | யு.எம்.கே | 1493 |
7 | A. பரமசிவன் | பி.எஸ்.பி | 1132 |
8 | K. வடிவேல் | சுயேச்சை | 556 |
9 | V.M. சின்னப்பொண்ணுவாத்தியார் | சுயேச்சை | 544 |
10 | G. சக்திவேல் | சுயேச்சை | 511 |
11 | S. சந்திரகுமார் | சுயேச்சை | 439 |
12 | S. ஆனந்தன் | சுயேச்சை | 406 |
13 | P. ஈஸ்வரன் | சுயேச்சை | 318 |
142922 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT