Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
கோபி நகராட்சி, பெரியகொடிவேரி, லக்கம்பட்டி, காசிபாளையம், எலத்தூர், கொளப்பலூர், நம்பியூர் போன்ற பேரூராட்சிகள், 45க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கொண்டது கோபி தொகுதி. கொடிவேரி அணை, வயல்வெளிகள், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் என இயற்கை செழிப்போடு உள்ள கோபி திரைப்படத்துறையினர் விருப்ப பூமியாக இருந்து வருகிறது.
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, கீழ்பவானி வாய்க்கால் பாசன வாய்க்காலின் மூலம் தொகுதியின் பெரும்பாலான விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நெல், கரும்பு என பணப்பயிர்களை விளைவதால், கோபி தொகுதி வளமான தொகுதியாகவே இருந்து வருகிறது. கரும்புக்கு அரசு அறிவித்த ஆதார விலையை ஆலைகள் வழங்காதது, நெல் கொள்முதலில் ஏற்படும் பிரச்சினைகள், பாசனத்திற்கு நீர் திறப்பதில் உள்ள குளறுபடிகள் என விவசாயம் சார்ந்த தொடர் பிரச்சினைகள் தொகுதியில் தொடர்ந்து வருகின்றன. கோபி நகராட்சி மட்டுமல்லாது சிறு கிராமங்கள் வரை அடிப்படை வசதிகள் சென்று சேர்ந்துள்ளது. கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தினர் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர்.
கோபி சட்டமன்ற தொகுதி தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 1980ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டுவரை நடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுகவின் முன்னணி பிரமுகராக விளங்கிய கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார். அதன்பின் 1996ம் ஆண்டு மட்டும் கோபி தொகுதி அதிமுக வசம் சென்றது. அதன்பின் 2001, 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஏழாவது முறையாக கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சிவராஜ் தோல்வியடைந்தார். ஐந்து அரசுகளில் அமைச்சர் பதவி வகித்துள்ள கே.ஏ.செங்கோட்டையனுக்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படுமானால், ஒரே தொகுதியில் 9வது முறையாக போட்டியிடும் வேட்பாளர் என்ற அந்தஸ்து கே.ஏ.செங்கோட்டையனுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கே.ஏ.செங்கோட்டையன் | அதிமுக |
2 | எஸ்.வி.சரவணன் | காங்கிரஸ் |
3 | எம். முனுசாமி | மார்க்சிஸ்ட் |
4 | பி. குப்புசாமி | பாமக |
5 | கே.கணபதி | கொங்குநாடு ஜனநாயக கட்சி - பாஜக |
6. | எஸ்.கவுரீசன் | நாம் தமிழர் |
7 | என்.எஸ்.சிவராஜ் | கொமதேக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கோபிசெட்டிபாளையம் (நகராட்சி)
எலத்தூர் (பேரூராட்சி)
கொளப்பலூர் (பேரூராட்சி)
நம்பியூர் (பேரூராட்சி)
பெரியகொடிவேரி (பேரூராட்சி)
லக்கம்பட்டி (பேரூராட்சி)
காசிபாளையம் (ஜி) (பேரூராட்சி)
சத்தியமங்கலம் வட்டம் (பகுதி) - கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம், மற்றும் செல்லப்பம்பாளையம் கிராமங்கள்
கோபிசெட்டிபாளையம் வட்டம்(பகுதி) - புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை கிராமம், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம் பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம் மற்றும் நிச்சாம்பாளையம் கிராமங்கள்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,18,604 |
பெண் | 1,24,037 |
மூன்றாம் பாலினத்தவர் | 6 |
மொத்த வாக்காளர்கள் | 2,42,647 |
சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1952 | நல்லா கவுண்டர் | காங்கிரஸ் | 21045 |
1957 | பி. ஜி. கருப்பண்ணன் | காங்கிரஸ் | 27889 |
1962 | முத்துவேலப்ப கவுண்டர் | காங்கிரஸ் | 31977 |
1967 | கே. எம். ஆர். கவுண்டர் | சுதந்திரா | 31974 |
1971 | ச. மு. பழனியப்பன் | திமுக | 35184 |
1977 | என். கே. கே. இராமசாமி | அதிமுக | 25660 |
1980 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 44703 |
1984 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 56884 |
1989 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக (ஜெ) | 37187 |
1991 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 66423 |
1996 | ஜி. பி. வெங்கிடு | திமுக | 59983 |
2001 | ச. ச. இரமணீதரன் | அதிமுக | 60826 |
2006 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 55181 |
2011 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 94872 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1952 | பி. கே. நல்ல கவுண்டர் | சுயேச்சை | 20321 |
1957 | மாரப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 11126 |
1962 | சுந்தரமூர்த்தி | சுதந்திரா | 17249 |
1967 | மு. கவுண்டர் | காங்கிரஸ் | 27403 |
1971 | கே. எம். சுந்தரமூர்த்தி | சுதந்திரா | 20623 |
1977 | என். ஆர். திருவேங்கடம் | காங்கிரஸ் | 19248 |
1980 | கே. எம். சுப்ரமணியம் | காங்கிரஸ் | 29690 |
1984 | எம். ஆண்டமுத்து | திமுக | 31879 |
1989 | டி. கீதா | ஜனதா | 22943 |
1991 | வி. பி. சண்முக சுந்தரம் | திமுக | 27211 |
1996 | கே. எ. செங்கோட்டையன் | அதிமுக | 45254 |
2001 | வி. பி. சண்முக சுந்தரம் | திமுக | 31881 |
2006 | ஜி. வி. மணிமாறன் | திமுக | 51162 |
2011 | சி.என்.சிவராஜ் | கொமுக | 52960 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K.A. செங்கோட்டையன் | அ.தி.மு.க | 55181 |
2 | G.V. மணிமாறன் | தி.மு.க | 51162 |
3 | G.S. நடராஜன் | தே.மு.தி.க | 10875 |
4 | R. ரங்கசாமி | சுயேச்சை | 1518 |
5 | R. வெள்ளியங்கிரி | பி.ஜே.பி | 1399 |
6 | T. பெரியசாமி | பி.எஸ்.பி | 903 |
7 | மினியன் | சுயேச்சை | 478 |
121516 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K.A. செங்கோட்டையன் | அ.தி.மு.க | 94872 |
2 | N.S. சிவராஜ் | கே.என்.எம்.கே | 52960 |
3 | C.S. வெங்கடாசலம் | சுயேச்சை | 10095 |
4 | N. சென்னையன் | பி.ஜே.பி | 3408 |
5 | R. ரவிசேகரன் | சுயேச்சை | 2349 |
6 | K. மோகன்ராஜ் | சுயேச்சை | 2122 |
7 | G.S. கண்ணப்பன் | பி.எஸ்.பி | 2009 |
8 | P. அன்பழகன் | சுயேச்சை | 1085 |
9 | N. சிவகுமார் | யு.எம்.கே | 1072 |
10 | A. மூர்த்தி | சுயேச்சை | 766 |
11 | K. செங்கோட்டையன் | சுயேச்சை | 764 |
12 | M. ஜெயராமன் | ஐ.ஜே.கே | 756 |
13 | M. மாரிமுத்து | சுயேச்சை | 709 |
14 | V. குமார் | சுயேச்சை | 631 |
15 | S. அன்னக்கொடி | சுயேச்சை | 586 |
174184 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT