Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டுக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட ஓன்பது ஊராட்சிகள் உள்ளன. தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாக உள்ளது. திண்டுக்கல்லுக்கு பெயர் வாங்கித்தந்த பூட்டுத்தொழில் நசிந்துவருவதை மேம்படுத்தவேண்டும் என்பது பூட்டு தொழில் சார்ந்த தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. தோல் தொழிற்சாலைகளில் நிறைய பேர் பணிபுரிந்தனர். தற்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பலரும் வேலையிழந்து பிழைப்பிற்காக வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் தண்ணீர் போதுமான அளவு இல்லாததால் விவசாயம் செழிக்கவில்லை. நகருக்கு வெளியே செல்லும் குடகனாற்றில் தோல்கழிவுகள் கலந்து நிலத்தடிநீரும் மாசுபட்டுள்ளது. திண்டுக்கல் நகரின் முக்கிய பிரச்சனையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்கு தீர்வாக பஸ்ஸ்டாண்டை நகருக்கு வெளியே கொண்டுசெல்லவேண்டும் என நகர வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் கோரிவந்தபோதும் கண்டுகொள்ளாத நிலை தான் உள்ளது. வெளியூர் பஸ்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பஸ்ஸ்டாண்டிற்கு வந்து சேர சாலை வசதிகளும் குறுகலானவைகளாக உள்ளது. இதனால் காலை,மாலை நேரங்களில் நகரில் அதிக நெரிசல் ஏற்படுகிறது.
திண்டுக்கல் நகரில் பாதாளசாக்கடைத்திட்ட பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவருகிறது. ஆனால் இதுவரை முழுமையடையாததால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். சாலைகளை அடிக்கடி தோண்டுவது தற்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வைகை ஆற்றில் இருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் தந்த பேரணைத்திட்டத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை. ஆத்து£ர் நீர்த்தேக்கம், காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டும் வாரம் ஒரு முறை தான் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் நகரில் குடிநீர் பிரச்சனை உள்ளது.
1977 முதல் நடந்த 9 தேர்தல்களில் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு முறையும், அதிமுக இரண்டு முறையும், திமுக ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 2001 முதல் தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டு எம்எல்ஏ வாக உள்ளார் கே.பாலபாரதி.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | சி.சீனிவாசன் | அதிமுக |
2 | எம்.பஷீர்அகமது | திமுக |
3 | என்.பாண்டி | மார்க்சிஸ்ட் கம்யூ |
4 | ஆர்.பரசுராமன் | பாமக |
5 | டி.ஏ.திருமலைபாலாஜி | பாஜக |
6 | பா.கணேசன் | நாம் தமிழர் |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,21,457 |
பெண் | 1,26,840 |
மூன்றாம் பாலினத்தவர் | 39 |
மொத்த வாக்காளர்கள் | 2,48,336 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2006 சட்டமன்ற தேர்தல் | 132. திண்டுக்கல் | ||
வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
1 | K. பாலபாரதி | சி.பி.ஐ | 66811 |
2 | N. செல்வராகவன் | ம.தி.மு.க | 47862 |
3 | G. கார்த்திகேயன் | தே.மு,தி.க | 27287 |
4 | J.C.D. பிரபாகர் | எஸ்.பி | 2970 |
5 | T.A. திருமலை பாலாஜி | பி.ஜே.பி | 2134 |
6 | K. சிவானந்தன் | பி.எஸ்.பி | 1290 |
7 | M. முத்துவீரன் | ஆர்.எஸ்.பி | 1154 |
8 | M. அருணச்சலம் | பா.ம.க | 1107 |
9 | A. பழனிசாமி | சுயேச்சை | 1045 |
10 | S. தனிக்கொடி | எ.ஐ.எப்.பி | 632 |
11 | N. நாகசாமி நாடார் | ஜே.டி | 456 |
152748 |
2011 சட்டமன்ற தேர்தல் | 132. திண்டுக்கல் | ||
வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
1 | K. பாலபாரதி | சி.பி.எம் | 86932 |
2 | J. பால் பாஸ்கர் | பாமக | 47817 |
3 | P.G. போஸ் | பி.ஜே.பி | 5761 |
4 | V. கணேசன் | எ.பி.எச்.எம் | 2014 |
5 | M. பழனிசாமி | சுயேச்சை | 1107 |
6 | M. முத்துவீரன் | அர்.எஸ்.பி | 945 |
7 | P. பாஸ்கரன் | பி.எஸ்.பி | 711 |
8 | S. நாகேந்திரன் | ஐ.ஜே.கே | 586 |
9 | M. நாகூர் கனி | சுயேச்சை | 502 |
10 | A. அபுதாஹிர் | சுயேச்சை | 271 |
11 | A. நாக்கனிகா | சுயேச்சை | 270 |
12 | I. செல்வராஜ் | எ.ஐ.ஜே.எம்.கே | 258 |
13 | S. கிரேசி மேஸ்ரல்லோ | சுயேச்சை | 241 |
14 | P. ஆரோக்கியசாமி | பு.பா | 232 |
15 | S. கார்த்திகேயன் | சுயேச்சை | 158 |
147805 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT