Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் பெரிய தொகுதியாக அமைந்துள்ளது வேடசந்தூர் சட்டசபை தொகுதி. இத்தொகுதியில் வேடசந்து£ர், பாளையம், எரியோடு, வடமதுரை, அய்யலூர் பேரூராட்சிகள் உள்ளன. வேடசந்து£ர், குஜிலியம்பாறை, வடமதுரை ஆகிய மூன்று ஒன்றியங்களுக்குட்பட்ட 54 கிராம ஊராட்சிகள் அடங்கியுள்ளன. வறண்ட பகுதியான இந்த தொகுதியில் முழுமையாக விவசாயத்தை நம்பி இருக்க முடியாதநிலை இப்பகுதி மக்களுக்கு உள்ளது. எனவே மக்கள் அதிகளவில் தொகுதியில் உள்ள தனியார் நு£ற்பாலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். நு£ற்பாலை தவிர வேறு தொழில்கள் இப்பகுதியில் இல்லை என்பதால் பலர் வருமானத்திற்கு வெளியூர்களுக்கு சென்று வேலைபார்க்கும் நிலை தான் உள்ளது. இந்த தொகுதி மக்களுக்கு தொகுதிக்குள்ளேயே வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் நிரந்தரமாக பெரிய தொழிற்சாலைகள் இல்லாதது மிகப்பெரிய குறையாக மக்கள் கருதுகின்றனர். அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்சனை உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு வரும் காவிரி குடிநீர் திட்டம் மூலம் குழாய் வரும் பாதைகளில் உள்ள கிராமங்களில் ஓரளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தொகுதிக்குள் ஓடும் குடகனாறு மாசு அடைந்து இதில் வரும் நீர், குடிநீர் மட்டுமல்லாது விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. காரணம் திண்டுக்கல் அருகே கடந்து வரும்போது ஆற்றில் தோல்கழிவு நீர் கலப்பதால் ஆற்றுநீரை பயன்படுத்தமுடியாத அளவிற்கு மாசுபட்டுள்ளது. இதற்கு மக்கள் நிரந்தர தீர்வுகோரியும் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை. மேலும் வேடசந்து£ர் தாலுகா பரப்பளவில் மாவட்டத்திலேயே பெரிய தாலுகாவாக உள்ளது. இதை இரண்டாகப்பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக்கொண்டு புதிய தாலுகா உருவாக்கவேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. வேடசந்து£ர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் காரணாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
1977 முதல் கடந்த தேர்தல் வரை நடந்த 9 தேர்தல்களில் அதிமுக ஆறு முறையும், திமுக இரண்டு முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 1984 தேர்தல் முதல் அதிமுக, திமுக கட்சிகள் இரண்டும் மாறி மாறி தொகுதியை கைப்பற்றி வந்துள்ளன. 2006 ல் நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மா.தண்டபாணி வெற்றிபெற்றார்.கடந்த 2011 தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.பழனிச்சாமி வெற்றிபெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | பி.பரமசிவம் | அதிமுக |
2 | ஆர்.சிவசக்திவேல் | காங் |
3 | கே.பாலசுப்பிரமணி | தேமுதிக |
4 | பி.பழனிச்சாமி | பாமக |
5 | எஸ். சிவரஞ்சனி | ஐஜேகே |
6 | சு.மோகன்ராஜ் | நாம் தமிழர் |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,21,588 |
பெண் | 1,24,586 |
மூன்றாம் பாலினத்தவர் | 4 |
மொத்த வாக்காளர்கள் | 2,46,178 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2006 சட்டமன்ற தேர்தல் | 133. வேடசந்தூர் | ||
வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
1 | M. தண்டபாணி | காங்கிரஸ் | 68953 |
2 | S. பழனிசாமி | அ.தி.மு.க | 54195 |
3 | S. வெங்கடசலம் | தே.மு.தி.க | 16693 |
4 | A. பரமன் | சுயேச்சை | 2263 |
5 | N. பழனிசாமி | பி.ஜே.பி | 2180 |
6 | D. தயாலன் | பி.எஸ்.பி | 1445 |
7 | P. செல்வராஜ் | சுயேச்சை | 802 |
8 | S. தண்டப்பானி | சுயேச்சை | 711 |
9 | P. சிவசுப்பிரமணி | சுயேச்சை | 586 |
10 | S. ராஜா | என்.சி.பி | 460 |
11 | E. ராஜா | ஆர்.எல்.டி | 430 |
12 | A. இஸ்மாயில் | சுயேச்சை | 378 |
13 | P. குமார் | ஜே.டி | 274 |
149370 |
2011 சட்டமன்ற தேர்தல் | 133. வேடசந்தூர் | ||
வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
1 | S. பழனிசாமி | அ.தி.மு.க | 104511 |
2 | M. தண்டபானி | காங்கிரஸ் | 53799 |
3 | P. வரதராஜ் | சுயேச்சை | 2018 |
4 | N. ராஜன் | சுயேச்சை | 1643 |
5 | M. பழனிசாமி | பி.எஸ்.பி | 1640 |
6 | M. ராமன் | பி.ஜே.பி | 1635 |
7 | R. லக்ஷ்மி | சுயேச்சை | 1259 |
8 | P. பாலசுப்பிரமணி | சுயேச்சை | 688 |
9 | T.V. கோவிந்தராஜ் | சுயேச்சை | 338 |
10 | V. கலைசெல்வன் | பு.பா | 300 |
11 | J.P. பெரியசாமி | சுயேச்சை | 277 |
12 | R. சிவராஜ் | சுயேச்சை | 267 |
13 | D. தயாளன் | எல்.ஜே.பி | 209 |
14 | V. செல்வராஜ் | சுயேச்சை | 208 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT