Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் நிலக்கோட்டை தொகுதி மட்டும் ‘தனி’ தொகுதியாக உள்ளது. நிலக்கோட்டை ஒன்றியம், வத்தலக்குண்டு ஒன்றித்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி, அம்மையநாயக்கனு£ர் பேரூராட்சி ஆகியவை தொகுதியில் அடங்கியுள்ளது. தொகுதியின் எல்லையில் வைகை ஆறு ஓடினாலும் நிலக்கோட்டை தொகுதி மக்கள் பாசன வசதி பெறமுடியாதநிலை உள்ளது. குடிநீருக்காக மட்டும் ஆற்றில் கிணறு அமைத்து பயன்படுத்துகின்றனர். ஆண்டில் மூன்று மாதம் மட்டுமே ஆற்றில் தண்ணீர் செல்லும் என்பதால் கோடை காலத்தில் கிணறுகள் வறண்டு, குடிநீர் வினியோகத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் கிராமப்புற மக்கள் குடிநீருக்கு சிரமப்படவேண்டிய நிலை உள்ளது. குடிநீர் பிரச்சனை இந்த தொகுதியில் முழுமையாக தீர்க்கப்படவில்லை. மல்லிகை பூ உள்ளிட்ட பூக்கள் விவசாயம் இந்த தொகுதியில் முக்கியமானது. மதுரை மல்லி என்று பெயர் பெற்றதே நிலக்கோட்டை பழைய மதுரை மாவட்டத்தில் இணைந்து இருந்ததால் தான். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பூக்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. நிலக்கோட்டையில் பூ மார்க்கெட் போதிய வசதியின்றி உள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். வாரச்சந்தையிலும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. பூக்கள் அதிகம் விளையும் பகுதி என்பதால் சென்ட் தொழிற்சாலை கொண்டுவரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வறண்ட பூமியாக இருந்தாலும் விவசாயத்தையே இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். குறைந்த அளவு தண்ணீர் தேவையுள்ள பயிர்களை பயிரிட்டு சமாளிக்கின்றனர். 58 கிராம கால்வாய்த்திட்ட பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளது. பெரியாறு பிரதான கால்வாயிலிருந்து நிலக்கோட்டை பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டுசென்றால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் விவசாய பாசனத்திற்கும் பயன்படும். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 1977 முதல் இந்த தொகுதியில் நடைபெற்ற 9 சட்டசபை தேர்தல்களில் அதிமுக நான்கு முறை வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஏ.எஸ்.பொன்னம்மாள் மூன்று முறையும், சுயேச்சையாக ஒரு முறையும் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் ராமசாமி வெற்றிபெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஆர்.தங்கத்துரை | அதிமுக |
2 | மு.அன்பழகன் | திமுக |
3 | கே.ராமசாமி | தேமுதிக |
4 | என்.ராமமூர்த்தி | பாமக |
5 | ஆர்.அழகுமணி | பாஜக |
6 | அ.சங்கிலிபாண்டியன் | நாம் தமிழர் |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,08,248 |
பெண் | 1,09,822 |
மூன்றாம் பாலினத்தவர் | 5 |
மொத்த வாக்காளர்கள் | 2,18,075 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2006 சட்டமன்ற தேர்தல் | 130. நிலக்கோட்டை | ||
வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
1 | S. தேன்மொழி | அ.தி.மு.க | 53275 |
2 | K. செந்தில்வேல் | காங்கிரஸ் | 46991 |
3 | M. ரவிச்சந்திரன் | தே.மு.தி.க | 16795 |
4 | P. பிச்சையம்மாள் | பி.ஜே.பி | 1422 |
5 | A. சேதுராமன் | பி.எஸ்.பி | 1311 |
6 | S. பிரகலாதன் | சுயேட்சை | 1197 |
7 | P. நல்லுசாமி | எஸ்.பி | 466 |
8 | R. நடராஜன் | சுயேச்சை | 419 |
9 | V. தனலக்ஷ்மி | சுயேச்சை | 374 |
10 | C. செந்தில்குமார் | சுயேச்சை | 307 |
11 | S. ராஜேந்திரன் | எல்.சி.பி | 281 |
122838 |
2011 சட்டமன்ற தேர்தல் | 130. நிலக்கோட்டை | ||
வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
1 | A. ராமசாமி | புதிய தமிழகம் | 75124 |
2 | K. ராஜங்கம் | காங்கிரஸ் | 50410 |
3 | B. ஜான்பாண்டியன் | டி.எம்.எம்.கே | 6882 |
4 | V. சின்னப்பன் | பி.ஜே.பி | 3952 |
5 | S. செல்வராஜ் | எல்.ஜே.பி | 2440 |
6 | S. சிவகுமார் | சுயேச்சை | 1869 |
7 | T. சிவபாலன் | ஐ.ஜே.கே | 1669 |
8 | P. பிச்சையம்மாள் | பி.எஸ்.பி | 897 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT