Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
பழநி தொகுதியில் ஆன்மிகதலம் மட்டுமல்லாது சுற்றுலாத்தலமான கொடைக்கானலும் அமைந்துள்ளது. இதனால் அனைத்து மக்களும் வந்துசெல்லக்கூடிய பகுதியாக பழநி தொகுதி உள்ளது. 2006 வரை தனித்தொகுதியாக இருந்த பழநி, தொகுதி சீரமைப்பில் பொதுத்தொகுதியாக 2011 தேர்தலில் மாறியது. மேலும் பெரியகுளம் தொகுதியில் இருந்த கொடைக்கானல் ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பகுதி கிராமங்கள் முழுவதும் பழநி தொகுதியில் சேர்க்கப்பட்டது. பழநி, கொடைக்கானல் நகராட்சிகள், பாலசமுத்திரம், நெய்காரப்பட்டி, ஆயக்குடி, பண்ணைக்காடு ஆகிய பேரூராட்சிகள், பழநி ஒன்றியத்தின் 17 ஊராட்சிகள் பழநி தொகுதியில் அடங்கியுள்ளது.
தொகுதி முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள் தான் அதிகம். பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதேபோல் கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலாபயணிகள் வந்துசெல்கின்றனர். பக்தர்கள், சுற்றுலாபயணிகளின் அடிப்படை தேவைகள் நீண்டகொண்டே செல்கிறது. ஆனால் எதுவும் நிறைவேற்றப்படாதநிலை தான் உள்ளது. பழநியில் பக்தர்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது வெளியூர்களில் இருந்து வருபவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. உள்ளூர் மக்களும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காதநிலையில் நகரின் மத்தியில் அமைந்துள்ள வையாபுரி கண்மாயை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. விவசாய பகுதியான பழநி தொகுதியில் சண்முகநதி, பச்சையாறு, கண்மாய்கள், குளங்கள் என அதிகளவில் இருந்தும் இவை முறையாக து£ர்வாரி பாரமரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் விவசாயிகளிடம் உள்ளது. பச்சையாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டவேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. கொடைக்கானல் நகரின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண குண்டாறு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும் வாகனங்கள் நிறுத்த முறையாக இடம்வசதி செய்துகொடுக்கவில்லை. ரோட்டோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சுற்றுலாபயணிகள் முழுமையாக சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமல் திரும்பும் நிலையும் உள்ளது. சுற்றுலாமேம்பாடு என்பது பெயரளவில் கூட இல்லை என்பது சுற்றுலாபயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. அறுவடை செய்யப்படும் மலை காய்கறிகளை சந்தைப்படுத்த மதுரை சந்தைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள வத்தலக்குண்டு பகுதியிலேயே மெகா சந்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 1977 முதல் நடைபெற்ற 9 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக தலா மூன்று முறையும், திமுக இரண்டு முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. 1991 முதல் அதிமுக, திமுக மாறிமாறி இத்தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போது அதிமுக சார்பில் என்.வேணுகோபாலு எம்எல்ஏ வாக உள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ப.குமாரசாமி | அதிமுக |
2 | இ.பெ.செந்தில்குமார் | திமுக |
3 | வ.ராஜமாணிக்கம் | மார்க்சிஸ்ட் |
4 | பி.நாகராஜன் | பாமக |
5 | என்.கனகராஜ் | பாஜக |
6 | கு.வினோத்ராஜசேரன் | நாம் தமிழர் |
கொடைக்கனல் தாலுகா (பகுதி)
அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி(வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி(வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு, தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தன்நாயக்கன்பட்டி, ஏ.காளையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்களம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிக்க நாயக்கன்பட்டி, கோதைமங்களம், பச்சலை நாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, பழனி, சிவகிரிபட்டி மற்றும் தட்டான்குளம் கிராமங்கள்,
பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி) மற்றும் நெய்காரபட்டி (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,27,430 |
பெண் | 1,29,641 |
மூன்றாம் பாலினத்தவர் | 28 |
மொத்த வாக்காளர்கள் | 2,57,099 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
இதுவரை வென்றவர்கள் 1977 முதல்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
2006 | M.அன்பழகன் | திமுக | 47.5 |
2001 | M.சின்னசாமி | அதிமுக | 55.65 |
1996 | T.பூவேந்தன் | திமுக | 57.87 |
1991 | A.சுப்புரத்தினம் | அதிமுக | 68.14 |
1989 | N.பழனிவேல் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 33.21 |
1984 | ஏ.எஸ்.பொன்னம்மாள் | இ.தே.கா | 66.27 |
1980 | N.பழனிவேல் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 53.12 |
1977 | N.பழனிவேல் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 34.53 |
2006 சட்டமன்ற தேர்தல் | 127.பழநி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | M. அன்பழகன் | தி.மு.க | 57181 |
2 | S. பிரேமா | அ.தி.மு.க | 46272 |
3 | P.K. சுந்தரம் | தே.மு.தி.க | 11369 |
4 | சின்னப்பன் | பி.ஜே.பி | 1651 |
5 | S. பெரியசாமி | சுயேச்சை | 1580 |
6 | S. விஜயகுமார் | பி.எஸ்.பி | 849 |
7 | P. சாமிகண்ணு | சுயேச்சை | 478 |
8 | K. துண்டையன் | சுயேச்சை | 418 |
9 | K. குமார் | சுயேச்சை | 319 |
10 | M. குப்புசாமி | சுயேச்சை | 269 |
120386 |
2011சட்டமன்ற தேர்தல் | 127.பழநி | ||
வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
1 | K.S.N. வேணுகோபாலு | அ.தி.மு.க | 82051 |
2 | I.P. செந்தில்குமார் | தி.மு.க | 80297 |
3 | K. தீனதயாளன் | பி.ஜே.பி | 1745 |
4 | A. வெங்கடசாமி | சுயேச்சை | 1442 |
5 | R. சிவகுமார் | சுயேச்சை | 1066 |
6 | P. ஜெயசந்திரன் | எல்.ஜே.பி | 884 |
7 | K. தாயார் சுல்தான் | பி.எஸ்.பி | 547 |
8 | R. செல்வகுமார் | சுயேச்சை | 433 |
9 | T. லதா | சுயேச்சை | 290 |
10 | G. நாகேந்திரன் | சுயேச்சை | 262 |
11 | K. சின்னராஜ் | சுயேச்சை | 251 |
12 | N. ஈஸ்வரன் | சுயேச்சை | 224 |
13 | C. கண்ணன் | சுயேச்சை | 160 |
14 | A. அன்பரசன் | சுயேச்சை | 151 |
15 | N.V. இளங்கோவன் | சுயேச்சை | 81 |
169884 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT