Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
தருமபுரி மாவட்டத்தின் சட்டப் பேரவை தொகுதிகளில் ஒன்றான அரூர் 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் விவசாயத்திற்கு ஏற்ற மண் வளம் இருப்பதால் பெரும்பாலானவர்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். அரூர், மொரப்பூர் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த தொகுதியில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தின் பிரதான ரயில் நிலையமான மொரப்பூர் இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. ஓரளவு பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோயில் அரூருக்கு அருகிலுள்ள தீர்த்தமலையில் தான் உள்ளது. இந்த தொகுதியில் ஆதி திராவிடர் இன மக்கள் அதிக அளவிலும், கொங்கு வேளாளர், வன்னியர், பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் கணிசமான அளவிலும் உள்ளனர். இதேபோல, இஸ்லாமியர், கிறித்தவர்களும் இங்கே குறிப்பிடும் அளவிற்கு வசிக்கின்றனர்.
1952-ல் இந்தத் தொகுதி எதிர்கொண்ட முதல் சட்டப் பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளரான துரைசாமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அதன் பின்னர், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும், காங்கிரஸ் 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2006 மற்றும் 2011 ஆகிய இரு சட்டப் பேரவை தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த டில்லிபாபு சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1962-ம் ஆண்டு முதல் இந்த தொகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித் தொகுதியாக இருந்து வருகிறது.
பிரச்சினைகள்:
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பூமிக்கடியில் மாலிப்டினம் என்ற உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான தயாரிப்புகளுக்கு பயன்படும் இந்த உலோகத்தை வெட்டியெடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. போதிய தரம் இல்லை என்பதால் இது தொடர்பான பணிகள் நிலுவையில் உள்ளது. வேலை வாய்ப்பை பெருக்க உதவும் வகையில் விரைவில் மாலிப்டினம் ஆலை அமைக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இந்த திட்டம் நிறைவேறினால் சிறந்த விளைச்சல் தரும் விளைநிலங்களும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என ஒரு தரப்பினர் வருத்தத்தில் உள்ளனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட மலை கிராம மக்கள் போதிய வாழ்வாதாரம் இன்றி புரோக்கர்கள் மூலமாக ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். அங்கே காவல்துறையின் கடும் நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்கின்றனர். இதுபோன்று செல்பவர்களை கட்டுப்படுத்த அந்தந்த பகுதியிலேயே வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஆர்.முருகன் | அதிமுக |
2 | எஸ்.ராஜேந்திரன் | திமுக |
3 | கே.கோவிந்தசாமி | விசிக |
4 | எஸ்.முரளி | பாமக |
5 | பி.வேடியப்பன் | பாஜக |
6 | கே.ரமேஷ் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அரூர் வட்டம்
பாப்பிரெட்டிபட்டி வட்டம் (பகுதி)
ஆண்டிப்பட்டிமூ, கொளகம்பட்டி, நம்பிப்பட்டி பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், அண்ணாமலைஅள்ளி, ஜம்மனஅள்ளி, பறையப்பட்டி, தேவராஜபாளையம், புழுதியூர், கொக்கராப்பட்டி, மாளகப்பாடி, சித்தேரி, வாச்சாத்தி, எருமியாம்பட்டி, கோம்பூர், சின்னமஞ்சவாடி, மஞ்சவாடி, கல்லாத்துப்பட்டி, நடுப்பட்டி, நொணங்கனூர், எலந்தைசூட்டப்பட்டி, பட்டுகோணாம்பட்டி, நச்சிக்குட்டி (ஆர்.எம்), அம்மாபாளையம் மற்றும் குள்ளம்பட்டி
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,14,305 |
பெண் | 1,11,015 |
மூன்றாம் பாலினத்தவர் | 7 |
மொத்த வாக்காளர்கள் | 2,25,327 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | எ. துரைசாமி கவுண்டர் | சுயேச்சை | 27806 | 28.14 |
1957 | பி. எம். முனுசாமி கவுண்டர் | காங்கிரஸ் | 26172 | 23.13 |
1962 | சி. மாணிக்கம் | திமுக | 26879 | 41.33 |
1967 | என். தீர்த்தகிரி | காங்கிரஸ் | 27565 | 48.09 |
1971 | எஸ். எ. சின்னராஜூ | திமுக | 33039 | 54.26 |
1977 | எம். அண்ணாமலை | இபொக(மார்க்சியம்) | 20042 | 34.69 |
1980 | சி. சபாபதி | அதிமுக | 40009 | 57.66 |
1984 | ஆர். இராஜமாணிக்கம் | அதிமுக | 60106 | 66.96 |
1989 | எம். அண்ணாமலை | இபொக(மார்க்சியம்) | 28324 | 31.68 |
1991 | அபராஞ்சி | காங்கிரஸ் | 66636 | 58.56 |
1996 | வேதம்மாள் | திமுக | 70561 | 55.59 |
2001 | வி. கிருஷ்ணமூர்த்தி | இபொக(மார்க்சியம்) | 70433 | 53.04 |
2006 | பி. டில்லிபாபு | இபொக(மார்க்சியம்) | 71030 | --- |
2011 | பி. டில்லிபாபு | இபொக (மார்க்சியம்) | 77516 | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | நஞ்சப்பன் | காங்கிரஸ் | 19601 | 19.83 |
1957 | எம். கே. மாரியப்பன் | காங்கிரஸ் | 25676 | 22.69 |
1962 | எம். கே. மாரியப்பன் | காங்கிரஸ் | 22411 | 34.46 |
1967 | என். ஆறுமுகம் | திமுக | 27017 | 47.14 |
1971 | எம். பொன்னுசாமி | காங்கிரஸ் (ஸ்தாபன) | 24159 | 39.68 |
1977 | கே. சுருட்டையன் | ஜனதா கட்சி | 12470 | 21.59 |
1980 | டி. வி. நடேசன் | காங்கிரஸ் | 27401 | 39.49 |
1984 | எம். அண்ணாமலை | இபொக (மார்க்சியம்) | 27799 | 30.97 |
1989 | எ. அன்பழகன் | அதிமுக(ஜெ) | 26447 | 29.58 |
1991 | பி. வி. காரியம்மாள் | பாமக | 24172 | 21.24 |
1996 | ஜெ. நடேசன் | காங்கிரஸ் | 34158 | 26.91 |
2001 | டி. பெரியசாமி | திமுக | 36954 | 27.83 |
2006 | கே. கோவிந்தசாமி | விசிக | 57337 | --- |
2011 | நந்தன் | விசிக | 50812 | --- |
2006 சட்டமன்ற தேர்தல் | 61. அரூர் | ||
வரிசஎண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் வாக்குகள் |
1 | P. தில்லிபாபு | சி.பி.ஐ | 71030 |
2 | K. கோவிந்தசாமி | வி.சி.கே | 57337 |
3 | P. அர்ஜுனன் | தே.மு.தி.க | 15754 |
4 | P. அம்பேத்கர் | பி.ஜே.பி | 3566 |
5 | P. முருகன் | சுயேச்சை | 2959 |
6 | R. ராஜி | பி.எஸ்.பி | 1907 |
7 | M. திருமால் | சுயேச்சை | 1466 |
8 | V. கலைமணி | சுயேச்சை | 1392 |
155411 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 61. அரூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | P. தில்லிபாபு | சி.பி.எம் | 77703 |
2 | B.M. நந்தன் | வி.சி.கே | 51200 |
3 | P. பார்த்திபன் | சுயேச்சை | 5290 |
4 | S. ராஜேந்திரன் | சுயேச்சை | 4844 |
5 | K. சாமிக்கண்ணு | பி.ஜே.பி | 3777 |
6 | A. ஆதிமுலம் | சுயேச்சை | 2149 |
7 | T. அன்புதீபன் | சுயேச்சை | 2119 |
8 | S. புத்தமணி | ஐ.ஜே.கே | 1974 |
9 | P. சின்னசாமி | பி.எஸ்.பி | 1216 |
150272 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT