Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் ஒன்று பென்னாகரம். இது 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதி. பென்னாகரம் வட்டம் முழுவதும், பாலக்கோடு வட்டத்தின் சில பகுதிகளும் இந்த தொகுதியில் அடக்கம். இந்த தொகுதி மக்களில் பெரும்பகுதியினர் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். அதேபோல, மாவட்டத்தில் முதலில் வறட்சியால் பாதிக்கப்படுவது இந்த தொகுதி தான். எனவே பென்னாகரம் தொகுதியில் இருந்து பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
தஞ்சையை நன்செய் பூமியாக வாழவைத்துக் கொண்டிருக்கும் காவிரியாறு கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் நுழையும் இடம் இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. மேலும், புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லும் இந்த தொகுதியில் தான் உள்ளது. இதுவரை பென்னாகரம் தொகுதி 14 சட்டப் பேரவை தேர்தல்களையும், ஒரு இடைத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ளது. முதல் தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் கந்தசாமி என்பவர் வெற்றி பெற்றார். இதுதவிர, திமுக 4 முறையும், காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தலா 2 முறையும், ஜனதா கட்சி, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1989-ல் சுயேட்சையாக நஞ்சப்பன்(தற்போது இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இதே தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர்) என்பவர் வெற்றி பெற்றார். 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் வென்ற பெரியண்ணன் உடல்நலக் குறைவால் இடையில் உயிரிழந்தார். எனவே 2010-ல் நடந்த இடைத்தேர்தலில் அவரது மகன் இன்பசேகரன் திமுக சார்பில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில், இந்து, இஸ்லாம், கிறித்த மத மக்கள் வசிக்கின்றனர். இந்துக்களில் வன்னியர் சமூக மக்கள் அதிக அளவிலும், ஆதி திராவிடர் உள்ளிட்ட இதர சமூக மக்கள் அடுத்தபடியாகவும் வசிக்கின்றனர்.
பிரச்சினைகள்:
பிழைப்புத் தேடி புலம்பெயரும் மக்களின் மறுவாழ்வுக்காக நிரந்தர வேலை வாய்ப்புக்கான வழிகளை இந்த இந்த தொகுதியில் ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா தலமான ஒகேனக்கல்லை அதன் இயற்கை தன்மை மாறாமல் மேலும் மேம்படுத்தி வருவாயை பெருக்கும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பு தொடர்ந்து ஒலித்து வருகிறது. இந்த தொகுதியின் நிலவியல் அமைப்பு சிறு சிறு மலை பகுதிகளைக் கொண்டது. இங்கே பொருத்தமான இடங்களில் சிறந்த திட்டமிடுதலுடன், வலிமையான தடுப்பணைகளை அமைத்தால் விவசாயம் செழிக்கும். ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் பெரும்பாலானவை தண்ணீரை வெளியேற்றி விடும் அளவிற்கு தரமற்றவையாக உள்ளது. இந்த தொகுதியில் இன்றுவரை நடந்து மட்டுமே செல்லக் கூடிய வகையில் சாலை வசதிக்கு ஏங்கும் சில மலைக் கிராமங்கள் உண்டு.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கே.பி.முனுசாமி | அதிமுக |
2 | பி.என்.பி.இன்பசேகரன் | திமுக |
3 | என்.நஞ்சப்பன் | இந்திய கம்யூனிஸ்ட் |
4 | ஆர்.அன்புமணி | பாமக |
5 | ஜி.சிவகுமார் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பென்னாகரம் வட்டம்
பாலக்கோடு வட்டம் (பகுதி)
செட்டிஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, பி.கொல்லஅள்ளி, புலிக்கரை, ஜாகீர்பர்கூர், செல்லியம்பட்டி, பூகானஅள்ளி, செக்கோடி, காளப்பனஅள்ளி, யேகாரஅள்ளி, சிட்டிகானஅள்ளி, குத்தலஅள்ளி, காட்டனஅள்ளி, கருக்கமாரண்அள்ளி, மோதுசூலஅள்ளி, நேரலமருதஅள்ளி, பத்தலஅள்ளி, போத்தலஅள்ளி, பூமாண்டஅள்ளி, மல்லிகுட்டை, மற்றும் தோமலஅள்ளி, கிராமங்கள்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,17,353 |
பெண் | 1,09,201 |
மூன்றாம் பாலினத்தவர் | 6 |
மொத்த வாக்காளர்கள் | 2,26,560 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | எஸ். கந்தசாமி கவுண்டர் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 8050 | 29.32 |
1957 | ஹேமலதா தேவி | காங்கிரஸ் | 8791 | 31.59 |
1962 | எம். வி. காரிவேங்கடம் | திமுக | 26911 | 53.86 |
1967 | பி. கே. சி. முத்துசாமி | காங்கிரஸ் | 27913 | 49.2 |
1971 | என். மாணிக்கம் | திமுக | 33298 | 52.36 |
1977 | கே. அப்புனு கவுண்டர் | ஜனதா கட்சி | 17591 | 32.13 |
1980 | பி. தீர்த்த ராமன் | காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் | 34590 | 52.74 |
1984 | எச். ஜி. ஆறுமுகம் | அதிமுக | 44616 | 54.98 |
1989 | என். நஞ்சப்பன் | சுயேச்சை | 15498 | 21.09 |
1991 | வி. புருசோத்தமன் | அதிமுக | 49585 | 51.79 |
1996 | ஜி. கே. மணி | பாமக | 34906 | 31.63 |
2001 | ஜி. கே. மணி | பாமக | 49125 | 44.08 |
2006 | பி. என். பெரியண்ணன் | திமுக | 74109 | --- |
2010 | பி. என். பி. இன்பசேகரன் | திமுக | --- | |
2011 | என். நஞ்சப்பன் | இ பொ க | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | எம். என். இராஜா செட்டியார் | சுயேச்சை | 6870 | 25.02 |
1957 | டி. கே. குருநாத செட்டியார் | சுயேச்சை | 5536 | 19.89 |
1962 | எஸ். ஹேமலதா தேவி | காங்கிரஸ் | 17303 | 34.63 |
1967 | என். மாணிக்கம் | திமுக | 26570 | 46.84 |
1971 | பி. கே. சி. முத்துசாமி | காங்கிரஸ் (ஸ்தாபன) | 30291 | 47.64 |
1977 | கிருஷ்ணன் | அதிமுக | 16932 | 30.92 |
1980 | கே. மருமுத்து | திமுக | 27481 | 41.9 |
1984 | என். நஞ்சப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 25518 | 31.45 |
1989 | பி. சீனிவாசன் | அதிமுக(ஜெ) | 14555 | 19.81 |
1991 | என். எம். சுப்ரமணியம் | பாமக | 30757 | 32.12 |
1996 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34500 | 31.26 |
2001 | கே. என். பெரியண்ணன் | சுயேச்சை | 34729 | 31.16 |
2006 | எஸ். ஆர். வெற்றிவேல் | அதிமுக | 47177 | --- |
2010 | அதிமுக | --- | ||
2011 | - |
2006 சட்டமன்ற தேர்தல் | 58. பென்னாகரம் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | P.N. பெரியண்ணன் | தி.மு.க | 74109 |
2 | S.R. வெற்றிவேல் | அ.தி.மு.க | 47177 |
3 | P. தண்டபானி | தே.மு.தி.க | 10567 |
4 | V. முத்துலட்சுமி | சுயேச்சை | 9871 |
5 | M. பாலமுருகன் | சுயேட்சை | 1738 |
6 | E. பெரியண்ணன் | சுயேச்சை | 1269 |
7 | K. முருகன் | சுயேட்சை | 1010 |
8 | P. கந்தசாமி | பி.ஜே.பி | 933 |
9 | R. பாலு | சுயேச்சை | 717 |
10 | M. சேகர் | பி.எஸ்.பி | 472 |
11 | M. சுகுமார் | சுயேச்சை | 451 |
12 | A. உதயசங்கர் | சுயேச்சை | 421 |
13 | R. மாணிக்கம் | எஸ்.பி | 406 |
14 | T. பழனி | சுயேச்சை | 344 |
15 | P. சின்னசாமி | சுயேச்சை | 231 |
16 | ஆண்டி | சுயேச்சை | 216 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 58. பென்னாகரம் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | N. நஞ்சப்பன் | சி.பி.ஐ | 80028 |
2 | P.N.P. இன்பசேகரன் | தி.மு.க | 68485 |
3 | M. முனுசாமி | சுயேட்சை | 3047 |
4 | K.P. கந்தசாமி | பி.ஜே.பி | 2660 |
5 | R. சண்முகம் | சுயேட்சை | 1546 |
6 | M. வெங்கடேசன் | பி.எஸ்.பி | 1478 |
7 | P. முனியப்பன் | சுயேச்சை | 1208 |
8 | K.K. சாமிகண்ணு | சுயேச்சை | 853 |
9 | A. முனிராஜ் | சுயேச்சை | 685 |
10 | P. பாலசுப்பிரமணியன் | சுயேச்சை | 675 |
11 | C. இளவரசன் | சுயேச்சை | 650 |
12 | K. பன்னீர்செல்வம் | சுயேச்சை | 502 |
13 | R. கமலாநாதன் | சுயேச்சை | 471 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT