Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
தருமபுரி சட்டப் பேரவை தொகுதி தருமபுரி மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள தொகுதி. 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி இதுவரை 14 சட்டப் பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 15-வது சட்டப் பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த தொகுதியில் பொன் விழா கொண்டாடிய அரசு கலைக் கல்லூரி உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியும் உண்டு. இதுதவிர, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் நிறைய உள்ளது. தருமபுரி சட்டப் பேரவை தொகுதியில் தருமபுரி, நல்லம்பள்ளி ஆகிய இரு வட்டங்கள் அடங்கும். தருமபுரி, நல்லம்பள்ளி ஆகியவை ஊராட்சி ஒன்றியங்களாகவும் உள்ளன. இந்த இந்து மத மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.(சமூக வாரியாக எனில், வன்னியர் இன மக்கள் அதிக அளவிலும், முதலியார், ஆதி திராவிடர், செட்டியார், கொங்கு வேளாளர், நாடார் உள்ளிட்டோர் குறிப்பிட்ட அளவிலும் வசிக்கின்றனர்) இதுதவிர, இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் உள்ளனர்.
இந்த தொகுதியில் 1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ராஜகோபால் என்பவர் வெற்றி பெற்றார். அதேபோல 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் சுயேட்சை வேட்பாளர் வீரப்பன் என்பவர் வெற்றிபெற்றார். தொகுதி தொடங்கப்பட்டது முதல் 2011 வரை நடந்த 14 சட்டப் பேரவை தேர்தல்களில் திமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாமக தலா 2 முறையும், அதிமுக, ஜனதா கட்சி, தேமுதிக ஆகியவை தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2006-2011 காலகட்டத்தில் பாமக வேலுச்சாமியும், 2011-2016 காலகட்டத்தில் தேமுதிக பாஸ்கரும் சட்டப் பேரவை உறுப்பினர்கள்.
பிரச்சினைகள்:
தருமபுரி தொகுதியில் சிப்காட் வளாகம் அமைக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. வேலை தேடி வெளியூர் செல்லும் நிலையை மாற்ற எதிர்பார்க்கப்படும் இந்த திட்டம் தொடர்ந்து ஏட்டளவிலேயே பேசப்பட்டு வருகிறது. இதுதவிர அதியமான்கோட்டை, வெண்ணாம்பட்டி உள்ளிட்ட 4 இடங்களில் தடையற்ற போக்குவரத்துக்காக ரயில்வே மேம்பாலம் தேவையாக உள்ளது. இதுவும் நீண்ட நாட்கள் ஏட்டளவிலேயே இருந்த நிலையில், சமீபத்திய தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்கள் முன்னர் தான் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி நிலவியல் ரீதியாக வடிகால் அமைப்புடன் அமைந்திருந்தபோதும் தொடர்ந்து சுகாதாரமற்ற, அழுக்கடைந்த நகராட்சியாகவே இருந்து வருகிறது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | பி.டி.இளங்கோவன் | அதிமுக |
2 | தடங்கம் பி.சுப்பிரமணி | திமுக |
3 | வி.இளங்கோவன் | தேமுதிக |
4 | எம்.ஆறுமுகம் | பாஜக |
6 | ஆர்.ருக்மணிதேவி | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தருமபுரி வட்டம் (பகுதி) எச்சன அள்ளி, மூக்கனஅள்ளி, பாலவாடி, கடகத்தூர், ஏ.ரெட்டிஹள்ளி, பாப்பிநாய்க்கனஹள்ளி , அதகப்பாடி, தளவாய்ஹள்ளி, சோமேனஅள்ளி, பங்குநத்தம், கோணங்கிஹள்ளி, கும்பலப்பாடி, நத்ததஹள்ளி, தடங்கம், விருபாட்சிபுரம், ஏ.ஜெட்டிஅள்ளி, அதியமான்கோட்டை, பாலஜங்கமனஹள்ளி, நாகர்கூடல், நெக்குந்தி, எர்ரபையனஹள்ளி, ஏலகிரி, பாகலஹள்ளி, நல்லம்பள்ளி, லளிகம், மாதேமங்கலம், தின்னஹள்ளி, மிட்டாரெட்டிஹள்ளி, பூதனஅள்ளி, சிவாடி, பாளையம், டொக்குப்போதனஹள்ளி, போலனஹள்ளி, மானியதஹள்ளி, கம்மம்பட்டி, தொப்பூர் டி, கணிகாரஹள்ளி, கே.தொப்பூர் (ஆர்.எப்) வெள்ளேகவுண்டன்பாளையம் மற்றும் அன்னசாகரம், கிராமங்கள்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,27,510 |
பெண் | 1,24,541 |
மூன்றாம் பாலினத்தவர் | 76 |
மொத்த வாக்காளர்கள் | 2,52,127 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 – 2006 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | பி. ஆர். இராஜகோபால கவுண்டர் | சுயேச்சை | 7262 | 25.65 |
1957 | எம். கந்தசாமி கண்டர் | காங்கிரஸ் | 11661 | 35.19 |
1962 | ஆர். எஸ். வீரப்ப செட்டியார் | சுயேச்சை | 24191 | 40.81 |
1967 | எம். எஸ். கவுண்டர் | திமுக | 36258 | 53.02 |
1971 | ஆர். சின்னசாமி | திமுக | 39861 | 54.16 |
1977 | பி. கே. சி. முத்துசாமி | ஜனதா கட்சி | 26742 | 42.3 |
1980 | எஸ். அரங்கநாதன் | அதிமுக | 33977 | 46.12 |
1984 | ஆர். சின்னசாமி | திமுக | 46383 | 54.21 |
1989 | ஆர். சின்னசாமி | திமுக | 32794 | 45.62 |
1991 | பி. பொன்னுசாமி | காங்கிரஸ் | 53910 | 51.11 |
1996 | கே. மனோகரன் | திமுக | 63973 | 55.28 |
2001 | கே. பாரி மோகன் | பாமக | 56147 | 46.65 |
2006 | எல். வேலுசாமி | பாமக | 76195 | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | ஆர். எஸ். வீரப்ப செட்டியார் | சுயேச்சை | 6984 | 25.63 |
1957 | ஆர். எஸ். வீரப்ப செட்டி | சுயேச்சை | 11459 | 34.58 |
1962 | எம். சுப்ரமணிய கவுண்டர் | திமுக | 18754 | 31.64 |
1967 | டி. என். வடிவேல் | காங்கிரஸ் | 29567 | 43.23 |
1971 | டி. என். வடிவேல் | காங்கிரசு (ஸ்தாபன) | 27834 | 37.82 |
1977 | டி. எஸ். சண்முகம் | அதிமுக | 21556 | 34.1 |
1980 | டி. என். வடிவேல் | காங்கிரஸ் | 32472 | 44.08 |
1984 | எஸ். அரங்கநாதன் | அதிமுக | 37929 | 44.33 |
1989 | பி. பொன்னுசாமி | காங்கிரஸ் | 20243 | 28.16 |
1991 | ஆர். சின்னசாமி | திமுக | 27017 | 25.61 |
1996 | அரூர் மாசி | காங்கிரஸ் | 26951 | 23.29 |
2001 | கே. மனோகரன் | திமுக | 45173 | 37.54 |
2006 | வி. எஸ். சம்பத் | மதிமுக | 45988 | --- |
2006 ச ட்டமன்ற தேர்தல் | 59. தர்மபுரி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | L. வேலுசாமி | பாமக | 76195 |
2 | V.S. சம்பாத் | மதிமுக | 45988 |
3 | A. பாஸ்கர் | தே.மு.தி.க | 17030 |
4 | M. ஜெகநாதன் | சுயேச்சை | 1424 |
5 | D. பாபு | சுயேச்சை | 1391 |
6 | K. ஞானவேலவன் | சுயேச்சை | 1146 |
7 | R. பூபதி | பி.ஜே.பி | 996 |
8 | K. கோவிந்தராஜ் | சி.பி.ஐ | 759 |
9 | K. செல்வம் | பி.எஸ்.பி | 572 |
10 | H.M. சம்பத் | சுயேச்சை | 566 |
11 | J. பாண்டியராஜன் | பி.டி.எம்.கே | 500 |
12 | M.K. கந்தசாமி | சுயேச்சை | 321 |
13 | D. மகேந்திரன் | சுயேச்சை | 277 |
14 | P. ராமகிருஷ்ணன் | சுயேச்சை | 276 |
15 | C. சம்பாத் | சுயேச்சை | 267 |
147708 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 59. தர்மபுரி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | A. பாஸ்கர் | தே.மு.தி.க | 76943 |
2 | P. சாந்தமூர்த்தி | பாம்க | 72900 |
3 | P.S. ராஜா | சுயேச்சை | 6937 |
4 | K. பிரபாகரன் | பி.ஜே.பி | 2832 |
5 | K. வெங்கடேஷ் | சுயேச்சை | 2630 |
6 | R. சிவன் | சுயேச்சை | 1714 |
7 | C. வெங்கடசலம் | சுயேச்சை | 1080 |
8 | K. செல்வம் | பி.எஸ்.பி | 1068 |
9 | P. பிரபு | சுயேச்சை | 911 |
10 | S. நல்லேந்திரன் | சுயேச்சை | 670 |
11 | G. சின்னசாமி | சுயேச்சை | 563 |
168248 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT