Published : 23 Apr 2016 03:41 PM
Last Updated : 23 Apr 2016 03:41 PM

தருமபுரி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. பாலக்காடு வட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்பல அள்ளி அணைக்கு – தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே –என்னேகொள்புதூர் என்ற இடத்தில் அமைய உள்ள புறக்கால்வாய்த் திட்டம் மீண்டும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2. மொரப்பூர் பகுதியில் பால் குளிரூட்டு நிலையம் அமைக்கப்படும்.

3. தருமபுரி – அரூர் சாலை மொரப்பூர் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்.

4. தென்பெண்ணையாற்றில் சென்னாக்கல் என்னுமிடத்தில் தடுப் அணை அமைத்து உபரிநீர் வரும் காலங்களில் ஏரிகளில் நிரப்பி நீர்ப்பாசன வசதி அதிகரிக்கப்படும்.

5. தருமபுரி மாவட்டத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்கப்படும்.

6. கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லக் கால்வாய் அமைத்துத் தரப்படும்.

7. தருமபுரி மாவட்டக் கூட்டுறவு சர்க்கரை ஆலை தரம் உயர்த்தப்பட்டு பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

8. தருமபுரி மாவட்டக் கூட்டுறவு சர்க்கரைஆலையில் உள்ள துணைமின் நிலையத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

9. ஒகேனக்கல் நீர் மின் திட்டம் கொண்டு வரப்படும்.

10. சின்னாறு அணையில் உபரி நீர் பாலக்கோடு வட்டம் ஜெர்த்தலாவ் வாய்க்காலிலிருந்து புலிக்கரை ஏரி வரை உள்ள 16 ஏரிகளை நிரப்பி பாசன வசதி விரிவுபடுத்தப்படும்.

11. சின்னாற்றில் கட்டப்பட்டுள்ள பங்களா அணைக்கட்டிலிருந்து வெளியேறும் உபரிநீரை, சின்னாற்றின் குறுக்கே, மாரண்டஅள்ளி அணைக்கட்டை போன்று, மேலும் ஒரு தடுப்பணையை உரிய இடத்தில் கட்டி செங்கன்பசவந்தலாவ் ஏரிக்குச் செல்லும் கால்வாயுடன் சேர்த்து பாலக்கோடு , தருமபுரி, பெண்ணாகரம் வட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய ஏரிகளில் நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதுடன் பாசன வசதியும் மேம்படுத்தப்படும்.

12. கழக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட பெண்ணாகரம் தாலுகா மருத்துவமனைக்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகளும், சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும், நவீன மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

13. பாலக்கோட்டில் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

14. பாலக்கோட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

15. வத்தல்மலை நகரில் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

16. தொங்கனூரில் பொதியன்பள்ளம் அணை தூர்வாரப்படும்.

17. கோட்டப்பட்டியிலுள்ள சின்ன அம்மன் ஏரி, பெரிய அம்மன் ஏரி ஆகியன தூர்வாரப்படும்.

18. வாணியாறு அணை நீர்த் தேக்கத்திற்கு இடதுபுற கால்வாய் நீட்டிப்பு செய்து தரப்படும்.

19. பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஏரிகள் தூர்வாரப்படும்.

20. பாப்பாரப்பட்டி பேரூராட்சியில், செயல்படாத நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டு; மீண்டும் செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

21. தருமபுரி நகரில் உள்ள பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x