Published : 05 Apr 2016 03:58 PM
Last Updated : 05 Apr 2016 03:58 PM
கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை பிரதானமாக கொண்ட தொகுதி குறிஞ்சிப்பாடி தொகுதியாகும். இந்த தொகுதியில் வடலூர் வள்ளலார் சபை, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி உள்ளது. இந்த தொகுதி முழுவதும் கிராமங்கள் அதிகம் உள்ளது. விவசாயம் மற்றும் நெசவு தொழில், மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. எந்த விதமான பெரிய தொழிற்சாலைகளும் இல்லை. அரசு கல்லூரிகள் இல்லை.
வன்னியர், ஆதிதிராவிடர்கள், நாயுடுகள் பெரும்பான்மையாக உள்ளனர். முதலியர், செட்டியார், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் உள்ளனர்.
கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ராஜேந்திரன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
இந்த தொகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 871 வாக்காளர்கள் உள்ளனர். 1லட்சத்து 11 ஆயிரத்து 21 பேர் ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 10 ஆயிரத்து846 பேர் பெண் வாக்காளர்கள். திருநங்கைகள் 4 பேர்.
கடலூரை ஓட்டியுள்ள கேப்பர் மலை பகுதியில் உள்ள 25 ஊராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளது.
வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகள், குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கும்.
கிராமங்களில் சரியான சாலை வசதி குடிநீர் வசதி செய்த தரப்படவில்லை என்றும், வெள்ள தடுப்பு நடவடிக்கை சரியாக எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. வெள்ளநிவாரணம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் சரியான முறையில் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அரசு தொகுதி மக்களின் நலன் கருதி பெரிய திட்டங்களை கொண்டு வரவில்லை என்கிற ஆதங்கம் மக்களிடம் உள்ளது. பாசன வாய்க்கால்களை தூர் வாரி உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, நிலத்தடிநீரை உறிஞ்சும் என்எல்சி நிறுவனத்தின் மீது சரியான நடவடிக்கை இல்லை என்பது பிரதான குற்றசாட்டாக உள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஆர்.ராஜேந்திரன் | அதிமுக |
2 | எம்ஆர்கே.பன்னீர் செல்வம் | திமுக |
3 | கே.எம்.எஸ் பாலமுருகன் | தேமுதிக |
4 | ச.முத்துகிருஷ்ணன் | பாமக |
5 | எம்.சக்திகணபதி | பாஜக |
6. | வி.ஜலதீபன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கடலூர் வட்டம் (பகுதி) குணமங்கலம். பில்லாலி, திருவந்திபுரம், கருப்படித்துண்டு, அரிசிபெரியாங்குப்பம், குமாரபேட்டை, ஓட்டேரி, திருமானிக்குழி, வானகாதேவி, விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு, சென்னப்பநாயக்கண்பாளையம், வெள்ளகரை, ராமாபுரம், மாவடிபாளையம். கரையேறவிட்டகுப்பம், வெட்டுக்குளம், பொன்னையன்குப்பம், பச்சையன்குப்பம், குடிகாடு, காரைக்காடு, அன்னவல்லி, கெங்கமநாயகன்குப்பம், வழுதாம்பட்டு, தொண்டமாநத்தம், சேடப்பாளையம், தியாகவல்லி, செம்மங்குப்பம், கோதண்டராமாபுரம், அம்பலவாணம்பேட்டை, தோப்புக்கொல்லை, திமராவுத்தன்குப்பம், கிருஷ்ணன்குப்பம், தம்பிபாளையம், ஆயீக்குப்பம், அகரம், அனுக்கம்பட்டு, திருச்சேபுரம், காயல்பட்டு, கம்பளிமேடு, ஆலப்பாக்கம், பூவானிக்குப்பம், இடங்கொண்டாம்பட்டு, அக்கத்திம்மாபுரம், ரங்கநாதபுரம், கேசவநாராயணபுரம், தம்பிபேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கஞ்சமாண்டான்பேட்டை, தையல்குணாம்பட்டினம், தீர்த்தனகிரி, ஆதிநாராயணபுரம், தானூர், ஆண்டார்முள்ளிபள்ளம். சிறுபாலையூர், கருவேப்பம்பாடி, கண்ணாடி, ஆடூர்குப்பம், விருப்பாக்சி, ராசாகுப்பம், கருங்குழி, கொளக்குடி, நையின்னக்குப்பம், மருவாய், அரங்கமங்களம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி மற்றும் குண்டியமல்லூர் கிராமங்கள்.
குறிஞ்சிப்பாடி (பேரூராட்சி) மற்றும் வடலூர் (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,11,225 |
பெண் | 1,12,312 |
மூன்றாம் பாலினத்தவர் | 5 |
மொத்த வாக்காளர்கள் | 2,23,542 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1962 | இராசாங்கம் | திமுக | 32046 | 56.48 |
1967 | இராசாங்கம் | திமுக | 25478 | 54.5 |
1971 | இராசாங்கம் | திமுக | 27465 | 51.43 |
1977 | எம். செல்வராஜ் | திமுக | 19523 | 28.75 |
1980 | எ. தங்கராஜ் | அதிமுக | 38349 | 49.65 |
1984 | எ. தங்கராஜ் | அதிமுக | 45400 | 49.9 |
1989 | என். கணேசமூர்த்தி | திமுக | 44887 | 47.14 |
1991 | கே. சிவசுப்ரமணியன் | அதிமுக | 51313 | 46.92 |
1996 | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | திமுக | 67152 | 54.99 |
2001 | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | திமுக | 65425 | 55.78 |
2006 | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | திமுக | 56462 | --- |
2011 | செரத்தூர்.ஆ.ராஜேந்திரன் | அதிமுக | 88345 | -- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1962 | ஜெயராமன் | காங்கிரஸ் | 21898 |
1967 | ஜெயராமன் | காங்கிரஸ் | 18226 |
1971 | ஜெயராமன் | நிறுவன காங்கிரஸ் | 25939 |
1977 | நடராசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 16997 |
1980 | எம். செல்வராஜ் | திமுக | 35390 |
1984 | சி. குப்புசாமி | திமுக | 34434 |
1989 | ஆர். இராசேந்திரன் | அதிமுக (ஜெ) | 16043 |
1991 | என். கணேசமூர்த்தி | திமுக | 38842 |
1996 | என். பண்டரிநாதன் | அதிமுக | 28139 |
2001 | கே. சிவசுப்ரமணியன் | அதிமுக | 41562 |
2006 | என். இராமலிங்கம் | மதிமுக | 54547 |
2011 | எம். ஆர். கே. பன்னீர்செல்வம் | திமுக | 64497 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | பன்னீர்செல்வம்.M.R.K | திமுக | 56462 |
2 | ராமலிங்கம்.N | மதிமுக | 54547 |
3 | சுந்தரமூர்த்தி.R | தேமுதிக | 8541 |
4 | சரவனசுந்தரம்.D | பாஜக | 1002 |
5 | ஹரிக்ரிஷ்ணன்.G | பகுஜன் சமாஜ் கட்சி | 636 |
6 | கலியமூர்த்தி.C | அர்எஸ்பி | 590 |
7 | பாலசுப்ரமணியன்.A | சுயேச்சை | 515 |
8 | பழனிமுருகன்.V | சுயேச்சை | 431 |
9 | கந்தராஜன்.B | சுயேச்சை | 334 |
10 | சந்திர.P | சுயேச்சை | 276 |
11 | முரளிதரன்.S | ஜனதாதளம் | 206 |
12 | கண்ணப்பன்.R | சுயேச்சை | 168 |
123708 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | ராஜேந்திரன்.R | அதிமுக | 88345 |
2 | பன்னீர்செல்வம்.M.R.K | திமுக | 64497 |
3 | பன்னீர்செல்வம்.R | சுயேச்சை | 1863 |
4 | வைரகண்ணு. .A.S | பாஜக | 1123 |
5 | பிரேமலதா.T.S | பகுஜன் சமாஜ் கட்சி | 866 |
156694 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT