Published : 05 Apr 2016 03:58 PM
Last Updated : 05 Apr 2016 03:58 PM
கடலூர் மாவட்டத்தில் பெரிய மற்றும் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகும். அதிகளவு கிராமங்களை கொண்ட தொகுதியாகும். 1852ம் ஆண்டு புவனகிரி சட்ட சபை அந்தஸ்தை பெற்றது. மேல்புவனகிரி ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள், கீரப்பாளையம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள், கம்மாபுரம் ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கெங்கைகொண்டான் பேரூராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளது. விவசாயமும், நெசவு தொழிலும் இங்கு பிரதானமாக விளங்குகிறது. 2 லட்சத்து 38 ஆயிரத்து 798 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 411 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 853 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
இந்த தொகுதியில் உள்ள சேத்தியாத்தோப்பில் எம்ஆர் . கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையும்,புவனகிரியில் ராகவேந்திரா கோவிலும் உள்ளது.
இந்த தொகுதியில் வன்னியர் 35 சதவீதமும், ஆதிதிராவிடர் 26 சதவீதமும், கிறிஸ்துவர்கள் 7 சதவீதமும், முஸ்ஸிம்கள் 6 சதவீதமும், யாதவர்கள் 5 சதவீதமும், இதர சமூகத்தினர் 21 சதவீதமும் உள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வை சேர்ந்த செல்விராமஜெயம் பெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். புவனகிரி வெள்ளாற்றில் புதிய பாலம் கட்ட துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெள்ளப்பெருக்கை கட்டுபடுத்திட பாசன, வடிகால் வாய்க்கால்களை தூர் வாரி கரைகளை பலப்படுத்த நடவடிகை எடுக்கவில்லை. கடல் நீர் உள்ளே புகாதவாறு வெள்ளாற்றில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எந்த விதமான தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மலர் சகுபடி உள்ள இந்த தொகுதியில் திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஏ. செல்வி ராமஜெயம் | அதிமுக |
2 | துரை.கி.சரவணன் | திமுக |
3 | எம். சிந்தனைச்செல்வம் | விசிக |
4 | டி. அசோக்குமார் | பாமக |
5 | ஏ.முத்து | அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்- பாஜக |
6. | ஆர். ரத்தினவேல் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
விருத்தாசலம் வட்டம் (பகுதி)
பொன்னேரி (கோ), கார்குடல் மாவைடந்தல், சாத்தமங்கலம், யு.கொளப்பாக்கம், அரசக்குழி, யு.அகரம், ஊத்தங்கல், கூணன்குறிச்சி, யு.மங்கலம், வடக்குவெள்ளுர், பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், தோட்டகம், உய்யகொண்ராவி, கீழ்பாதி, மணகதி, மேல்பாதி, மேல்பாப்பணப்பட்டு, நெய்வேலி, வேப்பங்குறிச்சி, மும்முடிச்சோழகன், கம்மாபுரம், கீரனூர், கோபாலபுரம், குமாரமங்கலம், கோ.ஆதனூர், சொட்டவனம், கார்மாங்குடி, சக்கரமங்கலம், வல்லியம் மேலப்பாளையூர், கீரனூர், மருங்கூர், தொழூர், கொடுமனூர், கீழ்ப்பாளையூர், தேவங்குடி, க.புத்தூர், சிறுவரப்பூர், சாத்தப்பாடி, யு.ஆதனூர், தர்மநல்லூர், விளக்கப்பாடி, பெருவரப்பூர், கோட்டுமூளை, காவனூர், கீரமங்கலம், பெருந்துரை, பனழங்குடி, மற்றும் ஓட்டிமேடு கிராமங்கள்.
கங்கைகொண்டான் (பேரூராட்சி).
சிதம்பரம் வட்டம் (பகுதி)
கத்தாழை, வளையமாதேவி கீழ்பாதி, துறிஞ்சிக்கொல்லை, பின்னலூர், சொக்கங்கொல்லை, சாத்தப்பாடி, வடக்குத்திட்டை, வட கிருஷ்ணாபுரம். மருதூர், வட தலைக்குளம், பிரசன்னராமாபுரம், அம்பாள்புரம், நெல்லிக்கொல்லை, எரும்பூர், வளையமாதேவி, (மேஸ்பாதி), அகர ஆலம்ப்படி, ஆதனூர்(புவனகிரி), பெரிய நெற்குணம், சின்ன நெற்குணம், வீரமுடையாநத்தம், ஆணைவாரி, மிராளுர், மஞ்சக்கொல்லை, உளுத்தூர், தென் தலைத்திட்டை, பூதராயன்பேட்டை, ஆலம்பாடி(கஸ்பா), பு.ஊடையூர், சீயப்பாடி, சாத்தமங்கலம், வத்தாயந்தெத்து, கிளாவடிநத்தம், அழிச்சிக்குடி, வண்டராயன்பட்டு, வயலூர், கீரப்பாளையம், திருப்பணிநத்தம், வட ஹாரிராஜபுரம், தாதம்பேட்டை, ஆயிப்பேட்டை, கிளியனூர், ஓரத்தூர், பரதூர், பூதங்குடி, வெள்ளியங்குடி, பாளையஞ்சேர்ந்தங்குடி, சாக்காங்குடி, புளியங்குடி (ஹரிராஜபுரம்), தென் ஹரிராஜபுரம், சி.மேலவன்னியூர், எண்ணநகரம், கண்ணங்குடி, கீழ்நத்தம், இடையன்பாலச்சேரி, மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், வாக்கூர், வடப்பாக்கம், வெய்யலூர், வாழக்கொல்லை, ஓடாக்கநல்லூர், தரசூர், தேவங்குடி, கே, ஆடூர், சி.வீரசேழகன், துனிசிரமேடு, பூங்கொடி, பண்ணப்பட்டு, அய்யனூர், அக்கரமங்கலம், மனக்குடியான் இருப்பு, விளகம், சேதியூர், கூளிப்பாடி, வடக்குவிருத்தாங்கம், டி.மணலூர், தெற்கு விருத்தாங்கன், டி.மடப்புரம் மற்றும் டி.நெடுஞ்சேரி கிராமங்கள்.
சேத்தியாத்தோப்பு (பேரூராட்சி) மற்றும் புவனகிரி (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,19,861 |
பெண் | 1,18,872 |
மூன்றாம் பாலினத்தவர் | 6 |
மொத்த வாக்காளர்கள் | 2,38,739 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
1952 | வி.கிருஷ்ணசாமி படையாச்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
1957 | சாமிக்கண்ணு படையாச்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
1962 | ராமச்சந்திர ராயர் | இந்திய தேசிய காங்கிரஸ் |
1967 | ஏ.கோவிந்தராசன் | திமுக |
1971 | எம்.ஏ.அபுசாலி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
1977 | வி.ரகுராமன் | திமுக |
1980 | வி.வி.சாமிநாதன் | அதிமுக |
1984 | வி.வி.சாமிநாதன் | அதிமுக |
1989 | எஸ்.சிவலோகம் | திமுக |
1991 | ஜி.மல்லிகா | அதிமுக |
1996 | ஏ.வி.அப்துல்நாசர் | இந்திய தேசிய லீக் |
2001 | பி.எஸ்.அருள் | அதிமுக |
2006 | செல்விராமஜெயம் | அதிமுக |
2011 | செல்விராமஜெயம் | அதிமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | செல்வி ராமஜெயம் | அதிமுக | 65505 |
2 | தேவதாஸ்.K | பாமக | 50682 |
3 | ஷபியுதீன்.S | தேமுதிக | 7292 |
4 | எழுமலை.S | பாஜக | 1237 |
5 | வெங்கடாசலபதி.R | சுயேச்சை | 580 |
6 | பாபு.S | சுயேச்சை | 512 |
7 | ஜெயபாலன்.K | பகுஜன் சமாஜ் கட்சி | 454 |
8 | புவனேந்திரன்.A.G | சுயேச்சை | 379 |
9 | வெங்கடேசன்.V | சமாஜ்வாதி கட்சி | 302 |
10 | ராதாகிருஷ்ணன்.R | சுயேச்சை | 259 |
11 | பாலசுப்ரமணியன்.K | சுயேச்சை | 217 |
12 | பாட்சமையன்.S | சுயேச்சை | 154 |
13 | ஆறுமுகம்.R | அனைத்திந்திய பார்வார்டு பிளாக் | 150 |
14 | செல்வி.M | சுயேச்சை | 111 |
127834 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | செல்விராமஜெயம் | அதிமுக | 87413 |
2 | அறிவுசெல்வன்.T | பாமக | 74296 |
3 | முருகவேல்.K | சுயேச்சை | 2511 |
4 | முத்து.A | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | 1475 |
5 | கமலகண்ணன்.R | லோக ஜனசக்தி கட்சி | 1189 |
6 | சாமி.N | பகுஜன் சமாஜ் கட்சி | 1031 |
7 | பன்னீர்செல்வம்.P | சுயேச்சை | 603 |
8 | சௌந்தரராஜன்.P | சுயேச்சை | 584 |
9 | மணி.A | சுயேச்சை | 349 |
10 | திருவரசமூர்த்தி.G | ஜனதா தளம் | 243 |
11 | தனராசு.K | சுயேச்சை | 233 |
12 | பழனிவேல்.M | புரட்சி பாரதம் | 179 |
13 | கணேசன்.E | சுயேச்சை | 159 |
170265 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT