Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM
கோவை மாநகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சிங்காநல்லூர் தொகுதி. அதிகளவில் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிறைந்த பகுதி. பஞ்சாலைகளே சிங்காநல்லூர் பகுதியின் அடையளமாக உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அதிகமுள்ள பகுதியும் இதுதான். சிங்காநல்லூர் பேருந்து நிலையம், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.
கோவை மாநகரின் 18 வார்டுகளை மட்டும் உள்ளடக்கியது இத்தொகுதி. கிரைண்டர், மிக்சி, மோட்டர், பம்புசெட், உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு தொழிற்கூடங்கள் நிறைந்த ஆவராம்பாளையம், பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை, அதனால் இழந்த பணியானை (ஜாப்ஆர்டர் ) பிரச்சினை இன்றும் எதிரொலிக்கிறது.
அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை, பில்லூர் 2 வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்டவை முடிவடையாமல் உள்ளன. மேலும் இங்கு புனரமைக்கப்படாத சாலைகள் தீராத பிரச்சினையாக இருக்கிறது. சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. இருகூர், எஸ்ஐஹெச்எஸ் காலனி, பீளமேடு ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் பாதியில் நிற்கின்றன. இதனால் எளிதான போக்குவரத்து பாதைகள் முடங்கி, கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
ஹோப்காலேஜ், சிங்காநல்லூர் ஆகிய இடங்கள் நடைபாதை மேம்பாலங்கள், சுரங்க நடைபாதை ஆகியவை அறிவிக்கப்பட்டும் அமைக்கப்படாமல் உள்ளன. சிங்காநல்லூர் தொகுதியில் ஏராளமான தனியார் கல்லூரிகள் உருவாகி வரும் நிலையில், ஏழை எளியோர் வசதிக்காக அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது கல்வியாளர்கள் கோரிக்கையாக உள்ளது.
சிங்காநல்லூர் குளம் மற்றும் படகுத்துறை பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்தும் பயனற்று உள்ளது. இக்குளத்திலும், சிங்காநல்லூர் குளத்திலும் கழிவு கலப்பதை தடுத்து படகுகளை இயக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேம்படுத்தப்படாத சிங்காநல்லூர் உழவர் சந்தை, மூடிக் கிடக்கும் காய்கறி குளிர்சாதன கிடங்கு ஆகியவை விவசாயிகளின் பிரச்சினையாக உள்ளன.
பம்புசெட், மோட்டர் அதிகமாக உற்பத்தியாகும் இத்தொகுதியில் இலவச பம்புசெட் பரிசோதனை கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதை புனரமைத்து திறக்க வேண்டுமெனவும், வாட் வரி, மூலப்பொருட்கள் விலை, மின் கட்டணம் ஆகியவை உயர்ந்துவருவதால் தொழில் நசிவடைவதாக பம்புசெட் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
1967 முதல் தேர்தலை சந்திக்கும் இத்தொகுதியில் எதிர்கொள்ளும் சிங்காநல்லூர் தொகுதியில், தலா 3 முறை திமுக, அதிமுகவும், தலா 2 முறை பிரஜா சோசலிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடைசியாக நடைபெற்ற 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 2வது முறையாக அதிமுகவைச் சேர்ந்த ஆர்.சின்னசாமி வெற்றி பெற்றார். நாயக்கர், கவுண்டர், தேவாங்கர், குரும்பர் ஆகிய சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாக இத்தொகுதி உள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | சிங்கை என்.முத்து | அதிமுக |
2 | என்.கார்த்திக் | திமுக |
3 | ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் | மதிமுக |
4 | அசோக் ஜெயேந்தர் | பாமக |
5 | சி.ஆர்.நந்தகுமார் | பாஜக |
6 | எஸ். கல்யாணசுந்தரம் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 20 வரை
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,52,953 |
பெண் | 1,51,753 |
மூன்றாம் பாலினத்தவர் | 24 |
மொத்த வாக்காளர்கள் | 3,04,730 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1967 | பி. வேலுச்சாமி | பிரஜா சோசலிஸ்டு கட்சி | 38378 |
1971 | எ. சுப்ரமணியன் | பிரஜா சோசலிஸ்டு கட்சி | 35888 |
1977 | ஆர். வெங்குடுசாமி என்ற வெங்குடு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 25820 |
1980 | எ. டி. குலசேகர் | திமுக | 44523 |
1984 | ஆர். செங்காளியப்பன் | ஜனதா கட்சி | 54787 |
1989 | இரா. மோகன் | திமுக | 63827 |
1991 | பி. கோவிந்தராசு | அதிமுக | 68069 |
1996 | என். பழனிசாமி | திமுக | 92379 |
2001 | கே. சி. கருணாகரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 82773 |
2006 | ஆர். சின்னசாமி | அதிமுக | 100283 |
2011 | ஆர். சின்னசாமி | அதிமுக | 89487 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1967 | வி. கே. எல். கவுண்டர் | காங்கிரஸ் | 25115 |
1971 | பி. எல். சுப்பையன் | காங்கிரஸ் (ஸ்தாபன) | 20848 |
1977 | ஆர். செங்காளியப்பன் | ஜனதா கட்சி | 24024 |
1980 | ஆர். வெங்குடுசாமி என்ற வெங்குடு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 41302 |
1984 | எ. சுப்பரமணியம் | காங்கிரஸ் | 49856 |
1989 | பி. எல். சுப்பையா | காங்கிரஸ் | 25589 |
1991 | ஆர். செங்காளியப்பன் | ஜனதா கட்சி | 46099 |
1996 | ஆர். துரைசாமி | அதிமுக | 33967 |
2001 | என். பழனிசாமி | திமுக | 62772 |
2006 | எ. சௌந்தரராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 100269 |
2011 | மயூரா ஜெயகுமார் | காங்கிரஸ் | 55161 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | சின்னசாமி.R | அதிமுக | 100283 |
2 | சௌந்தரராஜன்.A | மார்க்சிய கம்யூனிஸ்ட் | 100269 |
3 | பொன்னுசாமி.M | தேமுதிக | 31268 |
4 | வேலுசாமி.V | பாஜக | 5057 |
5 | ராஜ்குமார்.S | சுயேச்சை | 2019 |
6 | நக்கீரன்.N | பகுஜன் சமாஜ் கட்சி | 1371 |
240267 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | சின்னசாமி.R | அதிமுக | 89487 |
2 | மயூரா S ஜெயகுமார் | காங்கிரஸ் | 55161 |
3 | ராஜேந்திரன்.R | பாஜக | 8142 |
4 | தண்டபாணி.P | லோக் சட்டா கட்சி | 1983 |
5 | வாசன்.V.V | சுயேச்சை | 1663 |
6 | தேவராஜ்.R | உழைப்பாளி மக்கள் கட்சி | 663 |
7 | அய்யாசாமி.S.P | பகுஜன் சமாஜ் கட்சி | 660 |
8 | கனகராஜன்.N | சுயேச்சை | 350 |
9 | சரவணன்.K | சுயேச்சை | 319 |
10 | ராஜா.S.M | சுயேச்சை | 299 |
11 | சுந்தரராஜன்K | சுயேச்சை | 176 |
158903 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT