Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM

124 - வால்பாறை (தனி)

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று வால்பாறை தொகுதி. மாவட்டத்தில் மலையும் சமவெளியும் உள்ள தொகுதியாக வால்பாறை உள்ளது. வால்பாறை தாலூகா மேற்குத் தொடர்ச்சி மலையில், 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

சிறிதும், பெரிதுமாக 54 எஸ்டேட்களை கொண்டிருக்கிறது வால்பாறை சட்டப்பேரவை தொகுதி. இங்கு வசிப்பவர்களில் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் தோட்டத் தொழிலாளர். இப்பகுதியில் தேயிலைத் தோட்ட தொழில் பிரதானமாக உள்ளன. சமவெளிப்பகுதியான கோட்டூர், ஆழியார் பகுதி மறுசீரமைப்பில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. தற்போது தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாகி வருகின்றன.

வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள ஒப்பந்தம் முக்கியப் பிரச்னை. வால்பாறை பகுதி மக்களின் சமீபகாலத்திய மிகப்பெரிய அச்சுறுத்தல் வன விலங்குகள். யானை, சிறுத்தை என வன விலங்குகள் சர்வ சாதாரணமாக எஸ்டேட் பகுதிகளுக்குள் வந்து குடியிருப்புப் பகுதிகளை சூறையாடி சேதப்படுத்துவது, மனிதர்களை தாக்குவது சாதாரணமாகி விட்டது. வனவிலங்குகளிடம் இருந்து தொ ழிலாளர்களுக்கு பாதுகாப்பு முக்கிய கோ ரிக்கை ஆகும். ஆனைமலை பகுதியில் அரசு தொழில் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை ஆனைமலை வட்டார விவசாயிகள் பயனடையும் வகையில் தினசரி காய்கறி மார்க்கெட் . ஆனைமலை தனி தாலூகா, ஆனைமலைப்பகுதிக்கு தீயணைப்பு நிலையம் ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக உள்ளன

வால்பாறை நகராட்சியின் 21 வார்டுகள் , கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஓடையகுளம் பேரூராட்சிகள், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகள் அடங்கியுள்ளது. வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் 95 ஆயிரத்து 609 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 161 பெண் வாக்காளர்களும், 10 திருநங்கைகள் என மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 780 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

2011 சட்டமன்றத் தேர்தலில் வால்பாறை (தனி) வென்றவர்: எம். ஆறுமுகம் (இ. கம்யூ) வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கோவைத் தங்கம் (காங்)

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

வி.கஸ்தூரி வாசு

அதிமுக

2

த.பால்பாண்டி

திமுக

3

பி. மணிபாரதி

இ.கம்யூ

4

உ. சிங்காரவேல்

பாமக

5

பி. முருகேசன்

பாஜக

6.

எம்.சரளாதேவி

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

வால்பாறை வட்டம்

பொள்ளாச்சி வட்டம் (பகுதி) - நாய்க்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஆத்துப் பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாய்க்கனூர், எஸ்.நல்லூர், பில்சின்னம்பாலையம், சோமந்துரை, தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாளப்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரயூர் மற்றும் அங்காலகுறிச்சி கிராமங்கள்,

ஆனைமலை (பேரூராட்சி), ஓடையகுளம்(பேரூராட்சி), வேட்டைக்காரன்புதூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டூர் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

95,926

பெண்

1,00,769

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

1,96,705

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1967

ஈ. இராமசாமி

திமுக

40945

1971

ஈ. இராமசாமி

திமுக

38779

1977

ஆர். எஸ். தங்கவேலு

அதிமுக

20926

1980

எ. டி. கருப்பையா

இந்திய பொதுவுடமைக் கட்சி

46406

1984

வி. தங்கவேலு

காங்கிரஸ்

48779

1989

பி. லட்சுமி

அதிமுக (ஜெ)

38296

1991

எ. சிறீதரன்

அதிமுக

55284

1996

வி. பி. சிங்காரவேலு

திமுக

55284

2001

கோவை தங்கம்

தமாகா

47428

2006

கோவை தங்கம்

காங்கிரஸ்

46561

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1967

என். நாச்சிமுத்து

காங்கிரஸ்

20868

1971

எம். குப்புசாமி

காங்கிரசு (ஸ்தாபன)

14728

1977

எ. டி. கருப்பையா

இந்திய பொதுவுடமைக் கட்சி

16241

1980

கோவைதங்கம்

காங்கிரஸ்

33354

1984

எ. டி. கருப்பையா

இந்திய பொதுவுடமைக் கட்சி

26109

1989

டி. எம். சண்முகம்

திமுக

31624

1991

எ. டி. கருப்பையா

இந்திய பொதுவுடமைக் கட்சி

34100

1996

குறிச்சிமணிமாறன்

அதிமுக

30012

2001

கே. கிருட்டிணசாமி

புதிய தமிழகம்

29513

2006

எசு. கலையரன் சுசி

விடுதலை சிறுத்தைகள் கட்சி

25582

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கோவைதங்கம்.N

காங்கிரஸ்

46561

2

கலைஅரசன் சுசி.S

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

25582

3

முருகராஜ்.S

தேமுதிக

6845

4

தங்கவேல்.M

பாஜக

2861

5

ஸ்ரீதரன்.A

சுயேச்சை

1696

6

தேவகி.S

பகுஜன் சமாஜ் கட்சி

823

7

திலகவதி.S

ஐக்கிய ஜனதா தளம்

521

8

ரவிச்சந்திரன்.S

சுயேச்சை

447

9

பாலசுப்ரமணியன்.V

சுயேச்சை

390

10

கனகராஜ்.K

சுயேச்சை

372

11

மனோகரன்.S

சுயேச்சை

223

86321

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ஆறுமுகம்.M

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

61171

2

கோவைதங்கம்.N

காங்கிரஸ்

57750

3

முருகேசன்.P

பாஜக

2273

4

ரங்கசாமி.M

சுயேச்சை

1912

5

ஆறுமுகம்.M

சுயேச்சை

787

6

ராமச்சந்திரன்M

பகுஜன் சமாஜ் கட்சி

547

124440

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x