Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM
கோவை மாநகராட்சியின் சில வார்டுகளையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஏராளமான கிராமங்களையும் உள்ளடக்கியுள்ள தொகுதி இது. சிவத் தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோயில் , பழைமையான பேரூர் ஆதீனம், சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவி போன்றவை அமைந்துள்ளது இதன் சிறப்பு. கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அதற்கடுத்த நிலையில் அருந்ததியர், ஒக்கலிக கவுடர், நாயக்கர் சமூகத்தவர் சரிவிகிதத்திலும் வசிக்கின்றனர்.
விவசாய கடன்களும் வங்கிகளில் கிடைப்பதில்லை; ரூ. 41கோடி தென்னை வறட்சி நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டும் அது வழங்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் கடும்பாதிப்பு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்; பயிர்கள் சேதமடைந்துள்ளன; வனப்பகுதிக்குள் விதிமுறை மீறி கட்டுமானங்களில் ஈடுபட்டுள்ளது சமய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம், நூலகம் போன்றவை குறைந்தபட்ச அளவுகூட இல்லை; பேருந்து வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் உள்ளன. இதன் மீது எல்லாம் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது இந்த தொகுதி மக்களின் கோப வெளிப்பாடுகள். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இந்த தொகுதி முழுக்க, காட்டுக்குள், கிராமத்திற்குள் எல்லாம் புத்தம்புது சாலைகள், பாலங்கள், தெருவிளக்குகள் போன்ற விஷயங்கள் மட்டும் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிகப்படியான துறைகளை கையில் வைத்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்தத் தொகுதியாக விளங்குவதால், அவரின் சகோதரர் ஒருவரே சாலை, சாக்கடை உள்ளிட்ட கட்டுமான ஒப்பந்தங்களை கையில் வைத்திருப்பதாலேயே இந்த பணிகள் நீக்கமற இங்கே நடந்துள்ளன என்ற புகார்கள் மக்களிடம் கடைவிரிக்கின்றன.
இத் தொகுதியில் வென்றவர்கள்: 1951-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழனிச்சாமி கவுண்டர். 1962-ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எல்லமநாயுடு. 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் திமுக மணிவாசகம். 1977ல் அதிமுக மருதாசலம். 1980ல் அதிமுக சின்னராசுவும். 1984 மற்றும் 1991-ல் அதிமுக அரங்கநாயகம். 1989ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வெள்ளியங்கிரி. 1996ல் திமுகவை சேர்ந்த சி.ஆர்.ராமச்சந்திரன். 2001ல் த.மா.கா எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன். 2006ல் மதிமுக கண்ணப்பன். 2009ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் எம்.என். கந்தசாமி. 2011ல் எஸ்.பி.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | எஸ்.பி.வேலுமணி | அதிமுக |
2 | எம்.ஏ.சையது முகமது | மமக |
3 | கே.தியாகராஜன் | தேமுதிக |
4 | வி.விடியல் ஜெகந்நாதன் | பாமக |
5 | எம்.கருமுத்து தியாகராஜன் | பாஜக |
6 | ஆர்.ஆனந்தராஜ் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 48 முதல் 56 வரை
கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)
போளுவாம்பாடி (பிளாக் மி), தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம், வெள்ளைமலைப்பட்டினம், நரசீபுரம், மத்வராயபுரம் மற்றும் இக்கரை பொலுவம்பட்டி கிராமங்கள்.
வேடப்பட்டி (பேரூராட்சி), தாலியூர் (பேரூராட்சி), தொண்டாமுத்தூர் (பேரூராட்சி), ஆலந்துறை (பேரூராட்சி), புலுவப்பட்டி(பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூர் (பேரூராட்சி) மற்றும் குனியமுத்தூர் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,48,518 |
பெண் | 1,48,761 |
மூன்றாம் பாலினத்தவர் | 48 |
மொத்த வாக்காளர்கள் | 2,97,327 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1959 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | பழனிசாமி கவுண்டர் | காங்கிரஸ் | 22814 |
1962 | வி. எல்லம்ம நாயுடு | காங்கிரஸ் | 32520 |
1967 | ஆர். மணிவாசகம் | திமுக | 42261 |
1971 | ஆர். மணிவாசகம் | திமுக | 51181 |
1977 | கே. மருதாச்சலம் | அதிமுக | 31690 |
1980 | சின்னராசு | அதிமுக | 57822 |
1984 | செ. அரங்கநாயகம் | அதிமுக | 67679 |
1989 | யு. கே. வெள்ளியங்கிரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 62305 |
1991 | செ. அரங்கநாயகம் | அதிமுக | 92362 |
1996 | சி. ஆர். இராமச்சந்திரன் | திமுக | 113025 |
2001 | எசு. ஆர். பாலசுப்பிரமணியன் | தமாகா | 96959 |
2006 | எம். கண்ணப்பன் | மதிமுக | 123490 |
2009 ** | எம். என். கந்தசாமி | காங்கிரஸ் | 112350 |
2011 | எஸ்.பி.வேலுமணி | அதிமுக | 99886 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1951 | பெருமாள் | சோசலிஸ்ட் கட்சி | 10894 |
1962 | எல். அற்புதசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 12735 |
1967 | வி. ஈ. நாயுடு | காங்கிரஸ் | 26842 |
1971 | எம். நடராசு | சுயேச்சை | 29689 |
1977 | ஆர். மணிவாசகம் | திமுக | 24195 |
1980 | ஆர். மணிவாசகம் | திமுக | 42673 |
1984 | யு. கே. வெள்ளியங்கிரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 45353 |
1989 | பி. சண்முகம் | அதிமுக (ஜெ) | 40702 |
1991 | யு. கே. வெள்ளியங்கிரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 45218 |
1996 | டி. மலரவன் | அதிமுக | 50888 |
2001 | வி. ஆர். சுகன்யா | திமுக | 68423 |
2006 | எசு. ஆர். பாலசுப்பிரமணியன் | காங்கிரஸ் | 113596 |
2009 ** | கே. தங்கவேலு | தேமுதிக | 40863 |
2011 | எம்.என்.கந்தசாமி | காங்கிரஸ் | 46683 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | கண்ணப்பன்.M | மதிமுக | 123490 |
2 | பாலசுப்ரமணியன்.S.R | காங்கிரஸ் | 113596 |
3 | டென்னிஸ் கோயில் பிள்ளை.E | தேமுதிக | 37901 |
4 | சின்னராஜ்.M | பாஜக | 13545 |
5 | வரதராஜன்.K | சுயேச்சை | 2035 |
6 | ஜானகி.D | பகுஜன் சமாஜ் கட்சி | 959 |
7 | சண்முகசுந்தரம்.S | சுயேச்சை | 956 |
8 | ரங்கசாமி.V.C | சுயேச்சை | 731 |
9 | மணிகண்டன்.V | சுயேச்சை | 669 |
10 | கிருஷ்ணன்.V | பார்வார்டு பிளாக்கு | 649 |
11 | பாலு.C அ பாலகிருஷ்ணன்.C.P.C | பாரதிய திராவிட மக்கள் கட்சி | 517 |
12 | நாகராஜன்.A | சுயேச்சை | 467 |
13 | சரவணகுமார்.R | சுயேச்சை | 364 |
14 | ஜானகி.V | லோக் ஜன சக்தி | 353 |
15 | செந்தில்குமார்.K | சுயேச்சை | 334 |
16 | அய்யாசாமி.T.A | சுயேச்சை | 297 |
296863 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | வேலுமணி.S.P | அதிமுக | 99886 |
2 | கந்தசாமி.M.N | காங்கிரஸ் | 46683 |
3 | ஸ்ரீதர் முர்த்தி.A | பாஜக | 5581 |
4 | உம்மர் காதப்.T.M | எஸ்டிபிஐ | 4519 |
5 | கண்ணம்மாள் ஜெகதீசன்.TMT | லோக் சட்ட கட்சி | 932 |
6 | ராமசாமி.K | சுயேச்சை | 907 |
7 | கந்தசாமி.K | சுயேச்சை | 447 |
8 | முத்துசெல்வம்.C | இந்திய ஜனநாயக கட்சி | 432 |
9 | பழனிசாமி.S | உழைப்பாளி மக்கள் கட்சி | 390 |
10 | கந்தசாமி.A | சுயேச்சை | 308 |
160085 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT