Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM
மறுசீரமைப்பில் கடந்த முறை முதல் தேர்தலை சந்தித்த தொகுதி சூலூர். வேளாண்மையும், விசைத்தறியுமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
சூலூர் மற்றும் சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியுள்ள கிராமங்களை ஒருங்கிணைந்து அமைந்துள்ளது. கவுண்டர், நாயக்கர், ஒக்கலிககவுடர், தேவர், அருந்ததியர் உள்ளிட்ட சமூகத்தினர் வசித்து வந்தாலும் பெரும்பான்மையாக கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்களே உள்ளனர்.
இரண்டாம் உலகப்போரின் போது தென்கிழக்கு ஆசியாவின் விமானம் பழுதுபார்க்கும் மையமாக இங்கு சூலூர் விமான படைத்தளம் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. இந்த விமான படைத்தளம் தற்போது வரை தொடர்ந்து இயங்கி வருகிறது என்பது இங்குள்ள சிறப்பு.
சூலூர் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயம்பாளையத்தில் இருந்து எல் அன்டு டி பைபாஸ் சாலை வரை உள்ள 7.5 கிமீ சாலையை 4 வழி சாலையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்து, சூலூர் வட்டமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் மருத்துவமனை இன்னும் தரம் உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதை வட்டார தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதுடன் தேவையான மருத்துவவசதிகளையும் இந்த மருத்துவமனைக்கு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், இங்கு தீயணைப்பு நிலையம்,மகளிர் காவல் நிலையம்,அரசுகலை கல்லூரி போன்றவை உருவாக்கப்பட வேண்டும். சட்டப்பேரவைத் தொகுதியாகவும் தரம் உயர்ந்த நிலையில் அதற்கேற்ற வசதிகளை அமைத்து தர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
மேலும், சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி மிகப்பெரியதாக இருப்பதால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இந்த குற்றசம்பவங்களை கட்டுப்படுத்த இந்த காவல் நிலைய எல்லைகளை இரண்டாக பிரிக்கவும் நடவடிக்கை தேவை என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
சிறு ஆலைகள், விவசாயம் அதிகம் இப்பகுதியில் இருந்து வரும் நிலையில் தொழில்கள் முடங்கிய நிலையில் உள்ளன. தொழில் சரியில்லாமல் இருப்பதால் வெளியூரில் இருந்து இங்கு வந்து தங்கி பணி புரிந்த தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் அவர்கள் ஊருக்கு திரும்பி செல்லும் நிலை உருவாகியுள்ளது.
பருத்தி விவசாயம்,கரும்பு விவசாயம், தென்னை விவசாயம், பட்டுப்புழு வளர்ப்பு,கோழி வளர்ப்பு,கால்நடை வளர்ப்பு போன்ற அனைத்து தொழில்களும் தொடர்ச்சியாக இப்பகுதியில் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், இது விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவருவதாகவும் இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொகுதியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வரும் நிலையில் சோமனூர் பகுதியில் ஜவுளி சந்தை ஒன்று அமைத்து கொடுக்க வேண்டும். போதிய கூலி இன்மை, விசைத்தறி தொழிலுக்கு மின்கட்டணத்தை குறைக்கவேண்டும் பொழுது போக்கு அம்சமாக இருந்த சூலூர் படகுதுறைத்துறை பயனற்று கிடக்கிறது. அதை இயங்க செய்யவேண்டும். இங்குள்ள கழிவு நீர் சுத்தகரிப்பு ஆலை பல ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ளது; இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பவை எல்லாம் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள்.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில், தேமுதிகவைச் சேர்ந்த தினகரன் தொகுதியின் முதல் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஆர்.கனகராஜ் | அதிமுக |
2 | வி.எம்.சி. மனோகரன் | காங்கிரஸ் |
3 | கே.தினகரன் | தேமுதிக |
4 | பி.கே.கணேசன் | பாமக |
5 | எஸ்.டி.மந்தராசலம் | பாஜக |
6. | எம்.வி.விஜயராகவன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பல்லடம் தாலுகா (பகுதி)
பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கணியூர், அரசூர், நிலம்பூர், மயிலம்பட்டி, இருகூர், ராசிபாளையம், கே.மாதப்பூர், காடம்பாடி, அப்பநாய்க்கன்பட்டி, கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், கள்ளப்பாலையம், பாப்பம்பட்டி, இடையம்பாளையம், செல்லக்கரிச்சல், வடம்பச்சேரி, வரப்பட்டி, வடவள்ளி, போகம்பட்டி, பச்சாபாளையம், பூராண்டம்பாளையம், குமாரபாளையம், வடவேடம்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரி, அய்யம்பாளையம், மலப்பாளையம், தாளக்கரை மற்றும் ஜே. கிருஷ்ணபுரம் கிராமங்கள்.
மோப்பிரிபாளையம் (பேரூராட்சி), சாமளாபுரம் (பேரூராட்சி), காங்கேயம்பாளையம் (சென்சஸ் டவுன்), சூலூர் (பேரூராட்சி), பள்ளப்பாளையம் (பேரூராட்சி) மற்றும் கண்ணம்பாளையம் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,39,616 |
பெண் | 1,42,271 |
மூன்றாம் பாலினத்தவர் | 3 |
மொத்த வாக்காளர்கள் | 2,81,890 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | தினகரன்.K | தேமுதிக | 88680 |
2 | ஈஸ்வரன்.E.R | கொங்குநாடு முன்னேற்றக் கழகம் | 59148 |
3 | தினகரன்.K | சுயேச்சை | 7285 |
4 | செந்தில்குமார்.K | பாஜக | 4353 |
5 | கார்த்திகேயன்.பொன் | சுயேச்சை | 3053 |
6 | மாரியப்பன்.M | சுயேச்சை | 2205 |
7 | ஜெரால்ட் அமல ஜோதி | சுயேச்சை | 1315 |
8 | தங்கவேலு.C | சுயேச்சை | 1281 |
9 | அப்துல் ஹக்கீம்.P | பகுஜன் சமாஜ் கட்சி | 1064 |
10 | தங்கமுத்து.S | சுயேச்சை | 765 |
11 | ராஜா.C | சுயேச்சை | 439 |
169588 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT