Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM
கோவை மாவட்டத்தில் அதிக பேரூராட்சிகள் உள்ளடங்கிய சட்டப்பேரவைத் தொகுதியாக கிணத்துகடவு உள்ளது. இத்தொகுதியில் கோவை தெற்கு வட்டத்தில் மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள். குறிச்சி, வெள்ளலூர் , மதுக்கரை , எட்டிமடை, திருமலையம்பாளையம், ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சிகள். பொள்ளாச்சி வட்டம், சொலவம்பாளையம், வடபுதூர், குதிரையாலயம்பாளையம், ஒட்டையாண்டிபொரம்பு, சொக்கனூர், சங்கராபுரம், முத்தூர் மற்றும் கோடங்கிபாளையம் கிராமங்கள் அடங்கியுள்ளன.
கிறிஸ்துஅரசுக் தொழில்நுட்ப கல்லூரி உள்பட ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகள், ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. புகழ்பெற்ற பொன் வேலாயுதசாமி மலைக்கோயில் இங்குள்ளது. இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கவுண்டர்கள், அருந்ததியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்த நிலையில் பலதரப்பட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. விவசாயிகள் அதிகளவு வசிக்கிறார்கள். மேலும், தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகள் என்று பார்த்தால் கோவில்பாளையம் பகுதியில் ரயில் நிலையம், தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை, கிராமங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மினி பஸ் சேவை என பொதுமக்கள் பல்வேறு பிரச்சினை களை முன் வைக்கிறார்கள்.
கடந்த 1977 முதல் 2011 வரை நடைபெற்ற 9 சட்டப்பேரவை தேர்தல்களில், 7 முறை திமுகவும் 2 முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2001, 2006,மற்றும் 2011 சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக எஸ்.தாமோதரன் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | அ.சண்முகம் | அதிமுக |
2 | குறிச்சி பிரபாகரன் | திமுக |
3 | வே.ஈஸ்வரன் | மதிமுக |
4 | ரா. சின்னச்சாமி | பாமக |
5 | வே.முத்துராமலிங்கம் | பாஜக |
6. | உ. செல்வக்குமார் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)
மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, தம்பாகவுண்டன்பாளையம், கருஞ்சாமிகவுண்டன்பாளையம், சீரப்பாளையம், மலமச்சம்பட்டி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள், குறிச்சி (பேரூராட்சி), வெள்ளலூர் (பேரூராட்சி), மதுக்கரை (பேரூராட்சி), எட்டிமடை (பேரூராட்சி), திருமலையம்பாளையம் (பேரூராட்சி), ஒத்தக்கால்மண்டபம் (பேரூராட்சி) மற்றும் செட்டிபாளையம் (பேரூராட்சி),
பொள்ளாச்சி வட்டம் (பகுதி) சொலவம்பாளையம், வடபுதூர், குதிரையாலயம்பாளையம், ஒட்டையாண்டிபொரம்பு, சொக்கனூர், சங்கராபுரம், முத்தூர் மற்றும் கோடங்கிபாளையம் கிராமங்கள், கிணத்துக்கடவு (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,47,416 |
பெண் | 1,49,681 |
மூன்றாம் பாலினத்தவர் | 19 |
மொத்த வாக்காளர்கள் | 2,97,116 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1967 | கண்ணப்பன் | திமுக | 40645 |
1971 | மு. கண்ணப்பன் | திமுக | 47776 |
1977 | கே. வி. கந்தசாமி | அதிமுக | 25909 |
1980 | கே. வி. கந்தசாமி | அதிமுக | 42822 |
1984 | கே. வி. கந்தசாமி | அதிமுக | 50375 |
1989 | கே. கந்தசாமி | திமுக | 36897 |
1991 | என். எசு. பழனிசாமி | அதிமுக | 64358 |
1996 | எம். சண்முகம் | திமுக | 49231 |
2001 | எஸ். தாமோதரன் | அதிமுக | 55958 |
2006 | எஸ். தாமோதரன் | அதிமுக | 55493 |
2011 | எஸ். தாமோதரன் | அதிமுக | 94123 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1967 | எஸ். கவுண்டர் | காங்கிரஸ் | 20691 |
1971 | எஸ். டி. துரைசாமி | சுயேச்சை | 22049 |
1977 | மு. கண்ணப்பன் | திமுக | 20589 |
1980 | எஸ். டி. துரைசாமி | காங்கிரஸ் | 37093 |
1984 | மு. கண்ணப்பன் | திமுக | 38492 |
1989 | என். அப்பாதுரை | அதிமுக (ஜெ) | 22824 |
1991 | கே. கந்தசாமி | திமுக | 31792 |
1996 | கே. எம். மயில்சாமி | அதிமுக | 35267 |
2001 | எம். சண்முகம் | திமுக | 22178 |
2006 | கே. வி. கந்தசாமி | திமுக | 50343 |
2011 | மு. கண்ணப்பன் | திமுக | 63857 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | தாமோதரன்.S | அதிமுக | 55493 |
2 | கந்தசாமி.K.V | திமுக | 50343 |
3 | லதாரணி.C.B | தேமுதிக | 5449 |
4 | முத்துராமலிங்கம்.V | பாஜக | 2267 |
5 | ரங்கரசு.R | சுயேச்சை | 1937 |
6 | ஆரன்.M | சுயேச்சை | 1142 |
7 | அமிர்தலிங்கம்.V | சுயேச்சை | 792 |
8 | லக்ஷ்மி.V.P | பகுஜன் சமாஜ் கட்சி | 389 |
117812 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | தாமோதரன்.S | அதிமுக | 94123 |
2 | கண்ணப்பன்.M | திமுக | 63857 |
3 | தர்மலிங்கம்.K | பாஜக | 4587 |
4 | இளங்கோ.B | லோக் சட்ட கட்சி | 1737 |
5 | நாகராஜ்.S | சுயேச்சை | 1592 |
6 | முருகானந்தம்.K | சுயேச்சை | 1069 |
7 | நூர் முஹம்மத்.A | சுயேச்சை | 602 |
167567 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT