Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM
சென்னையின் மிகப்பழமையான தொகுதிகளில் ஒன்று பெரம்பூர். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அடுத்து மிக முக்கியமான ரயில் நிலையமாக பெரம்பூர் ரயில் நிலையம் உள்ளது. மிகப்பழமையான இந்த ரயில் நிலையத்தில் மற்ற மாநிலங்கள் மற்றும் கோவை செல்லும் பெரும்பாலான ரயில்கள் நின்று செல்கின்றன.
கொடுங்கையூர், கண்ணதாசன்நகர், மகாகவி பாரதியார் நகர், எம்.ஆர்.நகர், முத்தமிழ் நகர், சர்மா நகர், பி.வி.காலனி, எருக்கஞ்சேரி, மூலக்கடை, வியாசர்பாடி, சத்தியமூர்த்திநகர், முல்லைநகர், கணேசபுரம் ஆகிய பகுதிகள் பெரம்பூர் தொகுதியில் அடங்கியுள்ளன.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் கணிசமான அளவில் இருந்தாலும் இத்தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு தலித் மக்கள் அதிக அளவில் உள்ளனர். மகாகவி பாரதியார் நகர். வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். பர்மாவில் இருந்து வந்தவர்கள் சர்மா நகர், பி.வி.காலனி பகுதிகளில் கணிசமான அளவில் இருக்கின்றனர். அவர்கள் சிறு வியாபாரிகளாக உள்ளனர். இந்தப் பகுதிகளில் பர்மா உணவு வகைகள் கிடைக்கின்றன.
வட சென்னையை மத்திய சென்னையோடு இணைக்கும் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை இத்தொகுதிக்குள் வருகிறது. இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் தொகுதி மக்களின் 50 ஆண்டுகால கனவு இன்னும் நனவாகவில்லை. மழைக் காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் தொகுதி இது. மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும், சாலைகளை அகலப்படுத்த வேண்டும், பெரம்பூர் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க வேண்டும், திருட்டு சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1951-ல் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியின் எஸ்.பக்கிரிசாமி பிள்ளை வெற்றி பெற்றார். 1957 தேர்தலில் இது தனித் தொகுதியாக மாறியது. சத்தியவாணிமுத்து (காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 1961 தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் (டி.சுலோச்சனா) வெற்றி பெற்றது.
1967 தேர்தலில் திமுக (எஸ்.முத்து) பெரம்பூரில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியது. 1971-ல் சத்தியவாணிமுத்து, 1977, 1980-ல் எஸ்.பாலன், 1984-ல் பரிதிஇளம்வழுதி, 1989, 1996-ல் செங்கை சிவம் என தனித் தொகுதியான பெரம்பூரில் திமுகவே வென்றது.
1991-ல் அதிமுக சார்பி்ல போட்டியிட்ட எம்.பி. சேகர் வெற்றி பெற்றார். 2001-ல் அதிமுக கூட்டணியிலும், 2006-ல் திமுக கூட்டணியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட கே.மகேந்திரன் இங்கு வெற்றி பெற்றார். கடைசியாக நடைபெற்ற 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்) வெற்றி பெற்றார்.
1957-ல் இருந்து தனித் தொகுதியாக இருந்த பெரம்பூர் 2008-ல் தொகுதி மறு சீரமைப்பின்போது பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. 7 முறை திமுகவும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் தலா 2 முறையும், சோஷலிஸ்ட், அதிமுக தலா 1 முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
பெரம்பூர் தொகுதியில் தற்போது 1 லட்சத்து 43 ஆயிரத்து 844 ஆண்கள், 1 லட்சத்து 45 ஆயிரத்து 19 பெண்கள், திருநங்கைகள் 38 பேர் என மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,44,011 |
பெண் | 1,46,408 |
மூன்றாம் பாலினத்தவர் | 44 |
மொத்த வாக்காளர்கள் | 2,90,463 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
2006 | K.மகேந்திரன் | மார்க்சிய கம்யூனிஸ்ட் | 44.83 |
2001 | K.மகேந்திரன் | மார்க்சிய கம்யூனிஸ்ட் | 52.42 |
1996 | செங்கை சிவம் | திமுக | 67.29 |
1991 | Dr.M.P.சேகர் | அதிமுக | 54.06 |
1989 | செங்கை சிவம் | திமுக | 53.86 |
1984 | பரிதி இளம்வழுதி | திமுக | 53.04 |
1980 | S. பாலன் | திமுக | 54.59 |
1977 | S. பாலன் | திமுக | 42.74 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | மகேந்திரன் | சிபிஎம் | 81765 |
2 | மணிமாறன் | மதிமுக | 78977 |
3 | லிங்கம் | தேமுதிக | 15881 |
4 | பெருமாள் | பகுஜன் | 1449 |
5 | விஸ்வநாதன் கக்கன் | ஜனதா | 952 |
6 | ஜீனப்ரியா | சமாஜ்வாதி | 677 |
7 | ரவிச்சந்திரன் | சுயேச்சை | 662 |
8 | புருஷோத்தமன் | சுயேச்சை | 584 |
9 | மூர்த்தி | சுயேச்சை | 474 |
10 | தெய்வ ஸ்வரூப் சந்திரன் | சுயேச்சை | 412 |
11 | பாஸ்கர் | சுயேச்சை | 225 |
12 | கோட்டீஸ்வரன் முனு | சுயேச்சை | 165 |
13 | சாமி தாஸ் | சுயேச்சை | 156 |
182379 |
2011 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | சவுந்தராஜன் | சி பி எம் | 84668 |
2 | N .R .தனபாலன் | திமுக | 67245 |
3 | அரவிந்தகுமார் | பிஜேபி | 2758 |
4 | விஜயகுமார் | ஜே எம் எம் | 961 |
5 | பழனி | பி எஸ் பி | 912 |
6 | கோபி ஆனந்த் | சுயேச்சை | 861 |
7 | ஜேசு | ஐ ஜே கே | 753 |
8 | பாலகிருஷ்ணன் .S | சுயேச்சை | 699 |
9 | பாலகிருஷ்ணன் .A | சுயேச்சை | 662 |
10 | சந்தானம் | சுயேச்சை | 456 |
11 | முரளிதரன் | சுயேச்சை | 339 |
12 | தென்கரைமுத்து | சுயேச்சை | 317 |
13 | பிரபாகர் | எம் எஸ் கே | 286 |
14 | ராஜா | சுயேச்சை | 232 |
15 | மரியதாஸ் | பு பா | 213 |
16 | கிஷோர்குமார் | சுயேச்சை | 173 |
17 | சுந்தர் | சுயேச்சை | 156 |
18 | மூர்த்தி | சுயேச்சை | 120 |
19 | சிவகுமார் | சுயேச்சை | 111 |
20 | சரவணன் | சுயேச்சை | 104 |
162026 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT