Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM
சென்னையின் இதயப்பகுதி என்று சொல்லப்படும் தியாகராய நகர் சட்டப்பேரவைத் தொகுதி 1957 முதல் தேர்தல்களை சந்தித்து வருகிறது. இந்திய தேசிய காங்கிரஸின் கே.விநாயகம் அந்த தொகுதியின் முதல் எம்.எல்.ஏ ஆவார். மொத்தம் 12 தேர்தல்களை தியாகராய நகர் சந்தித்துள்ளது. தியாகராய நகர் தொகுதியில் சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 117, 120, 121,122,123,124,125,126,127,137 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் 187 வாக்குச்சாவடிகள் உள்ளன.
சென்னையின் முக்கிய வணிக பகுதியான தி.நகரில் சிறியது முதல் பெரியது வரை சுமார் 500-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. சிவா-விஷ்னு ஆலயம், ராமகிருஷ்ண வித்யாலாய பள்ளி, பாண்டி பஜார், ஆகியவை தி.நகர் தொகுதியின் முக்கியமான அடையாளங்கள் ஆகும். தி.நகர் தொகுதியில் பிரமானர்கள், வன்னியர்கள் , தலித் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். ம.பொ.சிவஞானம் 1967-ல் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 1 லட்சத்து 18 ஆயிரத்து 509 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 037 பெண் வாக்காளர்களும், 43 மூன்றாம் பாலினத்தவர்களும் இந்த தொகுதியில் உள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
சென்னை பிற பகுதிகள் போல் இங்கும் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், குப்பை அதிகம் வெளியாகிறது. இதோடு, ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி வந்து போவதால், மாசுப்பிரச்சினை பெரியளவில் உள்ளது. தி.நகர் பேருந்து நிலையம் பல ஆண்டு காலமாக மிக மோசமான நிலையில் உள்ளது. குடிநீர் பிரச்சினை, சிறியளவில் மழை பெய்தாலே பெரியளவில் தண்ணீர் தேங்குவது என்று தி.நகர் தொகுதி மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இதுவரை நடந்த தேர்தல்களில், 1957-ல் விநாயகம் (காங்கிரஸ்), 1962-ல் காஞ்சி மணிமொழியார் (தி.மு.க.), 1967-ல் ம.பொ.சிவஞானம் (தி.மு.க.), 1971-ல் கே.எம்.சுப்பிரமணியம் (ஸ்தாபன காங்கிரஸ்), 1977-ல் ஆ.ஈ.சந்திரன் ஜெயபால் (தி.மு.க.), 1980-ல் டாக்டர் கே.செüரிராஜன் (கா.கா.தே.கா.), 1984-ல் டாக்டர் கே.செüரிராஜன் (காங்கிரஸ்), 1989-ல் சா.கணேசன் (தி.மு.க.), 1991-ல் எஸ்.ஜெயகுமார் (அ.தி.மு.க.), 1996-ல் டாக்டர் செல்லகுமார் (த.மா.கா.), 2001-ல் ஜெ.அன்பழகன் (தி.மு.க.), 2006-ல் வி.பி.கலைராஜன் (அ.தி.மு.க.) வெற்றி பெற்றுள்ளனர்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,21,883 |
பெண் | 1,23,084 |
மூன்றாம் பாலினத்தவர் | 45 |
மொத்த வாக்காளர்கள் | 2,45,012 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தியாகராயா நகர் - தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 -2006 )
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
2006 | V.P.கலைராஜன் | அதிமுக | 48.57 |
2001 | J. அன்பழகன் | திமுக | 48.55 |
1996 | A. செல்லகுமார் | த.மா.கா | 67.16 |
1991 | S. ஜெயகுமார் | அதிமுக | 61.19 |
1989 | S. A. கணேசன் | திமுக | 43.03 |
1984 | K. சௌரிராஜன் | இ.தே.காங்கிரசு | 49.26 |
1980 | K. சௌரிராஜன் | கா.கா.காங்கிரசு | 50.58 |
1977 | R.E. சந்திரன் ஜெயபால் | திமுக | 30.91 |
2006 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | கலைராஜன் | அதிமுக | 74131 |
2 | J.அன்பழகன் | திமுக | 57654 |
3 | T .பாண்டியன் | தேமுதிக | 8824 |
4 | அரவிந்த் | எல்கேபிடி | 6323 |
5 | முக்தா V ஸ்ரீநிவாசன் | பிஜேபி | 4234 |
6 | விஸ்வநாதன் | சுயேச்சை | 402 |
7 | ராஜேந்திர பிரசாத் | பி எஸ் பி | 200 |
8 | ராஜன் | சுயேச்சை | 181 |
9 | அன்பழகன் J . | சுயேச்சை | 161 |
10 | தேவேந்திரன் | எஸ் பி | 159 |
11 | ஹாசன் பைசல் | சுயேச்சை | 76 |
12 | நடராஜன் | சுயேச்சை | 70 |
13 | அப்புவிமல் | சுயேச்சை | 63 |
14 | மகாலிங்கம் | சுயேச்சை | 59 |
15 | பாண்டுரங்கம் | சுயேச்சை | 53 |
16 | தண்டபாணி | சுயேச்சை | 41 |
152632 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | கலைராஜன் | அதிமுக | 75883 |
2 | செல்லகுமார் | காங்கிரஸ் | 43421 |
3 | ரவிச்சந்திரன் | பிஜேபி | 4575 |
4 | ராமசாமி (அ ) டிராபிக் ராமசாமி | சுயேச்சை | 1305 |
5 | சாரதா ஜி | ஐஜேகே | 958 |
6 | சரத்பாபு | சுயேச்சை | 830 |
7 | நாகதாஸ் | பி எஸ் பி | 587 |
8 | நரசிம்மன் | சுயேச்சை | 387 |
9 | தேவராஜ் | ஐ என்டி | 283 |
10 | புருஷோத்தமன் | எஸ் யு சி ஐ | 266 |
11 | பிரபாகரன் | ஜே எம் எம் | 235 |
12 | சுரேஷ் | சுயேச்சை | 178 |
13 | செல்வகுமார் | சுயேச்சை | 178 |
14 | ஹரிகிருஷ்ணன் | சுயேச்சை | 142 |
15 | குமார் | சுயேச்சை | 126 |
16 | சின்னதுரை | சுயேச்சை | 118 |
17 | செல்வகுமார் | சுயேச்சை | 109 |
18 | ஸ்ரீநிவாசன் | சுயேச்சை | 108 |
19 | சுபாஷ் பாபு | சுயேச்சை | 62 |
129751 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT