Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM
1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி (தனி). மறுசீரமைப்புக்குப் பிறகு பூங்காநகர், புரசைவாக்கம், அண்ணாநகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து சில பகுதிகள் எழும்பூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டன.
மிகவும் பழமையான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், அரசு அருங்காட்சியகம், பழமையான கன்னிமாரா நூலகம், எழும்பூர் நீதிமன்றம், டான் பாஸ்கோ பள்ளி, கங்காதீஸ்வரர் கோவில் ஆகியன எழும்பூர் தொகுதியில் குறிப்பிடத்தக்க இடங்களாக இருக்கின்றன.
இத்தொகுதியில் வேட்பாளரின் வெற்றியைத் தாழ்த்தப்பட்ட மக்களே தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். மேலும் வன்னியர், முதலியார், யாதவர், நாயுடு போன்ற சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர். சில பகுதிகளில் மீனவர், நாடார், செட்டியார், பிராமணர், சமூகத்தினரும், வேறு சில இடங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
சவுகார்பேட்டைக்கு அடுத்தபடியாக வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வேப்பேரி, பெரியமேடு பகுதிகள் எழும்பூர் தொகுதிக்குள் வருகின்றன. இத்தொகுதியில் உள்ள மற்றொரு முக்கியமான இடம் புதுப்பேட்டை. மோட்டார் வாகன உதிரிபாகங்களின் கேந்திரமாக இப்பகுதி திகழ்கிறது. சேத்துப்பட்டு, சூளை, ஓட்டேரி போன்ற சென்னையின் பழமையான பகுதிகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
இத்தொகுதியில் போக்குவரத்து நெரிசல் முக்கியப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக அங்குள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆக்கிரமிப்புகளும், சாலைகளில் ஆங்காங்கே கழிவுநீர் வழிந்தோடுவதும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இருப்பதாக இத்தொகுதியில் நீண்டகாலம் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
1957-ம் ஆண்டுமுதல் கடந்த 2011-ம் ஆண்டு வரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 9 தடவை திமுகவும், 2 முறை காங்கிரஸும், தலா ஒரு தடவை சுயேட்சையும், தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன. அதிக தடவையாக திமுகவைச் சேர்ந்த பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் அதிமுகவில் இருக்கிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியை தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 202 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 95,072 |
பெண் | 96,335 |
மூன்றாம் பாலினத்தவர் | 37 |
மொத்த வாக்காளர்கள் | 1,91,444 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
2011 | கு.நல்லதம்பி | தேமுதிக | தரவு இல்லை |
2006 | பரிதி இளம்வழுதி | திமுக | 48.48 |
2001 | பரிதி இளம்வழுதி | திமுக | 47.69 |
1996 | பரிதி இளம்வழுதி | திமுக | 72.57 |
1991 | பரிதி இளம்வழுதி | திமுக | 50.47 |
1989 | பரிதி இளம்வழுதி | திமுக | 49.8 |
1984 | S. பாலன் | திமுக | 51.84 |
1980 | L. இளையபெருமாள் | காங்கிரஸ் | 61.19 |
1977 | S. மணிமுடி | திமுக | 38.6 |
2006 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | பரிதி இளம்வழுதி | திமுக | 38455 |
2 | சத்யா | மதிமுக | 31975 |
3 | எதிராஜ் | தேமுதிக | 6031 |
4 | ஸ்ரீரங்கன் பிரகாஷ் | பிஜேபி | 1559 |
5 | அருண்குமார் | பி எஸ் பி | 376 |
6 | வள்ளுவன் | சுயேச்சை | 208 |
7 | இளம்பரிதி | சுயேச்சை | 167 |
8 | சிவகுமார் | சுயேச்சை | 136 |
9 | கங்காதுரை | சுயேச்சை | 114 |
10 | செல்வராஜ் | சுயேச்சை | 102 |
11 | சந்திரன் | சுயேச்சை | 81 |
12 | சசிகுமார் | சுயேச்சை | 63 |
13 | கோபால் | சுயேச்சை | 59 |
79326 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K. நல்லதம்பி | தேமுதிக | 51772 |
2 | பரிதிஇளம்வழுதி | திமுக | 51570 |
3 | குமாரவடிவேல் | பிஜேபி | 4911 |
4 | சுந்தரமூர்த்தி | ஐ ஜே கே | 1132 |
5 | சுரேஷ்பாபு | பிஎஸ்பி | 669 |
6 | பார்த்திபன் | சுயேச்சை | 468 |
7 | கதிரவன் | சுயேச்சை | 462 |
8 | சிவசங்கரன் | சுயேச்சை | 421 |
9 | B.நல்லதம்பி | சுயேச்சை | 329 |
10 | சுந்தர் | சுயேச்சை | 262 |
111996 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT