Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM
சென்னையில் வசதியானவர்கள் வாழும் பகுதி என்று முதலில் அடையாளம் காணப்பட்ட தொகுதி அண்ணா நகர். இதுவரை நடந்த 9 தேர்தலில் 7 முறை திமுகவும், காங்கிரஸ் மற்றும் அதிமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1977, 1980 தேர்தல்களில் திமுக தலைவர் கருணாநிதியும், 1984-ல் எஸ்.எம். ராமச்சந்திரனும், 1989-ல் க.அன்பழகனும், 1996, 2001, 2006 தேர்தல்களில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆற்காடு வீராசாமியும் இந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
திமுகவின் கோட்டையாக இருந்த அண்ணா நகர் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக அதிமுகவின் கோகுல இந்திரா வெற்றி பெற்றார். படித்தவர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் 2ஜி ஊழல் தாக்கம் அதிகரித்து திமுகவின் வாக்கு வெகுவாக சரிந்து, அதிமுக வெற்றி பெற்றது. இங்கு வெற்றி பெற்ற திமுக, அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொகுதி எண் 21. மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அண்ணா நகர் தொகுதி உள்ளது.
தொகுதியின் பெரும் பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெருக்கடி. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தின் பெரும் பகுதி இடம் அண்ணா நகர் தொகுதிக்குள்தான் வருகிறது. மதுரவாயலில் இருந்து அண்ணா நகருக்குள் வருவதற்கு, ஒன்றரை மணி நேரமாகிவிடுகிறது. தினமும் 4 விபத்துக்களாவது இங்கு நடக்கிறது. நெல்சன் மாணிக்கம் சாலையில் இரட்டை அடுக்கு பாலம் கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கோகுல இந்திரா குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அண்ணா நகர் ஆர்ச் பாலமே இன்னும் முடிக்கப்படாமல் நிற்கிறது.
அரும்பாக்கம், அமைந்தகரை, எம்எம்டிஏ காலனி, சாந்தி காலனி, டி.பி சத்திரம் ஆகிய பகுதிகள் அண்ணா நகர் தொகுதிக்குள் இருப்பதால் இங்கும் நிலத்தின் விலை பல மடங்கு உள்ளது. மேல் தட்டு மக்கள் வசிக்கும் பகுதி என்று அண்ணா நகர் தொகுதியின் பல பகுதிகளை சென்னை மழை வெள்ளம் திணறடித்து விட்டது. வசதியான மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் பெரிய அளவிலான திருட்டு சம்பவங்களும் இங்கு அடிக்கடி நடக்கிறது.
2011 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 88,954 வாக்குகள் பெற்று எஸ். கோகுல இந்திரா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் வி.கே. அறிவழகன் 52,364 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,39,979 |
பெண் | 1,43,709 |
மூன்றாம் பாலினத்தவர் | 66 |
மொத்த வாக்காளர்கள் | 2,83,754 |
அண்ணா நகர் தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
2011 | எஸ்.கோகுல இந்திரா | அதிமுக | |
2006 | ஆற்காடு வீராசாமி | திமுக | 46.2 |
2001 | ஆற்காடு வீராசாமி | திமுக | 48.2 |
1996 | ஆற்காடு வீராசாமி | திமுக | 67.05 |
1991 | ஏ. செல்லகுமார் | இ.தே.காங்கிரசு | 57.29 |
1989 | க. அன்பழகன் | திமுக | 49.94 |
1984 | எஸ். எம். இராமச்சந்திரன் | திமுக | 52.59 |
1980 | மு. கருணாநிதி | திமுக | 48.97 |
1977 | மு. கருணாநிதி | திமுக | 50.1 |
2006 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | ஆர்காடு வீராசாமி | திமுக | 100099 |
2 | விஜய தாயன்பன் | மதிமுக | 87709 |
3 | ராஜாமணி | எல்கேபிடி | 11665 |
4 | H.V. ஹண்டே | பிஜேபி | 7897 |
5 | செந்தாமரைகண்ணன் | தேமுதிக | 6594 |
6 | லோகநாதன் | சுயேச்சை | 683 |
7 | பாலகிருஷ்ணன் | சுயேச்சை | 443 |
8 | நாகு | சுயேச்சை | 422 |
9 | பிரேமா | சுயேச்சை | 323 |
10 | ஹரி | சுயேச்சை | 312 |
11 | சிவராமன் | சுயேச்சை | 166 |
12 | சுகுமாரன் | சுயேச்சை | 163 |
13 | நன்மாறன் | சுயேச்சை | 103 |
14 | செந்தில்முருகன் | சுயேச்சை | 80 |
216659 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | S.கோகுல இந்திரா | அதிமுக | 88954 |
2 | அறிவழகன் | காங்கிரஸ் | 52364 |
3 | ஹரிபாபு | பிஜேபி | 3769 |
4 | ஜெயப்ரகாஷ் | YSP | 763 |
5 | ஜவஹர் நேசன் | சுயேச்சை | 742 |
6 | மகாலட்சுமி | ஐ ஜே கே | 722 |
7 | உதயகுமார் | எல் எஸ் பி | 697 |
8 | கண்ணன் | பி எஸ் பி | 614 |
9 | ஆலமுத்து | ஜே எம் எம் | 557 |
10 | கலையரசன் | பு பா | 484 |
11 | சந்தானகுமார் | சுயேச்சை | 380 |
12 | செந்தில் | சுயேச்சை | 283 |
13 | திருநாவுக்கரசு | சுயேச்சை | 265 |
14 | மணிமாறன் | சுயேச்சை | 235 |
15 | கௌதம் | சுயேச்சை | 217 |
16 | அன்பழகன் | சுயேச்சை | 147 |
17 | வசிகரன் | சுயேச்சை | 130 |
18 | சம்பத்குமார் | எம்எம்கேஎ | 119 |
19 | சசிகுமார் | சுயேச்சை | 89 |
20 | ஐய்யப்பன் | சுயேச்சை | 77 |
151608 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT