Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM
இந்தியாவில் பெரும் பரப்பளவையும் அதிக வாக்காளர்களையும் கொண்டிருந்த வில்லிவாக்கம், தொகுதி மறுவரையறைக்கு பின் சராசரி சட்டமன்ற தொகுதியாக மாறியிருக்கிறது.
வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திருமங்கலம் வாட்டர் டேங்க் தொடங்கி, அண்ணாநகர் ரயில் நிலையம், சிட்கோ நகர், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ஐ.சி.எப்.), காந்தி நகர், அயனாவரம் மார்க்கெட், கெல்லிஸ் சிக்னல் வரை நீள்கிறது. தொகுதி மறுசீரமைப்பின்போது புரசைவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதில் உள்ள சில பகுதிகள் வில்லிவாக்கம் தொகுதியில் சேர்க்கப்பட்டது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
ஐ.சி.எப்., இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மனநல மருத்துவமனை, சிட்கோ நகர் ஆகியன வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்கள் ஆகும். இத்தொகுதியில் வன்னியர், நாயுடு, தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் வசிக்கின்றனர். முதலியார், ஆதி ஆந்திர மக்கள், தென்மாவட்டங்களைச் சேர்ந்த நாடார் ஆகியோரும் உள்ளனர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிட்கோ நகரும் ஒன்று. சிட்கோ நகரில் மழைநீர் வடிகால் சரிவர பராமரிக்கப்படாததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, அங்குள்ள குறு, சிறு தொழில்களில் சில தொழில்கள் மட்டுமே வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது செயல்படுகின்றன. பல தொழில்கள் இன்னமும் பாதிப்பில் இருந்து மீளவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இத்தொகுதியில் உள்ள அகத்திய நகரில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அவ்வாறு இடிந்து அருகில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவதற்கு முன்பு அத்தண்ணீர் தொட்டியை இடித்துவிடும்படி அப்பகுதி மக்கள் விடுத்து வரும் கோரிக்கை செவிமடுக்கப்படாமல் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் வந்து பார்த்து தண்ணீர் தொட்டியை இடித்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டுப் போனார்கள் அதோடு சரி என்கின்றனர் மக்கள்.
நியூ ஆவடி ரோட்டில் சென்னைக் குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் பாரதி நகர், கிழக்கு ஏரிக்கரையில் வசிக்கும் மக்களும் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். சென்னையிலே அவர்களுக்கு மாற்று இடம் தவருவதற்கான கள ஆய்வு அண்மையில்தான் நடத்தப்பட்டது.
ஜி.கே.எம். காலனியில் இரண்டாவது ரயில்வே கேட் உள்ளது. இங்கு போக்குவரத்து பிரச்சினை நீண்டகாலமாக இருப்பதால் அங்கே சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
1977-ம் ஆண்டுமுதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 9 தேர்தல்களில் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக 3 தடவை, அதிமுக 2 தடவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தடவை, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு தடவை வெற்றி பெற்றுள்ளது.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,23,549 |
பெண் | 1,26,995 |
மூன்றாம் பாலினத்தவர் | 63 |
மொத்த வாக்காளர்கள் | 2,50,607 |
தொகுதி – கடந்து வந்த தேர்தல்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1977 | கே. சுப்பு | திமுக | 37327 | 41.07 |
1980 | ஜே. சி. டி. பிரபாகரன் | அதிமுக | 57192 | 47.84 |
1984 | வி. பி. சித்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட்) | 81595 | 48.21 |
1989 | டபள்யு. ஆர். வரதராசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 99571 | 46.77 |
1991 | இ. காளன் | காங்கிரஸ் | 118196 | 55.49 |
1996 | ஜே. எம். ஆரூண் ரசித் | தமாகா | 194471 | 70.24 |
2001 | டி. நெப்போலியன் | திமுக | 164787 | 48.21 |
2006 | பி. அரங்கநாதன் | திமுக | 278850 | --- |
2011 | ஜே. சி. டி. பிரபாகரன் | அ.தி.மு.க | --- | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1977 | ஆர்.ஈசுவர் ராவ் | அதிமுக | 29429 | 32.38 |
1980 | கே. சுப்பு | திமுக | 56489 | 47.25 |
1984 | ஜே. சி. டி. பிரபாகரன் | அதிமுக | 80549 | 47.59 |
1989 | டி பாலசுப்பரமணியன் | அதிமுக (ஜெ) | 40150 | 18.86 |
1991 | டபள்யுஆர். வரதராசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 71963 | 33.79 |
1996 | எம். ஜி. மோகன் | காங்கிரஸ் | 46724 | 16.88 |
2001 | எ. செல்லகுமார் | தமாகா | 155557 | 45.51 |
2006 | ஜி. காலன் | அதிமுக | 248734 | --- |
2011 | க. அன்பழகன் | தி.மு.க | --- | --- |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2006 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | ரங்கநாதன் | திமுக | 278850 |
2 | காளன் | அதிமுக | 248734 |
3 | வேல்முருகன் | தேமுதிக | 51892 |
4 | ரவிசுந்தரம் | பிஜேபி | 9202 |
5 | பிரேமா | எல் கே பி டி | 6473 |
6 | தியாகராஜன் | சுயேச்சை | 2610 |
7 | சதீஸ் குமார் K P | சுயேச்சை | 2189 |
8 | மோகன் | சுயேச்சை | 2051 |
9 | ஸ்ரீநிவாசன் | பி எஸ் பி | 1670 |
10 | சதீஷ்குமார் .S | சுயேச்சை | 1651 |
11 | மகாலட்சுமி | எஸ் பி | 745 |
12 | பழனிவேல் | சிபிஐ( M L ) | 741 |
13 | கணேசன் | எ ஐ எப் பி | 731 |
14 | வெங்கடேசன் | எல் ஜே பி | 617 |
15 | ஜோஷி | சுயேச்சை | 611 |
16 | குமார் | சுயேச்சை | 473 |
17 | பாலமுருகன் | சுயேச்சை | 371 |
18 | மோகன்குமார் | சுயேச்சை | 333 |
19 | கருணாகரன் | சுயேச்சை | 322 |
20 | ராஜேந்திரன் | சுயேச்சை | 312 |
21 | அசோக் | சுயேச்சை | 279 |
22 | குணசேகரன் | சுயேச்சை | 227 |
611084 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | ஜே. சி. டி. பிரபாகரன் | அதிமுக | 68612 |
2 | Kஅன்பழகன் | திமுக | 57830 |
3 | மாசான முத்து | பா ஜ க | 1850 |
4 | K.P.சதீஷ் குமார் | எம்எம்கேஎ | 589 |
5 | மதியழகன் | பி எஸ் பி | 528 |
6 | வள்ளல் | சுயேச்சை | 383 |
7 | சாந்தகுமார் | சுயேச்சை | 238 |
8 | பில் லிக்ஸி | சுயேச்சை | 197 |
9 | பிரதாபன் | சுயேச்சை | 189 |
10 | குணசேகரன் | சுயேச்சை | 116 |
11 | சரவணன் | சுயேச்சை | 116 |
12 | அய்யவூ | சுயேச்சை | 90 |
13 | பாஸ்கர் | சுயேச்சை | 90 |
130828 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT