Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM
தமிழகத்தின் மிகச் சிறிய சட்டப்பேரவைத் தொகுதி சேப்பாக்கம் ஆகும். தலைநகர் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் அதிகமாக வசிப்பதோடு, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கிறார்கள்.
உலகின் மிக நீண்ட அழகிய கடற்கரையான மெரினா பீச் இந்தத் தொகுதியின் பிரதான அடையாளமாக உள்ளது.
தமிழகத்தின் புகழ்மிக்க தலைவர்களான அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்,காயிதே மில்லத் போன்றோர்களின் நினைவிடங்கள் மற்றும் விவேகானந்தர் இல்லம், மகாகவி பாரதியார் இல்லம் ஆகியனவும் இந்தத் தொகுதியில்தான் அமைந்துள்ளன.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
பார்த்தசாரதி கோயில், பெரிய மசூதி, சென்னை பல்கலைக் கழகம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம்,சட்டப்பேரவை உறுபினர்கள் விடுதி உள்ளிட்ட சென்னையின் மிக முக்கியமான அடையாளங்கள் நிறைந்துள்ள தொகுதியாகவும் இது விளங்குகிறது.
கடந்த திமுக ஆட்சியின்போது இந்தத் தொகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் மிக பிரமாண்டமாய் கட்டப்பட்டது. அடுத்த வந்த அதிமுக ஆட்சியில் அவை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அண்ணா சாலையை ஒட்டியுள்ள ரிச்சி தெரு,குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுகிறது.உலகின் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களின் உதிரி பாகங்களும் இங்கே கிடைக்கின்றன.
இந்தத் தொகுதியில் அச்சகங்களும், மேன்சன்களும் அதிகமாக உள்ளன.இந்தத் தொகுதியிலுள்ள சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட்,மீன் ஏற்றுமதிக்கு பெயர் பெற்றது. அயோத்திக்குப்பம், நடுகுப்பம், மாட்டாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களும் ஜாம்பஜார்,ஐஸ் ஹவுஸ், மீர்சாகிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களும் அதிக அளவில் வசிக்கிறார்கள்.
1977 முதல் 2011வரை நடைபெற்றுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 8 முறை திமுகவும்,1991 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியில் 1996, 2001, 2006 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றுமுறை தொடர்ந்து போட்டியிட்டு திமுக தலைவர் மு.கருணாநிதி வெற்றி பெற்றிருக்கிறார்.
2007-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின், இந்தத் தொகுதி திருவல்லிக்கேணி தொகுதியோடு இணைக்கப்பட்டு, தற்போது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி என்றழைக்கப்படுகிறது. இந்தத் தொகுதி சென்னை மாநகராட்சியின் வார்டு-79, 81 முதல் 93வரை மற்றும் 111 ஆகிய வார்டுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
2011 சட்டப்பேரவை தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார்.
போக்குவரத்து வசதிகள்,வேலை வாய்ப்பு,ரேஷன் விநியோகம் ஆகியவை சிறப்பாக இருப்பதாகவும்,கழிவுநீர் வெளியேற்றுதல், குப்பை அகற்றுதல், சாலை வசதிகள் ஆகியன இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,13,330 |
பெண் | 1,17,193 |
மூன்றாம் பாலினத்தவர் | 24 |
மொத்த வாக்காளர்கள் | 2,30,547 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | J .அன்பழகன் | திமுக | 64191 |
2 | தமீமுமன்சாரி | MAMAK | 54988 |
3 | வெங்கடராமன் | பிஜேபி | 5374 |
4 | அப்துல் ரஹீம் | ஐஎன்எல் | 1271 |
5 | ரகு | பி எஸ் பி | 894 |
6 | ஸ்ரீதரன் | சுயேச்சை | 812 |
7 | சுந்தரி | சுயேச்சை | 473 |
8 | பிரபு | பு பா | 443 |
9 | ஹமீது ஹுசைன் | ஆர் பி ஐ | 375 |
10 | அன்பழகன் | சுயேச்சை | 341 |
11 | ஜெகபதி கிருஷ்ணன் | சுயேச்சை | 187 |
12 | ராஜசேகரன் | சுயேச்சை | 178 |
13 | நாகராஜ் | சுயேச்சை | 178 |
14 | திருமலை பாண்டி | சுயேச்சை | 131 |
129836 |
2006 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | கருணாநிதி | திமுக | 34183 |
2 | தாவூன் மியாகான் | சுயேச்சை | 25662 |
3 | நாராயணசாமி பி | தேமுதிக | 3681 |
4 | சிவனேசன் | பிஜேபி | 1124 |
5 | இளந்திருமாறன் | எல்.கே.பி.டி. | 669 |
6 | முகமது மீரா.ஏ | சுயேச்சை | 349 |
7 | மியா கான் | சுயேச்சை | 272 |
8 | சுப்பிரமணியன் | சுயேச்சை | 238 |
9 | கருணாநிதி | சுயேச்சை | 223 |
10 | அன்பழகன் | சுயேச்சை | 341 |
11 | தலித் குடிமகன் என்ற தயா கிருஷ்ணமூர்த்தி | பிஎஸ்பி | 105 |
12 | சாய் கணேஷ் | சுயேச்சை | 91 |
13 | பத்மராஜன் | சுயேச்சை | 178 |
14 | ஜாபர் அலி | சுயேச்சை | 88 |
15 | பாலாஜி வெங்கடேஸ்வரவன் | சுயேச்சை | 69 |
16 | பாலாஜி.பி. | ஆர்.எல்.டி | 51 |
17 | ரகுராமன் | சுயேச்சை | 44 |
18 | அமிதியூஸ் | சுயேச்சை | 35 |
19 | சத்யவேலு | சுயேச்சை | 34 |
20 | வேணுகோபால் | சுயேச்சை | 30 |
21 | சுப்பையா | சுயேச்சை | 27 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT