Published : 05 Apr 2016 02:49 PM
Last Updated : 05 Apr 2016 02:49 PM
பின்தங்கிய அரியலூர் மாவட்டத்தின் புறக்கணிப்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி. தொகுதி மறுசீரமைப்பில் ஆண்டிமடம் திருத்தப்பட்டு ஜெயங்கொண்டம் உருவானது. வாழ்வாதார பிரச்சினைகளில் அரியலூருக்கு சிமென்ட் என்றால் ஜெயங்கொண்டத்திற்கு நிலக்கரி. இங்கு நிலக்கரி திட்டத்திற்காக நிலத்தை கொடுத்துவிட்டு நீதிமன்றத்திற்கு நடந்துகொண்டிருப்பவர்கள் ஏராளாம். நிலக்கரியை அடுத்து அண்மையில் காலூன்றிய பாறை எரிவாயு திட்டம் தொகுதியின் விவசாயிகளை அதிருப்தி அடைய செய்திருக்கிறது.
சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரமும் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட மரபு அடையாளமான பெருவுடையார் கோவிலும் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள சோழன் அரண்மனையின் அகழ்வாய்வுகளான மாளிகைமேடு மற்றும் சுபாஷ்கபூரால் சர்வதேச அளவில் சிலைக்கடத்தலுக்கு ஆளான பல புராதான கோயில்களும் சிறப்பு நிறைந்தவை. சோழனின் நீராலான வெற்றித்தூணான பொன்னேரி பொலிவை இழந்துகொண்டிருக்கிறது. இது உட்பட தொகுதியின் பல்வேறு நீராதார நிலைகள் அழிந்துகொண்டிருக்கின்றன.
அடிப்படை வசதிகள் அற்ற கிராமங்கள் இங்கு அதிகம். சாலை வசதி, போக்குவரத்து வசதிகளுக்காக இன்னமும் இங்குள்ள மக்கள் போராடி வருகிறார்கள். மாவட்டத்தின் ஒரே அரசு கலைக்கல்லூரி அரியலூரில் உள்ளதால், தங்கள் பகுதிக்கென அரசு கல்லூரி கேட்டு ஜெயங்கொண்டம் மக்கள் காத்திருக்கின்றனர். இதனால் விருத்தாசலம், கும்பகோணம் என வெளிமாவட்ட கல்வி நிலையங்களுக்கு ஜெயங்கொண்டம் தொகுதி மக்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கான அரசு போக்குவரத்து வசதியும் இல்லாததால், தா.பழூர் பகுதியில் வாரம் ஒருமுறையேனும் சாலை மறியல் அரங்கேறும். அரசு கல்வி நிலையங்கள் இங்கே அதிகம் ஆரம்பிக்கப்பட்டால், பகுதியின் பரவலான சட்டம் ஒழுங்கு பிரச்சினை சுமூகமாகும் என சமூக ஆர்வலர்கள் கோருகிறார்கள். 20 ஆண்டுகளாக ஆரம்பிக்கப்படாது இழுத்துக்கொண்டிருக்கும் ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டை உரியவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் பயனில்லை. இதனால் விவசாய நிலத்தை திருப்பி கொடுங்கள் என்று மக்கள் போராட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பயன்பாட்டுக்கு வராத உடையார்பாளையம் பேருந்து நிலையம், கிடப்பிலிருக்கும் ஜெயங்கொண்டம் புதை சாக்கடைப்பணிகள், தூர்வாரப்படாத ஏரிகள், நடைமுறைக்கு வராத முந்திரி தொழிற்சாலை வாக்குறுதிகள், சிலைகள் பாதுகாப்பு மையம், குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு என தொகுதியின் நீண்ட கால எதிர்ப்பார்ப்புகள் கண்டுகொள்ளப்படாது இருக்கின்றன.
4 முறை காங்கிரஸ், 5 முறை திமுக, 3 முறை அதிமுக என ஜெயங்கொண்டம் தொகுதியில் கட்சிகளின் முந்தைய வெற்றிகள் அமைந்துள்ளன. இவர்களை தொடர்ந்து நடப்பு எம்.எல்.ஏவாக பாமகவின் ஜெ.குருநாதன் உள்ளார். கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும், பகுதியின் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றவராகவும் குரு இருந்தும், சட்டமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை பேசவோ, அவர்களுக்காக திட்டங்களை கோரிப்பெறவோ அவர் நடவடிக்கை எடுக்காதது வாக்காளர் மத்தியில் ஏமாற்றமாக உள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் | அதிமுக |
2 | ஜி.ராஜேந்திரன் | காங்கிரஸ் |
3 | எம்.எஸ்.கந்தசாமி | மதிமுக |
4 | குரு (எ) ஜெ.குருநாதன் | பாமக |
5 | சு.கிருஷ்ணமூர்த்தி | பாஜக |
6 | குமுதவாணன் (எ) ரா.கிருஷ்ணமூர்த்தி | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
உடையார்பாளையம் வட்டம் (பகுதி), ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அனிக்குதிச்சான் (வடக்கு), அனிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், தண்டலை, கீழகுடியிருப்பு, பிராஞ்சேரி, வெத்தியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி, சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியான், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள், வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,23,645 |
பெண் | 1,26,526 |
மூன்றாம் பாலினத்தவர் | - |
மொத்த வாக்காளர்கள் | 2,50,171 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | அய்யாவு | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 58397 |
1957 | விசுவநாதன் | காங்கிரசு | 20232 |
1962 | ஜெகதாம்பாள் வேலாயுதம் | திமுக | 33005 |
1967 | கே. எ. எ. கே. மூர்த்தி | திமுக | 34751 |
1971 | எ. சின்னசாமி | திமுக | 41627 |
1977 | வி. கருணாமூர்த்தி | அதிமுக | 35540 |
1980 | பி. தங்கவேலு | காங்கிரஸ் | 39862 |
1984 | என். மாசிலாமணி | காங்கிரஸ் | 57468 |
1989 | கே. சி. கணேசன் | திமுக | 22847 |
1991 | கே. கே. சின்னப்பன் | காங்கிரஸ் | 49406 |
1996 | கே. சி. கணேசன் | திமுக | 52421 |
2001 | எசு. அண்ணாதுரை | அதிமுக | 70948 |
2006 | கே. இராசேந்திரன் | அதிமுக | 61999 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1951 | கே. ஆர். விசுவநாதன் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 57775 |
1957 | செயராமுலு செட்டியார் | சுயேச்சை | 10625 |
1962 | எஸ். சாமிக்கண்ணு படையாச்சி | காங்கிரஸ் | 24856 |
1967 | எஸ். இராமசாமி | காங்கிரஸ் | 28791 |
1971 | எஸ். இராமசாமி | ஸ்தாபன காங்கிரஸ் | 29346 |
1977 | கே. சி. கணேசன் | திமுக | 23828 |
1980 | டி. செல்வராசன் | அதிமுக | 34955 |
1984 | ஜெ. பன்னீர்செல்வம் | ஜனதா கட்சி | 22778 |
1989 | முத்துக்குமாரசாமி | சுயேச்சை | 17980 |
1991 | எஸ். துரைராசு | பாமக | 33238 |
1996 | குரு என்கிற ஜெ. குருநாதன் | பாமக | 39931 |
2001 | கே. சி. கணேசன் | திமுக | 45938 |
2006 | குரு என்கிற ஜெ. குருநாதன் | பாமக | 59948 |
2006தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K.ராஜேந்திரன் | அ.தி.மு.க | 61999 |
2 | J. குரு(எ)குருநாதன் | பா.ம.க | 59948 |
3 | M. ஜான்சன் | தே.மு.தி.க | 6435 |
4 | K. செந்தமிழ்செல்வி | சுயேட்சை | 1866 |
5 | S. ராமேஷ் | சுயேட்சை | 1189 |
6 | R. சசிகுமார் | பி.ஜே.பி | 1139 |
7 | V. உமாபதி | பி.ஸ்.பி | 1095 |
8 | E. கவியரசி | சுயேட்சை | 976 |
9 | R. அய்யப்பன் | சுயேட்சை | 384 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | J. குரு (எ) குருநாதன் | பா.ம.க | 92739 |
2 | P. இளவழகன் | அ.தி.மு.க | 77601 |
3 | S. கிருஷ்ணமூர்த்தி | பி.ஜே.பி | 1775 |
4 | G. ராமசந்திரன் | ஐ.ஜே.கே | 1771 |
5 | V. வடிவேல் | சுயேட்சை | 1698 |
6 | N. ஞானசேகரன் | பி.ஸ்.பி | 1255 |
7 | P. கணேசன் | சுயேட்சை | 989 |
8 | C. சக்கரவர்த்தி | சுயேட்சை | 948 |
9 | T. மல்லிகா | சுயேட்சை | 916 |
10 | P. ஆசைதம்பி | ஆர்.ஜே.டி | 289 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT