Published : 05 Apr 2014 08:34 PM
Last Updated : 05 Apr 2014 08:34 PM

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

எம்.ஊர்க்காவலன் - மாநிலப் பொறுப்பாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி.

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை முழுமையாகச் செலவிடப்படுவதில்லை. அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும். இதுகுறித்துக் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பலமுறை அதிகாரி களிடம் முறையிட்டும் பலன் இல்லை. தவிர, ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அவர்களுக்கு உணவு வழங்குவதிலும் ஊழல் நடக்கிறது.

ஏ.விஜயமுருகன் - மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

விருதுநகர் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப் பட்டும் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் முழுமையாக அளிக்கப்படவில்லை. அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் விவசாயிகளின் பிரச்சினைகளைக் கண்டுகொள்வதே இல்லை. மாவட்டத்திலுள்ள 998 கண்மாய்களில் பல தூர்வாரப்படாமலும், கரைகள் உயர்த்தப்படாமலும் இருக்கின்றன. அவற்றைச் சரிசெய்தாலே நிலத்தடி நீர்ஆதாரத்தை அதிகரிக்கச் செய்து குடிநீர்த் தட்டுப்பாட்டை ஈடுகட்ட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x