Published : 15 Mar 2014 06:59 PM
Last Updated : 15 Mar 2014 06:59 PM
மோகன் சாது - ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளை நிறுவனர்:
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆயிரக் கணக்கான சாதுக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கொடுத்துவந்த அடையாள அட்டைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. அவர்களுக்கு இருப்பிடம் இல்லை என்று கூறி, வாக்காளர் அடையாள அட்டை வழங்க மறுக்கின்றனர். வட மாநிலங்களில் சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பு வந்த பிறகும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையம்தான் இதற்குத் தீர்வு காண வேண்டும்.
ரேணு - விவசாய சங்கம்:
திருவண்ணாமலை தொகுதியில் வேளாண் பண்ணை கொண்டுவரப்பட்டது. இப்போது அது செயல்பாடு இல்லாமல் கிடக்கிறது. பண்ணைக்கு 10 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தும் பலன் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் அலட்சியம்தான் இதற்குக் காரணம். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கி உற்பத்தியைப் பெருக்குவோம் என்றனர். விதைப் பண்ணை செயல்பாடு இல்லாததால் விவசாய உற்பத்தி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இங்கு வேளாண் பண்ணை செயல்பட்டிருந்தால், தொகுதியில் வேளாண்மைக் கல்லூரியும் வந்திருக்கும். அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT