Published : 04 Mar 2014 08:40 PM
Last Updated : 04 Mar 2014 08:40 PM
2011 சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர்
வென்றவர்.பி.வி .ரமணா (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 91337
வெற்றி வாய்ப்பை இழந்தவர் : இ.ஏ.பி. சிவாஜி ( திமுக)
பெற்ற வாக்குகள்: 67689
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் பி.வி ரமணா இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். மாவட்ட தலைநகர் , காக்களூர் தொழிற்பேட்டை, புதிதாக உருவாகி வரும் குடியிருப்பு பகுதிகள், விவசாய கிராமங்கள் என்று கலந்த தொகுதி திருவள்ளூர். வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை, பொது சுகாதாரம் மற்றும் கழிவுநீர் அகற்ற போதுமான வசதிகள் இல்லை,உள்ளூர் போக்குவசதிகள் திருப்தி இல்லை ஆகியவை மக்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. அருகாமை பள்ளி,கல்லூரிகள், குடிநீர் வசதிகள் , மின் விநியோகம் ஆகியவை பெரும்பான்மை மக்களின் திருப்தியாக ஆய்வு முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் தாம்பரத்தில் நின்று செல்வது போல வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். விவசாயத்துக்கு அரசின் உதவிகள் தேவை. வேகமாய் வளர்ந்து வரும் திருவள்ளூர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் .போக்குவரத்து நெரிசல்களை ஒழுங்கு படுத்த வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் ஆகியவை மக்களின் எதிர்பார்ப்புகளாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT