Published : 17 May 2014 08:28 AM
Last Updated : 17 May 2014 08:28 AM

சென்னையில் 3 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி

வடசென்னை மக்களவை தொகுதி யில் அதிமுக முதல் முறையாக வெற்றிக்கனியை பறித்துள்ளது. அங்கு முடிவுகளை வெளியிடு வதில் மற்ற தொகுதிகளைக் காட்டி லும் பெரிதும் தாமதம் ஏற்பட்டது.

40 வேட்பாளர்கள்

அத்தொகுதியில் அதிமுக சார்பில் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, திமுக தரப்பில் கிரிராஜன், தேமுதிக சார்பில் சவுந்தரராஜன், காங்கிரஸ் கட்சியில் பிஜு சாக்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாசுகி உள்ளிட்ட 40 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணும் சில அறைகளில் பத்திரிகையாளர் களுக்கு அனுமதி மறுக்கப்பட் டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தையடுத்து அந்த அறைகளுக்குச் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

திமுக வேட்பாளர் சோகம்

காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே வந்துவிட்டபோதிலும், திமுக வேட்பாளர் கிரிராஜனிடம் தேர்தல் பிரச்சாரத்தின்போது இருந்த உற்சாகத்தைக் காண முடியவில்லை. ராணி மேரி கல்லூரியில் சற்று இடநெருக்கடி இருந்ததால், சில அறைகளில் 14 மேசைகளுக்குப் பதிலாக 10 மேசைகள் மட்டுமே போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. இதனால் அதிகாரப்பூர்வமான முதல் சுற்று முடிவுகள் காலை 10.30 மணி அளவிலேயே வெளியி டப்பட்டது. குறிப்பாக ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

முதல்முறையாக..

வடசென்னை மக்களவைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். காலத்தில் 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல் களில் போட்டியிட்ட அதிமுக தோல்வியையே தழுவியது. அதன் பிறகு, அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கே அந்த தொகுதியை ஒதுக்கி வந்தது. இந்நிலையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு முதல் முறை யாக அதிமுக தனித்துப் போட்டியிட்டது. எனினும், மற்ற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிக்கனியைப் பறித்துள்ளது.

மத்திய சென்னை

மத்திய சென்னை தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தோல்வியடைந்தார். இத்தொகுதி யில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் 45,841 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் மத்திய சென்னை தொகுதியை மூன்றாவது முறை யாக வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை செய்யும் தயாநிதி மாறனின் கனவு தகர்ந்தது.

மத்திய சென்னை நாடாளு மன்றத் தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கும், திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தொகுதிக்கான ஓட்டுகள் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டது. கடந்த இரண்டு தேர்தலிலும் இத்தொகுதியில் வெற்றி பெற்ற தயாநிதி மாறன், இம்முறையும் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைப்பார் என்று திமுகவினர் நம்பியிருந்தனர்.

ஆனால், வாக்கு எண்ணிக்கை யின் ஆரம்பத்தில் இருந்தே அதிமுக வேட்பாளர் விஜயகுமாரைவிட தயாநிதிமாறன் பின்தங்கி இருந்தார். இத்தொகுதியில் தபால் வாக்குகளையும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 14 ஆயிரத்து 894 வாக்குகள் பதிவாகின. இதில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 3 லட்சத்து 33 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்றார். தயாநிதி மாறனுக்கு 2 லட்சத்து 87 ஆயிரத்து 455 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 45 ஆயிரத்து 841 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியைப் பறித்தார்.

தேமுதிக வேட்பாளராக இத்தொகுதியில் போட்டியிட்ட ரவிந்திரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 798 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் சி.டி.மெய்யப்பனுக்கு 25 ஆயிரத்து 981 வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜெ. பிரபாகருக்கு 19 ஆயிரத்து 553 வாக்குகளும் கிடைத்தன. நோட்டாவுக்கு 21 ஆயிரத்து 959 பேர் வாக்களித்துள்ளனர். மத்திய சென்னை தொகுதியில் தேமுதிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.

தென் சென்னை

தென் சென்னை தொகுதியில் முதல் 2 சுற்றுகளிலேயே திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் ஓட்டு எண்ணும் மையத்தி லிருந்து வெளியேறினார். அவருக் குப்பதில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை கவனித் துக் கொண்டார்.

முன்னிலையில் இருக்கும் போதே அதிமுக வேட்பாளருக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டு, தேர்தல் அலுவலர்கள் அவருக்கு வணக்கம் செலுத்திய வண்ணம் இருந்தனர். தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை விட முதல் சுற்று எண்ணிக்கையில், 7,000 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். இரண்டாவது சுற்றில் திமுக முன்னிலைக்கு வரும் என்று திமுகவினரும், பாஜக முன்னிலைக்கு வரும் என்று பாஜகவினரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால், 2 மற்றும் 3 சுற்றுகள் மட்டுமின்றி, தொடர்ந்து 14 சுற்றுகளிலும் அதிமுக முன்னி லையிலேயே இருந்தது. இந்நிலை யில், இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுகளிலும் அதிமுக முன்னிலைக்கு வந்ததால், திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.

அவருக்குப் பதில் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணி யன் வாக்கு எண்ணும் மையத்தி லிருந்து வாக்கு எண்ணிக்கை யைக் கவனித்தார். பாஜக வேட்பாளர் இல.கணேசன் கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தார். அதேநேரம் மிகக் குறைந்த வாக்குகள் பெற்றாலும் காங்கிரஸ் வேட்பாளர் ரமணி, தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் காங்கிரஸார் உற்சாகமாகவே இருந்தனர். “நாங்கள் எதிர்பார்த்தது போலவே நடந்துள்ளது. இதில் உற்சாகம் குறைய என்ன இருக்கிறது? அதிமுக வேட்பாளர் ஜெயவர் தன் உள்பட அனைத்து வேட்பாளர் களும் ஒரே அறையில் அருகருகே நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அனைவருடனும் இருந்த அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், முதல் 2 சுற்றில் முன்னிலைக்கு வந்ததும், தனி நாற்காலி போட்டு அவரையும், அவரது ஆதரவாளர்களையும் அமர வைத்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ., செந்தமி ழன் எந்த தடையுமின்றி, வாக்கு எண்ணும் மையத்துக்குள் சென்று வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வருவதற்கு தடையிருந்தாலும், அவரை போலீஸாரும், தேர்தல் அலுவலர்களும் தடையின்றி மொபைல் போனுடன் அனுமதித்ததாக புகார் எழுந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x