Published : 21 Apr 2014 10:20 AM
Last Updated : 21 Apr 2014 10:20 AM
தமிழகத்தின் தனித்துவமான நகரம், கோயமுத்தூர். ஆனால் விசால மான கோவை நகரின் வீதிகளுக்கும் அங்கு வாழும் மக்களின் பேரன் புக்கும் கொஞ்சமும் பொருத்தமற்ற தாக இருக்கிறது, கோவை பற்றி அதற்கு வெளியே இருக்கும் மனப்பதிவு. 1998ல் நடந்த குண்டு வெடிப்புக்கு பிறகுதான் இப்போது கோவை பற்றி இருக்கும் மனப்பதிவு உருவாகியிருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் கோவை வீதிகளின் ஊடாக பயணித்தால் அது சமூக நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்திருக்க வேண்டிய நகரம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
இஸ்லாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து வியாபாரம் செய்யும் சந்தைகள், இஸ்லாமிய வீதிகளின் நடுவில் இருக்கும் கோயில்கள், கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் வீதிக்கு இஸ்லாமிய பெயர் என்று பிரமிப்பூட்டுகிறது கோவை மாநகர். ஆனால் இன்று ஒட்டுமொத்த இந்தியாவாலும் மதக் கலவரங்கள் நிகழக்கூடிய சிக்கலான இடங்க ளில் ஒன்றாக கோவை அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறது.
இன்று பாஜக.வின் கோட்டை என்று பாஜக.வினர் பெருமைப் பட்டுக்கொள்ளும் கோவை மாநகர் ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்திருக்கிறது என்று சொன்னால் இன்றைய தலைமுறையினருக்கு நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். இங்கு நடந்த பதினைந்து பாராளுமன்ற தேர்தல்களில் ஏழு முறை கம்யூ னிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த வேட் பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கோவை பாராளுமன்றத் தொகுதி யின் ஒரே பெண் எம்.பியாக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பார்வதி கிருஷ்ணன்.
ஆறு முனைப் போட்டி
இந்நிலையில் ஆறு முனை போட்டி காண்கிறது கோவை பாராளுமன்ற தொகுதி. இப்போது எம்.பியாக இருக்கும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் தவிர பாஜக சார் பில் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக.வின் கணேஷ்குமார், அதிமுக.வின் நாகராஜன், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரபு, ஆம் ஆத்மி கட்சி சார்பாக பொன் சந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஆனால் போட்டி உண்மையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட் பாளர்கள் இடையேதான் என்கிறார் கள் அரசியல் நோக்கர்கள். 1998, 99 என ஏற்கெனவே இரண்டு முறை எம்.பியாக இருந்த சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு தொடக்கத்தில் கட்சிக்குள்ளேயே சில சிக்கல்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் சரி கட்டி வேலைகளை தொடங்கி யிருக்கிறார். கோவையைப் பொறுத்தவரையில் அவர் எப் போதும் இந்து ஓட்டுகளை மட்டுமே குறி வைத்ததில்லை. "மோடி போல அல்லாமல் இஸ்லா மிய பகுதிகளுக்குள் செல்வது, அவர்களது தொப்பியை அணிவது என்று சகஜமாக பழகுகிறார். ஆனால் அவை ஓட்டுக்களாக மாறுமா என்றுதான் தெரிய வில்லை" என்கிறார் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணன்.
பாஜக.வுக்கு பொதுவாக வெற்றி வாய்ப்புகள் இருந்தாலும் அதற்கு மோடி அலை காரணமில்லை என்பதை உணர முடிகிறது. "நாட்டுக்கு பாதுகாப்பாக இருக்க லாம் என்றுதான் பாஜக.வுக்கு வாக் களிக்க இருக்கிறோம். மற்றபடி மோடி அல்லாமல் அத்வானி போன்ற ஒருவர் பிரதமரானாலும் சரி" என்கிறார் சுண்டகாமுத்தூர் டீக்கடை ஊழியர் விஜய்.
பொது மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பது வெளிப் படை. "யார் பிரதமராக வந்தாலும் கோவை இன்னொரு ஜாதி கலவரத்துக்கு தயாராக இல்லை. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உண்மையிலேயே வளர்ச் சிக்குதான் உழைக்க வேண்டும்" என்கிறார் கிருஷ்ணன். கோவை மக்களின் எண்ண ஓட்டமும் இதுவே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT