Published : 07 Apr 2014 11:48 AM
Last Updated : 07 Apr 2014 11:48 AM
சென்னையில் உள்ள 3 நாடாளு மன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் சனிக்கிழமை வந்தனர். வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து தேர்தல் குறித்த நடைமுறைகள் விதிகளுக்கு உட்பட்டு நடக்கின்றனவா என பார்வையிடுவர்.
வட சென்னை தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் பி.எஸ். புருஷோத்தமன். இவரது செல்போன் எண் 83000 76607. தென் சென்னை தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராணி ஜார்ஜ். இவரை 83000 76610 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மத்திய சென்னை தேர்தல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் வர்மா. இவரை 83000 76613 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பணம் கொடுப்பது, வேட்பாளரின் செலவு வரம்பு மீறல், தடை செய்யப்பட்ட இடங்களில் சுவ ரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், பேனர்கள் வைப்பது உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து பொது மக்கள் மாவட்ட தேர்தல் துறையிடம் புகார் கொடுக்கலாம். இவர்கள் ஏப்ரல் 24-ம் தேதி தேர்தல் நடந்து முடியும் வரை சென்னையில் இருப்பர். பின்பு மீண்டும் வாக்குகள் எண்ணப்படும் போது இங்கு வருவர்.
மூன்று தேர்தல் பார்வையாளர்களும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விருந்தினர் மாளிகையின் தொடர்பு எண்: 044 2536 7253/ 54/ 59.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT