Published : 29 Apr 2014 09:55 AM
Last Updated : 29 Apr 2014 09:55 AM

டெல்லியில் திமுக, அதிமுகவுக்கு சொந்தமாக கட்சி அலுவலகங்கள்: முழுவீச்சில் பணிகள் தொடக்கம்

தலைநகர் டெல்லியில் திமுக மற்றும் அதிமுகவுக்கு சொந்தமாக கட்சி அலுவலகம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தால் அங்கீ காரம் பெற்றுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு டெல்லியில் சொந்தமாக அலுவலகம் உள்ளது. அரசியல் கட்சிகள் அலுவலகம் கட்டுவதற்காக டெல்லி மாநகராட்சி யிலிருந்து 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, பாஜக மட்டுமே சுமார் 50 ஏக்கர் நிலத்தை கட்சி அலுவலகங்களுக்காக வளைத்துப் போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பிரதான கட்சி களான அதிமுகவுக்கும் திமுகவுக் கும் இதுவரை டெல்லியில் சொந்த மாக அலுவலகம் இல்லை. இப் போது இந்த இரு கட்சிகளுக்கான அலுவலகங்கள் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

திமுக தொழிற்சங்கமான தொழி லாளர் முன்னேற்ற சங்கப் பேர வைக்கு (தொமுச) டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்காக மாநக ராட்சியை அணுகி இடம் கேட்டுள் ளனர். ஆனால், தொழிற்சங்கங் களுக்கு நிலம் வழங்க முடியாது. கட்சியின் பெயரில்தான் வழங்க முடியும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து, ‘‘கட்சியின் பெயரிலேயே நிலத்தை குத்தகைக்கு பெற்று அலுவலகம் கட்டிவிடுங்கள்’’ என்று திமுக தலைவர் கருணாநிதி யோசனை கூறியுள்ளார்.

இதையடுத்து, புதுடெல்லி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பத்தாயிரம் சதுரஅடி நிலத்தை மாநகராட்சியிடம் 99 ஆண்டு குத்தகைக்கு பெற்றிருக்கிறது திமுக. இதற்கான வைப்புத் தொகையாக 23 லட்சம் செலுத்தப்பட்டதுடன், ஆண்டு குத்தகையாக 50 ஆயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்துப் பணிகளும் முடிந்து தற்போது வரைபட அனுமதிக்காக காத்திருக்கின்றனர். பத்தாயிரம் சதுரஅடி இடத்தில் இரண்டாயிரம் சதுரஅடியில் 5 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்படுகிறது. தரைதளத்தில் வரவேற்பு அறை, கார் பார்க்கிங் வசதிகள், முதல் தளத்தில் தொமுச அலுவலகம், இரண்டாம் தளத்தில் கூட்ட அரங்கு, மூன்றாம் தளத்தில் முக்கிய பொறுப்பாளர்களின் உதவியாளர்கள் தங்கும் அறைகள், நான்காம் தளத்தில் கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான பிரத்யேக அறைகள் என உருவாகிறது திமுக அலுவலகம். இதற்கான திட்டமதிப்பீடு 2 கோடி ரூபாய். இதில் ஐம்பது லட்சத்தை தொமுச வழங்குகிறது. மீதித் தொகைக்கான பொறுப்பு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆறே மாதத்தில் கட்டிடப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

திமுகவுக்கு கட்சி அலுவலகம் கட்ட முயற்சிகள் நடப்பதை அறிந்து அதிமுகவும் டெல்லியிலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இடம் வாங்கி இருக்கிறது. அந்த இடத்தில் இப்போது கட்சி அலுவலகம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x