Published : 30 Apr 2014 11:30 AM
Last Updated : 30 Apr 2014 11:30 AM
அதிமுகவின் பண விநியோகத்தை யும் மீறி 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ஜனநாயக முற் போக்கு கூட்டணி வெற்றிபெறும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் கூறினார்.
காதர்மொய்தீன், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் திமுக தலைவர் கருணாநிதியை செவ் வாய்க்கிழமை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆளும் கட்சியின் பண விநியோகத்தையும் மீறி 40 தொகுதிகளிலும் ஜன நாயக முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும். இந்த தேர்தலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய விஷயம் மு.க.ஸ்டாலி னுடைய பிரச்சாரம். ஒவ்வொரு தொகுதியிலும், அந்தந்த பகுதிப் பிரச்சினைகள் குறித்து அவர் எடுத்து வைத்த வாதம், திமுக அரசு ஆற்றிய பணிகள் அனைத்தையும் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறியவிதம் பொதுமக்களிடம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது.
ஆளும் கட்சியினர் தேர்தலின் போது தாராள பண விநியோகம் செய்தனர்.
இதை தேர்தல் ஆணை யத்தால் தடுக்க முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் 144 தடை உத்தரவு ஆளும் கட்சியினர் தாராள மான பண விநியோகம் செய்வ தற்கு வசதியாகப் போய்விட்டது. பாஜக மதச்சார்புடைய கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பாஜக ஆட்சி அமைக்க திமுக ஒருபோதும் துணை போகாது. இவ்வாறு காதர்மொய்தீன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT