Published : 05 Apr 2014 12:00 AM
Last Updated : 05 Apr 2014 12:00 AM

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் 2-ம் கட்ட பிரச்சாரம்: சென்னையில் இன்று தொடங்குகிறார்

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், 2-ம் கட்ட பிரச்சாரத்தை சென்னையில் இன்று தொடங்குகிறார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ஏற்கெனவே பல்வேறு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய் தார். இதையடுத்து, அவர் தனது 2-ம் கட்டப் பிரச்சார பயணத்தை சென்னையில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறார். வரும் 22-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவரது சுற்றுப்பயண விவரம் வருமாறு:

5-ம் தேதி (இன்று) தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, 6-ம் தேதி காஞ்சிபுரம், 7 – திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, 8 - பெரம்பலூர், திருச்சி, 9 – பெரம்பலூர், தஞ்சாவூர், சிதம்பரம், 10 – தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், 11- மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், 12 – நாமக்கல், ஈரோடு, திருப்பூர், 13 – திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, 14 – விழுப்புரம், புதுச்சேரி.

ஏப்ரல் 15 – ராமநாதபுரம், தூத்துக்குடி, 16 – தூத்துக்குடி, 17 – கன்னியாகுமரி, திருநெல்வேலி, 18 – திருநெல்வேலி, தென்காசி, 19 – விருதுநகர், தென்காசி, மதுரை, 20 – திருவள்ளூர், 21 – அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, 22 – சென்னை.

இந்தத் தகவல்களை சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x